Published:Updated:

Pro Kabaddi 2022: டேக்கிள் மட்டும் போதுமா? `Give it all' என்பது வார்த்தைகளில் மட்டும்தானா தலைவாஸ்?

தமிழ் தலைவாஸ் ( PK )

ஹரியானாவில் மஞ்சித் மட்டுமே ரெய்டின் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால், தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய போட்டியில் எடுத்திருந்த 22 புள்ளிகளில் வெறும் 7 புள்ளிகள் மட்டுமே ரெய்டின் மூலம் வந்திருந்தது.

Pro Kabaddi 2022: டேக்கிள் மட்டும் போதுமா? `Give it all' என்பது வார்த்தைகளில் மட்டும்தானா தலைவாஸ்?

ஹரியானாவில் மஞ்சித் மட்டுமே ரெய்டின் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால், தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய போட்டியில் எடுத்திருந்த 22 புள்ளிகளில் வெறும் 7 புள்ளிகள் மட்டுமே ரெய்டின் மூலம் வந்திருந்தது.

Published:Updated:
தமிழ் தலைவாஸ் ( PK )
புரோ கபடி சீசன் 9 இல் தமிழ் தலைவாஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸூக்கு எதிரான இந்தப் போட்டியில் 22-27 என தோற்றிருக்கிறது. தோல்வி என்பதை விட தமிழ் தலைவாஸ் அணி தோற்றவிதம் ரசிகர்களை இன்னும் அயர்ச்சியடைய செய்திருக்கிறது.
Pawan
Pawan
Tamil Thalaivas

கோடிகளையும் பெரும் நம்பிக்கையையும் முதலீடாக போட்டு அணிக்குள் அழைத்து வந்த பவன் ஷெராவத் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவருடைய காயம் எப்போது குணமடைந்து அணிக்கு எப்போது திரும்புவார் என்பதை பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஹரியானா ஸ்டீலர்ஸூக்கு எதிரான போட்டியில் பவன் ஷெராவத் இல்லாமலேயே தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. பவனுக்கு பதில் ரைட் கார்னர் டிஃபண்டர் சாஹர் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.

கடந்த ஆட்டத்தில் குஜராத்திற்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியை 'டை' ஆக்கியதால் இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிக்காக தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. வெற்றிக்கான துடிப்பும் சரியான திட்டமிடலும் இல்லாமலே தமிழ் தலைவாஸ் அணி தோற்றிருக்கிறது.

ஹரியானாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸூக்கு முதல் புள்ளியே ரெய்டு மூலம்தான் கிடைத்தது. ஹிமான்ஸூ ரெய்டராக சென்ற போது ஹரியானாவின் லெஃப்ட் கவர் வீரர் அட்வான்ஸ் டேக்கிளுக்கு முயல மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போயிருக்கும். இதனால் ஹிமான்ஸூ மிக எளிதாகவே பிடியிலிருந்து தப்பித்து சேவ் ஆகி ஒரு புள்ளியை வென்று கொடுத்திருந்தார். இதுதான் தமிழ் தலைவாஸ் எடுத்த முதல் புள்ளி.

இந்த ரெய்டு புள்ளியை தவிர்த்து வேறொரு ரெய்டு புள்ளியை குறிப்பிட வேண்டுமெனில், ஆட்டம் முடிகிற தருவாயில் தமிழ் தலைவாஸ் ஒரு Do or Die ரெய்டில் சிக்கியிருக்கும். அந்த சமயத்தில் சப்ஸ்டிடியூட்டாக வந்திருந்த தமிழக வீரர் விஸ்வந்த் ஒரு புள்ளியை பெற்றுக் கொடுத்திருந்தார்.

போட்டி முடிந்த பிறகு தமிழ் தலைவாஸின் ரெய்டு பெர்ஃபார்மென்ஸை பற்றி யோசித்து பார்த்தால் இந்த இரண்டு ரெய்டுகளும் மட்டுமே மனதில் நிற்கிறது. காரணம், ஒட்டுமொத்தமாகவே தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் கவனம் செலுத்தவே இல்லை.ஹரியானாவில் மஞ்சித் மட்டுமே ரெய்டின் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால்,

தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய போட்டியில் எடுத்திருந்த 22 புள்ளிகளில் வெறும் 7 புள்ளிகள் மட்டுமே ரெய்டின் மூலம் வந்திருந்தது. டேக்கிள்கள் மூலம் 13 புள்ளிகள் கிடைத்திருந்தது.
Tamil Thalaivas
Tamil Thalaivas
PK

