Published:Updated:

ஊக்கமருந்து விவகாரம்: தடகள வீராங்கனை தனலட்சுமி 3 ஆண்டுகள் இடைநீக்கம்; பறிக்கப்படும் விருதுகள்!

தனலட்சுமி

மே மாதம் துருக்கியில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமியைத் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (AIU) 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

ஊக்கமருந்து விவகாரம்: தடகள வீராங்கனை தனலட்சுமி 3 ஆண்டுகள் இடைநீக்கம்; பறிக்கப்படும் விருதுகள்!

மே மாதம் துருக்கியில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமியைத் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (AIU) 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

Published:Updated:
தனலட்சுமி
மே மாதம் துருக்கியில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமியைத் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (AIU) 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. 24 வயதான தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி இந்த ஆண்டு 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதிவேகமாக ஓடிய வீராங்கனை என்று கருதப்பட்டவர்.

ஆனால் சமீபத்தில் அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் என்ற ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது தனலட்சுமிக்கு 3 ஆண்டுகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தடையை விதித்துள்ளது தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு.

 தனலட்சுமி
தனலட்சுமி

இது போன்ற செயல்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தனலட்சுமி விதிமீறலை ஒப்புக்கொண்டுள்ளதால் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு அவருக்கு ஓர் ஆண்டு குறைத்து மூன்று ஆண்டுகளுக்கு அவரை இடைநீக்கம் செய்தியிருக்கிறது.

மேலும் மே 1, 2022 முதல் அவருக்குக் கிடைத்த பட்டங்கள், விருதுகள், பதக்கங்கள் மற்றும் ஜூன் மாதம் சென்னையில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் அவர் பெற்ற தங்கம் போன்றவை பறிக்கப்படும் என்றும் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (AIU) அறிவுறுத்தி உள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு தமிழ்நாடு டிரிபிள் ஜம்ப் (Triple Jump) வீரர் டொனால்ட் மகிமை ராஜ் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்து நான்கு ஆண்டுகள் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.