Published:Updated:

விளையாட்டு விருது 2019- அர்ஜுனா விருது பட்டியலில் ஜடேஜாவுக்கு இடம்!

கலிலுல்லா.ச

ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

jadeja
jadeja

ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டு வீரர்களுக்கான விருது பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களைப் பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு `அர்ஜுனா விருது’ வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீரரான ஸ்மிரிதி மந்தனா இந்த விருதைப் பெற்றார்.

sports award
sports award

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது பெற பரிந்துரைக்கும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜுனா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ ஏற்கெனவே வழங்கியது. அதில் ஷமி, பும்ரா, ஜடேஜா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பூணம் யாதவ் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்திய அணி சார்பில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் பெயரும், பெண்கள் கிரிக்கெட் அணி சார்பில் பூணம் யாதவும் உள்ளிட்ட 19 வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கபட்டுள்ளன.

அது மட்டுமின்றி ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது,துரோனாச்சாரியா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தயான்சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்க விருது, மௌலானா அப்துல் கலாம் அஜாத் கோப்பை உள்ளிட்ட விருதுகளைப் பெற தகுதியான வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

sports award
sports award

புனியா மற்றும் விக்ணேஷ் போகத் ஆகிய இந்திய வீரர்கள் பெயர்கள் மல்யுத்த பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளனர். நடந்துமுடிந்த உலக கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றாலும், ரன்கள் குவித்து அணிக்கு பக்கபலமாக இருந்தவர் ஜடேஜா.