Published:Updated:

வேலியே பயிரை மேயும் சோகம்; கலங்கும் வீராங்கனைகள்; விளையாட்டுத் துறையை அதிரவைத்த பாலியல் புகார்கள்!

Sexual Harassment (Representational Image)

இந்த மூன்று சம்பவங்களுமே கடந்த ஜூன் மாதத்தில்தான் அரங்கேறியிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுத்ததால் மட்டுமே இப்படியான பிரச்னைகளெல்லாம் வெளியே தெரிய வந்திருக்கின்றன. ஆனால், இதுமட்டுமே போதுமா?

வேலியே பயிரை மேயும் சோகம்; கலங்கும் வீராங்கனைகள்; விளையாட்டுத் துறையை அதிரவைத்த பாலியல் புகார்கள்!

இந்த மூன்று சம்பவங்களுமே கடந்த ஜூன் மாதத்தில்தான் அரங்கேறியிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுத்ததால் மட்டுமே இப்படியான பிரச்னைகளெல்லாம் வெளியே தெரிய வந்திருக்கின்றன. ஆனால், இதுமட்டுமே போதுமா?

Published:Updated:
Sexual Harassment (Representational Image)

பயிற்சியாளர்கள் மீதான வீராங்கனைகளின் அடுத்தடுத்த புகார்களால் அதிர்ந்து போயிருக்கிறது இந்திய விளையாட்டுத் துறை. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 3 பெண் வீராங்கனைகள் தங்களின் பயிற்சியாளர்கள் மூலம் பாலியல் மற்றும் உளவியல் ரீதியான தொந்தரவுகளை அனுபவித்ததாக புகார் கூறியிருக்கின்றனர்.

மைதானங்களில் காலடி எடுத்து வைப்பதற்கு மட்டுமல்ல, புறச்சூழல்கள் சமூக அழுத்தங்களையெல்லாம் தாண்டி மைதானங்களுக்குள் வந்துவிட்ட பிறகுமே கூட பெண்கள் இங்கே ஒரு மிகப்பெரிய போராட்டத்தைத்தான் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இந்த அவலத்தை மீண்டும் ஒரு முறை எடுத்துரைப்பதாகத்தான் அமைந்திருக்கிறது சமீபத்திய புகார்கள்.
Cycling
Cycling
Photo by Flo Karr on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தயப் போட்டியாளர்கள் குழு ஒன்று ஸ்லோவேனியா நாட்டிற்கு ஒரு பயிற்சி முகாமிற்காகச் சென்றிருந்தது. மே 15 முதல் ஜூன் 14 வரை திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட குழுவில் 5 வீரர்கள் இருக்க, ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே இடம்பெற்றிருந்தார். இவர்களுக்கு உறுதுணையாக பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். அதில் ஒரு பெண் பயிற்சியாளரும் அடக்கம். பயிற்சி முகாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் அந்தப் பெண் பயிற்சியாளருக்கு எதோ காயம் ஏற்பட அவர் பாதியிலேயே நாடு திரும்பிவிட்டார். விசா செயல்பாடுகள் தாமதமானதால் மாற்றுப் பெண் பயிற்சியாளரை இந்தியாவிலிருந்து அனுப்ப முடியாத சூழல் உருவானது. இதன்பிறகுதான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது. பயிற்சி முகாமிலிருந்த அந்த ஒரே ஒரு வீராங்கனை இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு (SAI) ஒரு புகார் மனுவை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

அதில் `பயிற்சியாளரான ஆர்.கே.சர்மா என்னிடம் தகாத முறையில் நடக்க முற்படுகிறார்' என அந்த 22 வயதான இளம் வீராங்கனை பதற்றத்துடன் புகார் அளித்தார்.

இந்திய விளையாட்டு ஆணையம் உடனடியாக விசாரணையில் இறங்கியது. பிரச்னையின் உண்மைத் தன்மையை அறிய குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவரவே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஆர்.கே. சர்மா நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட வீராங்கனையும் மற்ற வீரர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாடு திரும்பிய பிறகு அந்த வீராங்கனை காவல்துறையிடம் இது தொடர்பாகப் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் இன்னும் அதிர்ச்சிகரமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பயிற்சியாளர் என்னை அவருடைய அறையில் தங்குமாறு கட்டாயப்படுத்தினார். அவருடைய இணையரை போல அவரிடம் நான் நடந்துக்கொள்ள வேண்டும் என நிர்பந்தித்தார். நான் மறுப்பு தெரிவித்த போது இந்த விளையாட்டிலிருந்தே உன்னை ஒதுக்கிவிடுவேன். பிறகு நீ தெரு ஓரமாகக் காய்கறி விற்கத்தான் செல்ல வேண்டும் என மிரட்டினார்.
பாதிக்கப்பட்ட வீராங்கனை
Sexual Harassment
Sexual Harassment

வீராங்கனையின் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் பலரையும் உலுக்கின. மேலும் சில வீரர் வீராங்கனைகளும் தாமாக முன் வந்து ஆர்.கே.சர்மாவிற்கு எதிராகப் புகார்களைத் தெரிவித்தனர். அதில் முக்கியமானவர் டிபோரா, சைக்கிள் பந்தயங்களில் பல போட்டிகளில் வென்றிருக்கும் இவர், "பயிற்சியாளர் ஆர்.கே.சர்மாவால் நான் உளவியல் ரீதியாக பெரும் அழுத்தத்திற்குள்ளானேன். என்னுடைய சக வீராங்கனைக்கும் எனக்கும் இடையிலான நெருங்கிய நட்பை தவறாகப் புரிந்துகொண்டு என்னை எல்லாவிதத்திலும் தனிமைப்படுத்தினார். இதுபோன்ற `Toxic' ஆன சூழலிலிருந்து கொண்டு போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட முடியாது" எனத் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை டிபோரா வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

சைக்கிள் பந்தய முகாமில் இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே படகு பந்தய முகாமிலிருந்து இன்னொரு புகார் கிளம்பியது. பயிற்சிக்காக படகோட்டும் வீரர் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்தியக் குழு ஒன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தக் குழுவின் பயிற்சியாளராக ஒலிம்பியனான ஃபரூக் செயல்பட்டு வருகிறார். இவரின் மீதுதான் ஒரு வீராங்கனை புகாரளித்திருக்கிறார்.

Sailing Ship
Sailing Ship
இந்தப் பயிற்சியாளர் என்னை அசௌகரியமாக உணர வைக்கிறார். உளவியல்ரீதியாக பெரும் அழுத்தம் கொடுக்கிறார்.
பாதிக்கப்பட்ட வீராங்கனை

என்பதே ஃபரூக் மீதான புகார். இதுவும் விசாரணைக்கு வந்தது. முதற்கட்ட விசாரணையில், இது பாலியல்ரீதியான புகார் எதுவும் கிடையாது. பயிற்சியாளர் மிகக் கடுமையாக நடந்துகொள்கிறார் என்பதுதான் பாதிக்கப்பட்டவரின் புகார் என்று தெரிய வந்திருக்கிறது. ஃபரூக்கின் கடுமையான குணாதிசயத்தைப் பற்றி இதற்கு முன்பே சில அதிருப்திகளும் எங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது என இந்திய விளையாட்டு ஆணையம் விளக்கம் கூறியிருக்கிறது.

இந்தச் சர்ச்சைகள் ஓய்வதற்குள்ளேயே 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய பெண்கள் கால்பந்து அணியிலிருந்து இன்னொரு புகார் கிளம்பியது. இந்த ஆண்டின் இறுதியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரத்யேக பயிற்சிகளுக்காக இந்தியப் பெண்கள் அணி நார்வேக்குச் சென்றிருக்கிறது. அங்குதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

இந்திய அணியின் வீராங்கனை ஒருவருக்கு துணை பயிற்சியாளரான அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. பிரதான பயிற்சியாளரான தாமஸ் டெனர்பிக்கு இந்தச் சம்பவம் தெரியவர, அவரே அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிடம் புகார் அளித்திருக்கிறார்.
Alex
Alex
AFFI

இதிலும் முதற்கட்ட விசாரணையில் அலெக்ஸ் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதால் அவர் துணை பயிற்சியாளர் பதவியிலிருந்து உடனே நீக்கப்பட்டிருக்கிறார். 18 வயதுக்குட்பட்டோருக்கான பெண் சம்பந்தப்பட்டிருப்பதால் அலெக்ஸ் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இந்த மூன்று சம்பவங்களுமே கடந்த ஜூன் மாதத்தில்தான் அரங்கேறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுத்ததால் மட்டுமே இப்படியான பிரச்னைகளெல்லாம் வெளியே தெரிய வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் புகாருக்குள்ளானவர்கள் மீது தக்க முதற்கட்ட விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுமட்டுமே போதுமா? பெண்களின் பாதுகாப்பு சார்ந்து விளையாட்டு ஆணையங்களுக்கு இருக்கும் அலட்சியம்தான் இதில் பெரும் வருத்தத்தைக் கொடுக்கிறது.

abuse
abuse
2011-20 இந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பற்றி மட்டும் 45 புகார்கள் பதிவாகியிருக்கின்றன. இதில், 29 புகார்கள் பயிற்சியாளர்களுக்கு எதிரானவை.

