Published:Updated:

கோலி - அனுஷ்கா வீட்டில் குட்டி ராஜமாதா!

கோலி - அனுஷ்கா
கோலி - அனுஷ்கா

இன்று மதியம் கோலி - அனுஷ்கா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தில் அடியெடித்து வைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் கோலி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினருக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தியை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு லாக்டெளனின் துவக்கத்தில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிசெய்தனர் விராட் - அனுஷ்கா தம்பதியினர். அந்தப் புகைப்படம் இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் லைக் பெறப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிரசவ தேதி நெருங்கியதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் முடிந்ததும் இந்தியாவுக்கு வந்துவிட்டார் கோலி. இதுபலவித விமர்சனங்களையும் கிளப்பியது. நாட்டுக்காக விளையாடுவதே முக்கியம், பாதியில் செல்வது முறையல்ல என்ற கருத்தை பலர் முன்வைத்தனர். ஆனால், எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார் கோலி.

கோலி வெளியிட்டிருக்கும் செய்தி
கோலி வெளியிட்டிருக்கும் செய்தி

இந்நிலையில், இன்று மதியம் கோலி - அனுஷ்கா தம்பதியினருக்கு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது. தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தில் அடியெடித்து வைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் கோலி.

இன்றைய டெஸ்ட் போட்டியில், கடுமையான போராட்டத்தைச் சந்தித்து ஆட்டத்தை டிரா செய்தது இந்திய அணி. இந்த சந்தோஷத்தை கொண்டாடி முடிப்பதற்குள் விராட் கோலியின் இந்த செய்தி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு