Published:Updated:

`டாப் 4'க்கு போகப்போவ‌து யார்?‍- மல்லுக்கட்டும் தூத்துக்குடி- காரைக்குடி காளை #TNPL

கார்த்திகா ராஜேந்திரன்

லீக் சுற்று, விறுவிறுப்பான இரண்டாம் பாதியை எட்டியுள்ளது. காரைக்குடி, தூத்துக்குடி அணிகள் டாப் நான்கில் இடம்பெற, இனிவரும் போட்டிகளை வெல்வது அவசியம்.

Tuti patriots celebrate a wicket
Tuti patriots celebrate a wicket ( TNPL )

காரைக்குடி காளைக்கு எதிரான போட்டியில், கேப்டன் சுப்ரமணிய சிவாவின் 87* ரன்கள், சேஸிங்கில் நேர்த்தியான பெளலிங் கைகொடுக்க, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி போட்டியை வென்றது. டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட்டின் லீக் போட்டிகளில் இரண்டாம் பாதியை எட்டிய நிலையில், தூத்துக்குடிக்கு இந்த வெற்றி தேவையானது.

`டாப் 4'க்கு போகப்போவ‌து யார்?‍- மல்லுக்கட்டும் தூத்துக்குடி- காரைக்குடி காளை #TNPL

திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் தொடக்கத்திலேயே ஓப்பனர்கள் அக்‌ஷய் ஶ்ரீனிவாசன், கமலேஷ் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். ஒன் டவுன் களமிறங்கிய அபிஷேக், சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 38/3 என தடுமாறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.

10-வது ஓவரில் ஆறாவதாகக் களமிறங்கிய கேப்டன் சுப்ரமணிய சிவா, அதிரடியில் இறங்கினார். முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்திருந்த தூத்துக்குடி அணியினர், கடைசி 10 ஓவர்களில் 113 ரன்கள் சேர்த்தனர். 10 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 40 பந்துகளில் 87* ரன்கள் எடுத்த சுப்ரமணிய சிவா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 175 ரன்கள் எடுத்தது.

சுப்ரமணிய சிவா 87* (40) - 10 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்.

கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருந்த காரைக்குடி காளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஆனால், 175 ரன் இலக்கை சேஸ் செய்த காரைக்குடி பேட்ஸ்மேன்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். 100 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்திருந்த காரைக்குடி காளை அணிக்கு கடைசியில் இலக்கை எட்டுவது கடினமானது.

Tuti Bowler Venkatesh in action
Tuti Bowler Venkatesh in action
TNPL

தூத்துக்குடி அணி பெளலர்கள் தமிழ்க்குமரன், செந்தில்நாதன், வெங்கடேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில், காரைக்குடி காளை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை இழந்தது.

லீக் சுற்று, விறுவிறுப்பான இரண்டாம் பாதியை எட்டியுள்ளது. காரைக்குடியும் தூத்துக்குடியும் டாப் நான்கில் இடம்பெற இனி வரும் போட்டிகளை வெல்லவேண்டியது அவசியம்.