Published:Updated:

`யூடியூப் பார்த்து யோகா கத்துக்கிட்டோம்!’ - சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற சகோதரிகள்

பதக்கங்கள் வென்ற சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா
News
பதக்கங்கள் வென்ற சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா

பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசனம் கற்றுக் கொண்ட சகோதரிகள் இருவர், இந்தோ-நேபாள யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Published:Updated:

`யூடியூப் பார்த்து யோகா கத்துக்கிட்டோம்!’ - சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற சகோதரிகள்

பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசனம் கற்றுக் கொண்ட சகோதரிகள் இருவர், இந்தோ-நேபாள யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்கள் வென்ற சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா
News
பதக்கங்கள் வென்ற சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதில் ஆச்சர்யமும் சிறப்பும் என்னவென்றால்,
பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசன பயிற்சி பெற்று, சாதித்துள்ளனர் இந்த சகோதரிகள்.

வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, வியப்புடன் அந்த சகோதரிகளிடம் பேசினோம். யோகாசனப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சத்தியப்பிரியா, "ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல வ.புதுப்பட்டி தான் எங்களோட ஊர். அப்பா பத்மநாபன்(54), அம்மா அருணா(45). என்னோட அக்கா விஷாலி, பி.ஏ. இங்கிலீஷ் முதலாமாண்டு படிக்கிறா. நான் 12-ம் வகுப்பு இப்போதுதான் முடித்துள்ளேன்.

போட்டியில் சத்தியப்பிரியா
போட்டியில் சத்தியப்பிரியா

சின்ன வயசுல இருந்தே யோகா மேல எங்க ரெண்டு பேருக்கும் அதிக ஆர்வம் உண்டு. நான் 10 வருஷமா யோகா பயிற்சி பண்ணிட்டு வர்றேன். மாநில அளவிலான போட்டி, மாவட்ட அளவிலான போட்டி, தேசிய அளவிலான போட்டி இப்படி நிறைய போட்டிகள்ல நானும், அக்காவும் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கிருக்கோம். மாநில அளவில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட போட்டிகள்ல கலந்துக்கிட்டு அத்தனையிலும் பதக்கம் வாங்கிருக்கிறேன். டிரையம்ப் மற்றும் நோபல் வேர்ல்டு ரிக்கார்டு புக்ல சாதனை படைச்சு மெடல் வாங்கிருக்கேன். அதுபோல கோவால நடந்த நேஷனல் போட்டியில கலந்துக்கிட்டு தங்கம் வாங்கிருக்கேன்.

இப்போ சமீபத்துல நேபாள நாட்டில் இந்தோ-நேபால் இன்டர்நேஷனல் யோகா போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் நானும், எங்க அக்காவும் கலந்துக்கிட்டோம். இந்த போட்டியில 17 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் பிரிவில் நடந்த யோகாசன போட்டியில நடராஜாசனம், பாகாசனம், ஓங்காராசனம், ஏக பாத சிரசாசனம் செஞ்சு தங்கப்பதக்கம் வாங்கிருக்கேன். அக்கா, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவுல கலந்துக்கிட்டு வெண்கலப் பதக்கம் வாங்கிருக்கா. இந்தியா சார்பா போட்டியில ஜெயிச்சு தங்கப்பதக்கம் வாங்குன அந்த நொடியை விவரிக்க வார்த்தையே வரல. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

சொந்த ஊரில் வரவேற்பு..
சொந்த ஊரில் வரவேற்பு..

இதுக்காக நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்கோம். பயிற்சியாளர் இல்லாம யூடியூப் பார்த்துதான் எல்லா ஆசனங்களையும் கத்துக்கிட்டோம். 1-ம் வகுப்பிலிருந்து 6-ம் வகுப்பு வரைக்கும் தனியார் ஸ்கூல்ல படிச்சேன். அதனால அங்க யோகாசனம் சொல்லித் தந்தாங்க. 6-ம் வகுப்புக்கு பிறகு எங்க வீட்டுல வசதி இல்லாததால அரசு உதவிபெறும் ஸ்கூலுக்கு மாறிப் போயிட்டேன். அந்த ஸ்கூல்ல யோகாசன பயிற்சிக்குனு தனியா காசு செலவு பண்ணி படிக்க வைக்கிறதுக்கு எங்க வீட்டுல வசதி இல்ல. அதனால யூடியூப் பார்த்து அம்மா தான் யோகாசனத்தை சொல்லி தருவாங்க. அவங்கள குருவா வெச்சுதான் நானும், எங்க அக்காவும் யோகா செய்வோம்.

11, 12 படிக்கும் போதுதான் நிறைய போட்டிகள்ல கலந்துக்க வாய்ப்பு வந்துச்சு. ஒரு சமயம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு திருவாரூருல நடந்த யோகாசன போட்டியில கலந்துக்க போயிருந்தேன். அந்த போட்டியில நல்லா யோகாசனம் செஞ்சி மெடல் வாங்கினேன். அப்போ எங்களோட யோகாசன ஆர்வத்தை பார்த்து கோயம்புத்தூரை சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர் எங்களுக்கு யோகாசனம் சொல்லி தர முன்வந்தார். ஆனா நாங்க, விருதுநகர் மாவட்டத்துல ஒரு கிராமத்துல இருக்கிறவங்க, எங்களுக்கு கோயம்புத்தூர்ல இருக்கிற பயிற்சியாளர் எப்படி யோகாசனம் சொல்லித் தர முடியும்னு யோசிச்சோம். அப்பத்தான் ஆன்லைன் மூலமா யோகாசனம் சொல்லி தர்றேன்னு ஐடியா குடுத்தாங்க. 'கூகுள் மீட் வீடியோ கால்' மூலமா நாங்க அவருகிட்ட யோகா கத்துக்கிட்டோம்’’ என்றார்.

போட்டியில் சத்தியப்பிரியா
போட்டியில் சத்தியப்பிரியா

விஷாலி பேசும்போது, ’’ஜூன் 3,4,5 ஆகிய 3 நாள்கள் நேபாள நாட்டில் இன்டர்நேஷனல் யோகா போட்டி நடக்குதுன்னு தெரியவந்தது. அதுக்குத் தயாராகுறதுக்காக நானும், எங்க அக்காவும் ரொம்ப கடுமையா பயிற்சி செஞ்சோம். போட்டியில கலந்துக்கிறதுக்காக இங்கிருந்து கோயம்புத்தூருக்கு பஸ்ல போனோம். அங்கிருந்து எங்க யோகாசன குழு 22 பேரோட ரயில்ல நேபாளத்துக்கு புறப்பட்டோம். இந்திய நாட்டோட எல்லை வரைக்கும் தான் ரயில் கனெக்டிவிட்டி இருந்துச்சு. அதுக்கப்புறம் அங்கிருந்து வேன் புடிச்சு நேபாளத்துக்கு போயி போட்டியில கலந்துக்கிட்டோம். இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு போன எங்க குழுவை சேர்ந்த 22 பேர்ல நாங்க ரெண்டு பேரு உள்பட 7 பேர் மட்டும் தான் பெண்கள். மற்ற எல்லாருமே ஆண்கள் தான். பொதுவா பல வீட்டிலேயும் ஆண்கள் கூட சேர்ந்து வெளியூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக பெண் பிள்ளைகளை அனுப்புறதுக்கு பெத்தவங்க யோசிப்பாங்க. ஆனா எங்க அப்பா-அம்மா எங்க கனவுக்கு முக்கியத்துவம் கொடுத்து யோகா குழுவை நம்பி போட்டிக்கு அனுப்பி வச்சாங்க.

யோகா குழுவைச் சேர்ந்தவர்களும் எங்களை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. கோயம்புத்தூர்ல இருந்து நேபாளம் போயி போட்டியில கலந்துக்கிட்டு திரும்பி வர்ற வரைக்கும் எங்களுக்கு தேவையான சாப்பாடு, தங்குமிடம் எல்லாத்தையும் நல்லமுறையில் அரேஞ்ச் பண்ணி கொடுத்தாங்க. அதுக்கு அவங்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டுருக்கோம்.

சொந்த ஊரில் வரவேற்பு..
சொந்த ஊரில் வரவேற்பு..

நேபாளத்தில் நடந்த அந்தப் போட்டியில் மட்டும் எங்க குழு 9 தங்கப்பதக்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் வாங்கிருக்கோம். போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தோட சொந்த ஊர் திரும்பிவந்தப்போ எங்க அப்பா, அம்மா சொந்தக்காரங்க எல்லாருமா சேர்ந்து நாங்க ரெண்டு பேரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்ப பெருசா வரவேற்பு கொடுத்தாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

இந்த மகிழ்ச்சிய எப்போதும் அவங்களுக்கு கொடுத்துகிட்டே இருக்கணும்னு எங்க ரெண்டு பேருக்கும் தீராத வேட்கை இருக்கு.
அதற்காக இன்னும் நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டு பதக்கங்களை வாங்குறதுக்கு ஆவலா காத்திருக்கோம். ஆனா, அதுக்கான உதவிகள் எங்களுக்கு கிடைச்சா நல்லாயிருக்கும். இதுவரையிலும் யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரல. இதுவரை நடந்த எல்லா போட்டிகளுக்கும் எங்களுடைய சொந்த பணத்தை செலவு செஞ்சுதான் கலந்துக்கிட்டு வெற்றி பெற்றிருக்கோம். ஊருக்குள்ள அப்பா-அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து சின்னதா ஓட்டல் நடத்துறாங்க. அதுல வர்ற வருமானம் தான் எங்க ரெண்டு பேருக்குமான செலவுக்கு பயன்படுது. சமீபத்துல நேபாளத்துக்கு போயிட்டு வர்றதுக்கு மட்டும் 60 ஆயிரம் ரூபா செலவாச்சு. இதற்கான முழு தொகையும் அம்மா -அப்பா எங்களுக்காக சேர்த்து வச்ச காசுல இருந்து தான் குடுத்தாங்க.

போட்டியில் சத்தியப்பிரியா
போட்டியில் சத்தியப்பிரியா

எங்களோட பயிற்சிகள் தொடரவும், இதர தேவைக்கும் அரசாங்கத்திலிருந்து உதவிகள் கிடைச்சா நல்லாயிருக்கும். அதனால அரசாங்கம் எங்களுக்கு உதவிகள் செய்யணும்னு கேட்டுக்குறேன். யோகாசன போட்டியில தமிழ்நாடு சார்பாகவும் இந்தியா சார்பாகவும் கலந்துக்கிட்டு நிறைய மெடல் வாங்கணும்னு ஆசை. யோகா போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கணும்னு ரொம்ப எதிர்பார்க்குறோம். யோகாவை ஒலிம்பிக்கில் சேர்த்தால் அதுல இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுப் பெண்ணா கலந்துக்கிட்டு பரிசு வாங்குறது தான் என்னோட லட்சியம்" என்றார் ஆர்வத்துடன்.