Published:Updated:

உலக சாம்பியனை வீழ்த்தி சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகத்!

வினேஷ் போகத்
News
வினேஷ் போகத்

இதுவரை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் மட்டுமே தங்கம் வென்றுள்ள வினேஷ் போகத் தனது முதல் சர்வதேச தங்கப் பதக்கத்தை இந்தப் போட்டியின் மூலம் பெற்றுள்ளார்.

உக்ரைன் சிறந்த மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நினைவு மல்யுத்தப் போட்டியில் உலக சாம்பியன் வனேசா கலட்ஸின்ஸ்காயா - வை வீழ்த்தி தங்கம் வென்று இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சாதனை படைத்துள்ளார்.

உலக சாம்பியனுக்கு எதிரான இறுதிச்சுற்று வினேஷ் போகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. 53 கிலோ பிரிவில் மத யானைகள் மோதிக்கொள்வது போல இருவரும் ஒருவருக்கொருவர் பெரும் சவாலாக விளங்கினர். விறுவிறுப்பான இந்த இறுதிப்போட்டி பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்தியது.

ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி புள்ளிகளைப் பெற்ற போகத் தன் இடது கால் தாக்குதல் மூலம் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். அதன் பின் ஆட்டத்தைத் தொடங்கிய பெலருஸ் (Belarusia) வீராங்கனை வனேசா சிறப்பாக விளையாடி 4-4 எனச் சமன் செய்தார். பின்னர் மீண்டும் புள்ளிகளைப் பெற்ற வினேஷ் போகத் இடைவேளையில் 6-4 என முன்னிலையில் இருந்தார்.

Vinesh Phogat
Vinesh Phogat

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வனேசா மீண்டும் சிறப்பாக ஆடி 4 புள்ளிகளைப் பெற்றார். ஆனால் ஆட்டம் முடிவதற்கு 25 விநாடிகள் முன்னர் வனேசாவை வீழ்த்திய வினேஷ் மேலும் நான்கு புள்ளிகளைப் பெற்று 10-8 என ஆட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதுவரை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் மட்டுமே தங்கம் வென்றுள்ள வினேஷ் போகத் தனது முதல் சர்வதேச தங்கப் பதக்கத்தை இந்தப் போட்டியின் மூலம் பெற்றுள்ளார். இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்ட போதிலும் கொரோனா சூழ்நிலை காரணமாகக் கடந்த ஆண்டு எந்தப் போட்டியிலும் போகத் விளையாடவில்லை. கொரோனா பாதிப்பைக் கடந்து வந்த தனது முதல் போட்டியிலேயே முதலிடம் பெற்ற வினேஷ் போகத்தை விளையாட்டு ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.