Published:Updated:

`கிரிக்கெட்டைக்காட்டிலும் இதற்காகத்தான் அதிகமாக உழைத்தேன்!’ - விராட் கோலி உடைக்கும் சீக்ரெட்

கலிலுல்லா.ச

` நான், அந்த ஃபார்முலாக்களை என் வாழ்நாளில் எப்போதும் பயன்படுத்தியதே இல்லை’.

VIrat kohli
VIrat kohli

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை சிறப்பாக எதிர்க்கொண்டு, அந்த அணியை வாஷ்அவுட் செய்து வெளியேற்றியது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, நேர்காணல் ஒன்றில் தனது பள்ளி அனுபவம் குறித்தும், கிரிக்கெட் குறித்தும் பேசியுள்ளார்.

VIrat kohli
VIrat kohli

அவரது பேச்சு வரைலாகிவருகிறது. ``பள்ளி நாள்களில், நமக்கு கணிதப்பாடம் இருக்கும். அதில், 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். அதில், வெறும் 3 மதிப்பெண்களை மட்டுமே எடுப்பேன். ஏன் பலரும் கணக்குப்பாடத்தைத் தேர்வுசெய்து படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் கணக்குப் பாடத்திலிருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. நான், அந்த ஃபார்முலாக்களை என் வாழ்நாளில் எப்போதும் பயன்படுத்தியதே இல்லை.

நான் 10-ம் வகுப்பு தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பினேன். காரணம், அது மாநில அளவில் நடக்கும் தேர்வு என்பதால். அதுமட்டுமில்லாமல், 10-ம் வகுப்புக்குப் பிறகு, நீங்கள் கணிதத்தைத் தொடர விரும்புகிறீர்களா? இல்லையா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளலாம். நான் ஒன்றை உங்களிடம் சொல்லவிரும்புகிறேன்; நான் கணிதப் பாடத்தில் தேர்வாக மேற்கொண்ட கடின உழைப்பை, கிரிக்கெட்டிலும்கூட நான் செய்யவில்லை.

VIrat kohli
VIrat kohli

2012-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் என்னுடைய உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்த விரும்பினேன்” என்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தைத் தொடர்ந்து, வரும் 15-ம் தேதி இந்திய தென்னிந்த அணிகள் மோத உள்ளன.