இவை மிரட்டல்களுக்குப் பணியாமல் துணிச்சலாக முன்வந்து கொடுக்கப்பட்ட புகார்கள் மட்டுமே. புகாராகப் பதிவாகாமல் போய் மறைக்கப்பட்ட சம்பவங்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கும். சைக்கிள் பந்தய வீராங்கனை சம்பவத்திலேயே கூட, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெயரை இந்திய சைக்கிள் பந்தயக் கூட்டமைப்பு தங்கள் அறிக்கையில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தது.

அஞ்சு பாபி ஜார்ஜ்
அஞ்சு பாபி ஜார்ஜ்
ஊடகங்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது. குழந்தைகளுக்குக் கூட இந்த மாதிரியான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது எனத் தெரியும். அப்படியிருக்கையில், ஒரு விளையாட்டுக் கூட்டமைப்பு அந்தத் தவற்றை எப்படிச் செய்தது என்பது புரியவே இல்லை.
அஞ்சு பாபி ஜார்ஜ்

தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் இவ்வாறாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். பாதிக்கப்பட்டவரின் ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படாது என்னும்பட்சத்தில் இனி யாரும் பாதிக்கப்பட்டால் புகார் கொடுப்பதற்கு எப்படி முன் வருவார்கள்? பல விளையாட்டு கூட்டமைப்புகளில் இதேபோன்ற புகார்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட வேண்டிய கமிட்டியே முறையாக இல்லை. இந்த சைக்கிள் பந்தயக் கூட்டமைப்பிலுமே கூட அப்படி ஒரு கமிட்டி இருந்திருக்கவில்லை.

இன்னமும் இந்திய பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை விளையாட்டை நோக்கி அனுப்ப தயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்படியான நிகழ்வுகள் தொடருமாயின், பிள்ளைகளை மைதானத்திற்கு அனுப்பவே மாட்டார்கள். விளையாட்டு ஆணையம்தான் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் பிரதான கவனம் செலுத்த வேண்டும்.
தீபிகா குமாரி
Deepika Kumari
Deepika Kumari

என வில்வித்தை வீராங்கனையான தீபா குமாரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்க, இந்திய விளையாட்டு ஆணையம் இப்போதுதான் 'விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ எங்கு பயணம் செய்தாலும் வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர்களும் கட்டாயம் செல்ல வேண்டும். மேலும், இதே மாதிரியான புகார்களை பெறுவதற்கே ஒரு தனிநபரை உடன் அழைத்து செல்ல வேண்டும். அவர் வீரர் வீராங்கனைகளுடன் எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும்' எனப் பெண்களின் பாதுகாப்புக்காக சில வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

சாய்னா நேவால், மேரி கோம், பி.வி சிந்து, சாக்ஸி மாலிக், மீராபாய் சானு, லவ்லினா எனக் கடந்த மூன்று ஒலிம்பிக்ஸ் தொடர்களில் பெண்களே இந்தியாவிற்குக் கணிசமான பதக்கங்களை வென்று கொடுத்திருக்கின்றனர். 130 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்று, நம்மைக் கொண்டாட வைத்திருக்கின்றனர். தேசத்தின் பெருமையை உலகளவில் தூக்கி நிறுத்தியிருக்கின்றனர்.

கடந்த ஜூன் 18 முதல் 22 வரை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில், சைக்கிள் பந்தயத்தில் மேலே குறிப்பிட்ட அந்தப் பாதிக்கப்பட்ட வீராங்கனையும் பங்கேற்றிருந்தார். அத்தனை புற அழுத்தத்திற்கும் மனரீதியான சோர்விற்கும் இடையே அந்தப் பந்தயத்தில் களமிறங்கிய அந்தப் பெண் 2 பதக்கங்களை வென்று ஆச்சர்யப்படுத்தினார். பயிற்சியாளர் மீது ஜூன் 3-ம் தேதி அந்த வீராங்கனை புகாரளித்ததாகத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் அவர் எவ்வளவு உடைந்து போயிருப்பார் என்பதை யோசித்தே பார்க்க முடியவில்லை. ஆனால், அதிலிருந்து அடுத்த 15வது நாளே சைக்கிளைத் தூக்கிக் கொண்டு பந்தயக் களத்திற்கு வந்துவிட்டார்.

A medal tray that will be used during the victory ceremonies at the Tokyo 2020 Olympic
A medal tray that will be used during the victory ceremonies at the Tokyo 2020 Olympic
இதுதான் பெண்களின் வலிமை. அவர்களுக்கு எதாவது கைம்மாறு செய்ய வேண்டுமெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொடுங்கள். இன்னும் நிறைய நிறைய பதக்கங்களை வென்று கொடுப்பார்கள்.