பவன் ஷெராவத் தான் தமிழ் தலைவாஸின் மெயின் ஸ்ட்ரைக்கர். அவர் இல்லாதபோது அணி திணறத்தான் செய்யும். ரெய்டுகளில் சுணக்கம் இருக்கத்தான் செய்யும். இது எதிர்பார்த்ததுதான். ஆனால், அதற்காக இந்தளவு மோசமான பெர்ஃபார்மென்ஸை யாருமே எதிர்பார்க்கவில்லை. கடந்த போட்டியில் அறிமுக வீரரான நரேந்தர் கண்டேலா ரெய்டில் 'சூப்பர் 10' அடித்திருந்தார். ஹிமான்ஸூ ஓரளவுக்கு ஒத்துழைத்திருந்தார். பவன் ஷெராவத் இல்லாத சமயத்திலும் தமிழ் தலைவாஸ் சமாளித்திருந்தது. ஆனால், இங்கே ஹரியானாவிற்கு எதிராக மொத்தமாக சரணடைந்துவிட்டார்கள்.

சச்சின் கவர் ட்ரைவை ஆட்டத்திலிருந்தே நீக்கி விட்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் ஆடியிருப்பாரே, அதேமாதிரி தமிழ் தலைவாஸ் அணி இங்கே ரெய்டையே நீக்கிவிட்டு ஒரு ஆட்டம் ஆட முயன்றது. நரேந்தர் கண்டேலா, ஹிமான்ஸூ, அஜிங்கியா என எந்த ரெய்டரும் களத்திற்குள் ஒரு சிறப்பான ஸ்கில்லை வெளிப்படுத்தவே இல்லை. ஒரு டுப்கி, ஹைஃப்ளை, பேக் கிக் என ரெய்டில் எந்த ஸ்கில்லையும் வெளிக்காட்ட முயற்சிக்கவே இல்லை. எடுத்த 6 புள்ளிகளுமே கூட ஹரியானாவின் சுணக்கத்தால் கிடைத்த புள்ளிகளே.

அணியின் டிஃபன்ஸ் சிறப்பாகவே இருக்கிறது. ரைட் கார்னரில் சாஹரும் லெஃப்ட்டில் சாஹிலும் கவரில் அபிஷேக்கும் என சிறப்பாகவே டேக்கிள் செய்கிறார்கள். குறிப்பாக,

Tamil Thalaivas
Tamil Thalaivas
PK
நேற்றைய போட்டியில் சாஹர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். கடைசி சில நிமிடங்கள் இருக்கையில் சூப்பர் டேக்கிளுக்கான அவர் செய்த ஹோல்டுகள் எல்லாமே கச்சிதமாக அமைந்தது.

சாஹர்-சாஹில் இவர்களும் கொஞ்சம் சுணங்கியிருந்தால் தமிழ் தலைவாஸ் இன்னுமே மோசமான தோல்வியை எட்டியிருக்கும்.

ரெய்டும் ரெய்டை சார்ந்த தமிழ் தலைவாஸின் மனநிலையும்தான் நேற்றைய போட்டியில் பெரிய பிரச்சனையாக இருந்தது. கடைசி இரண்டரை நிமிடங்களில் 5 புள்ளிகள் முன்னிலையில் ஹரியானா இருந்தது. பாசிட்டிவ் அணுகுமுறையை கைக்கொண்டிருந்தால் இந்த இடத்திலிருந்து ஒரு டை க்காவது முயன்றிருக்க முடியும். ஆனால், தமிழ் தலைவாஸ் அதை செய்யவில்லை. ஆட்டம் முடிவதற்கு இரண்டரை நிமிடங்கள் இருக்கையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். ரெய்டில் டச் பாயிண்டுகள் எடுக்க முடியாவிட்டாலும் போனஸ் புள்ளிகளை எடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு கூட முயற்சிக்காமல் வேகவேகமாக வெற்று ரெய்டுகளை மட்டுமே செய்துவிட்டு திரும்பினர். பயிற்சியாளர் உதயகுமாருக்குமே இதுவே போதுமானதாக இருந்தது. ரெய்டுக்கு தீவிரமாக இறங்கி புள்ளிகளை இழப்பதை விட இதே 5 புள்ளிகள் வித்தியாசத்தை மெயிண்டெயின் செய்தால் கடைசியில் புள்ளிப்பட்டியலில் 1 புள்ளியாவது சேரும் என்பதே உதயகுமாரின் எண்ணமாக இருந்தது. (வெற்றியடையும் அணிக்கும் தோற்கும் அணிக்கும் இடையே புள்ளிகள் வித்தியாசம் 7 க்குள் இருக்கும்பட்சத்தில் தோற்கும் அணிக்கு இறுதியில் 1 புள்ளி கிடைக்கும்.)

தோல்வியை விட தமிழ் தலைவாஸ் தோற்ற விதமே ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.

Result
Result
PK
#GiveitallMachi என்பதுதான் தமிழ் தலைவாஸின் டேக்லைன். அது வார்த்தைகளில் மட்டும்தானா? களத்தில் இந்த 'GiveitallMachi' என்பதை எப்போது செயல்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.