Published:Updated:

`வரலாற்றில் இது முதல்முறை..!'- 9 வீராங்கனைகளைப் பரிந்துரைத்த விளையாட்டுத்துறை #PadmaAwards

ஐஷ்வர்யா

இருவருடன் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட், பெண்கள் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மனிகா பத்ரா...

Sports Padma Awards
Sports Padma Awards

வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய பட்டியலை பத்ம விருதுகளுக்காக உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது இந்திய விளையாட்டுத்துறை. பட்டியலில், பத்ம விபூஷண் விருதுக்காக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதன்முறை. இவர் தவிர பாட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து பத்மபூஷண் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Sports Padma Awards
Sports Padma Awards

2017-ல் பத்ம விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இறுதிச் சுற்றில் இவர் பெயர் தேர்வாகவில்லை. கடந்த முறை வாய்ப்பு நழுவிய நிலையில், இந்த முறை இவரது பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

``கிரிக்கெட் விளையாடுவதைவிட வர்ணனை கடினம்!" - பிராட் ஹாக்

இந்த இருவருடன் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட், பெண்கள் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மனிகா பத்ரா, துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் சுமா ஷிரூர் மற்றும் மலையேற்ற இரட்டையர்கள் டஷி மற்றும் நுங்ஷி மாலிக் ஆகியோரின் பெயர்களும் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

harmanpreet kaur
harmanpreet kaur
Vikatan

இதில் தமிழக வீராங்கனைகள் பெயர்கள் இடம்பெறாதது ஒருபக்கம் வருத்தத்தை அளித்தாலும் மறுபக்கம் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த இந்திய விளையாட்டுத் துறையில் முழுக்க முழுக்க பெண்களுக்கான அங்கீகாரத்தை அளிக்கும் விருதுப் பட்டியல் ஒன்று பரிந்துரைக்கப்பட்டிருப்பது பெருமைகொள்ளத்தக்கது.