Election bannerElection banner
Published:Updated:

டூட்டி சந்த்தை முந்திய தமிழக வீராங்கனை தனலட்சுமி... தேசிய தடகளப் போட்டியில் சாதனை!

கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி
கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி

திருச்சியைச் சேர்ந்த 22 வயதான தனலட்சுமி, ஒடிசாவின் டூட்டீஐ விட (11.58) குறைந்த விநாடிகளில் ஓடி(11.39), என்.ஐ.எஸ் (NIS) வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது நாள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, அதிவேகப் பெண்மணி என்ற பெருமை பெற்றுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கப் சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில், தேசிய சாதனை படைத்த வீரர் டூட்டி சந்த்தை முந்தி, முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ்.தனலட்சுமி.

திருச்சியைச் சேர்ந்த 22 வயதான தனலட்சுமி, ஒடிசாவின் டூட்டியை விட (11.58) குறைந்த விநாடிகளில் (11.39) ஓடி என்ஐஎஸ் (NIS) வளாகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, `அதிவேகப் பெண்மணி' என்ற பெருமை பெற்றுள்ளார். மற்றொரு தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனையான அர்ச்சனா சுசீந்திரன் 11.76 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Athletics Competition
Athletics Competition
pixabay

ஒலிம்பிக் போட்டிக்குரிய தேர்வாகவும் இப்போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக்குக்கு தகுதிபெற 11.15 விநாடிகளுக்குள் ஓடி முடித்திருக்க வேண்டும். எனவே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டியில், அந்த வரையறை எட்டப்படவில்லை. எனவே, டூட்டியும் தனலட்சுமியும் ஒலிம்பிக் தகுதி வரையறைக்கு அருகில் வரவில்லை.

தனலட்சுமி திங்களன்று நடைபெற்ற முதற்கட்ட சுற்றில் 11.38 என்ற விநாடிகளுடன் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் நேரத்தில் எந்த முன்னேற்றத்தையும் அவர் செய்யவில்லை. திங்களன்று 11.51 விநாடிகள் எடுத்த டூட்டியின் நிலையும் இதேதான்.

ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் பஞ்சாபின் குரிந்தேர்வீர் சிங் 10.32 இலக்கை அடைந்து முதல் இடத்தப் பிடித்தார். தமிழ்நாட்டின் இலக்கியதாசன் (10.43) மற்றும் மகாராஷ்டிராவின் சதீஷ் கிருஷ்ணகுமார் (10.56) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். தேசிய சாதனை படைத்த ஒடிசாவின் அமியா குமார் மல்லிக் 10.75 விநாடிகள் நேரத்துடன் ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஆண்கள் 100 மீட்டர் போட்டியின் ஒலிம்பிக் தகுதி நேரம் 10.05 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி
கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி

``தனலட்சுமிக்கும் இலக்கியதாசனுக்கும் கடந்த ஒரு வருடமாக முழுநேரப் பயிற்சி அளிக்க நான் போட்டிகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டேன். எனது ஒரே குறிக்கோள், நான் செய்த தவறுகளை அவர்கள் மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்வதுதான். இப்போது பெற்றிருக்கும் வெற்றிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருக்கிறார் அவர்களின் கோச் ஆறுமுகம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு