Published:Updated:

`நான் செட் ஆகமாட்டேன்... தோனி, ஜடேஜா, ராகுல் என் சாய்ஸ்!' - கோலியின் ப்ரோ கபடி டீம்

Karthikeyan KG

``கபடி விளையாடுவதற்கு அதிக பலமும், அத்லெட்டிக் திறமையும் வேண்டும். அதனால் எனது சாய்ஸ் இவர்கள்தான்" என்கிறார் இந்திய அணி கேப்டன் கோலி

Kohli
Kohli

ப்ரோ கபடியின் ஏழாவது சீசன் ஜூலை இருபதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் முடிந்தால் கபடி, கால்பந்து என பிற ப்ரீமியர் விளையாட்டுக்களில் இந்திய அணி வீரர்கள் பிஸியாகி விடுகிறார்கள். ``இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் வீரர்களை வைத்து, ஒரு கபடி அணியை உருவாக்க வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்? என்னும் கேள்வி கோலியிடம் எழுப்பப்பட்டது. அதில் தோனி, ஜடேஜா, பன்ட் உள்ளிட்டோரின் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறார்.

Dhoni
Dhoni

கபடி விளையாடுவதற்கு அதிக பலமும், அத்லெட்டிக் திறமையும் வேண்டும். அதனால், எனது அணியில் என்னைவிட இவர்களைத் தேர்வு செய்ய விரும்புகிறேன்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், கபடி விளையாடினால், உங்கள் சாய்ஸ் யார் ?

தோனி, ஜடேஜா, உமேஷ் யாதவ், ரிஷப் பன்ட், பும்ரா, கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் மிகவும் வலிமையான வீரர்கள். பன்ட்டும் வலிமையான வீரர். எனது கடைசி சாய்ஸ் கே.எல்.ராகுல். நான் என்னை இதில் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில் இவர்கள் என்னைவிட வலிமையான வீரர்கள். இதுதான் எனது ஏழு பேர் கொண்ட அணி.

ஆனால், கோலி சொன்ன அணியை எப்படி எண்ணினாலும் ஆறு பேர்தான் வருகிறது. ஒருவேளை தன்னையும் சேர்த்து ஏழு வீரர்கள் என்று சொல்லியிருப்பாரோ என்னும் கேள்வி எழுகிறது.

`அன்ஃபாலோ...அனுஷ்கா ஸ்டேட்டஸ்!' - உச்சகட்டத்தில் கோலி - ரோஹித் பனிப்போர்?

தனக்குப் பிடித்த கபடி வீரராக ராகுல் சௌத்ரியை தேர்வு செய்திருக்கிறார் கோலி. தமிழ் தலைவாஸ் அணிக்காக இந்த சீசனில் ஆடும் ராகுல் சௌத்ரி, அஜய் தாக்கூர் காம்போவைப் பார்க்கும்பொழுது தன்னையும், தோனியையும் பார்ப்பது போல் இருக்கிறது என்று சிலாகித்திருக்கிறார் கோலி.

தனது முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸை வென்ற தமிழ் தலைவாஸ், நாளை (ஜூலை 29) பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Virat Kohli
Virat Kohli
AP

இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருக்கிறது. அதற்காக புளோரிடா செல்லவிருக்கிறார் கோலி. இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது இந்தியா.