Published:Updated:

நடால் என்னும் அசாத்திய மனிதர்!

ரஃபேல் நடால்
பிரீமியம் ஸ்டோரி
ரஃபேல் நடால்

ஆட்டத்தின் மூன்றாவது கேமின்போதே நடாலுக்கு வியர்வை ஊற்றி, களத்தை நனைக்கத் தொடங்கிவிட்டது. தன் முதல் புள்ளியையே சில டியூஸ்களுக்குப் பிறகுதான் வென்றிருந்தார்.

நடால் என்னும் அசாத்திய மனிதர்!

ஆட்டத்தின் மூன்றாவது கேமின்போதே நடாலுக்கு வியர்வை ஊற்றி, களத்தை நனைக்கத் தொடங்கிவிட்டது. தன் முதல் புள்ளியையே சில டியூஸ்களுக்குப் பிறகுதான் வென்றிருந்தார்.

Published:Updated:
ரஃபேல் நடால்
பிரீமியம் ஸ்டோரி
ரஃபேல் நடால்

டென்னிஸின் சிகரத்தில் பறந்துகொண்டிருந்த மூன்று கொடிகளில், ஒன்று மட்டும் இன்னும் உயரே பறக்கத் தொடங்கியிருக்கிறது. சிகரத்தின் மேலே ஏறி நின்று ஸ்பெயினின் கொடியைத் தனித்துப் பறக்கவிட்டிருக்கிறார் ரஃபேல் நடால். 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.

ரஷ்ய வீரர் டேமி மெத்வதேவை, ஐந்து செட்கள் சென்று, 5 மணி நேரம், 24 நிமிடங்கள் போராடி வென்றிருக்கிறார் ரஃபேல் நடால். என்னதான் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்தாலும் அவர்தான் இந்தப் போட்டியின் அண்டர்டாக். வல்லுநர்கள் அனைவரும் மெத்வதேவ் ஜெயிக்கவே வாய்ப்பு அதிகம் என்றனர். கம்ப்யூட்டர் ஆல்காரிதமும் 64 சதவிகிதம் அந்த ரஷ்ய வீரர் ஜெயிக்கவே வாய்ப்பிருப்பதாகச் சொன்னது. ஜோகோவிச் ஜூனியராக உருவெடுத்துக்கொண்டிருக்கும் மெத்வதேவை, ஐந்து செட்டுகள் ஆடியெல்லாம் வீழ்த்தவே முடியாது என்று ஆருடம் சொன்னார்கள். ஆனால், அந்த ஸ்பானியக் காளை அனைத்தையும் முட்டித் தள்ளியிருக்கிறது. தனக்கு முன் நம்பர்கள் எதுவும் பேச முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

நடால் என்னும் அசாத்திய மனிதர்!
நடால் என்னும் அசாத்திய மனிதர்!

ஆட்டத்தின் மூன்றாவது கேமின்போதே நடாலுக்கு வியர்வை ஊற்றி, களத்தை நனைக்கத் தொடங்கிவிட்டது. தன் முதல் புள்ளியையே சில டியூஸ்களுக்குப் பிறகுதான் வென்றிருந்தார். ஆரம்பம் முதலே அவ்வளவு உக்கிரம் காட்டினார் மெத்வதேவ். முதல் செட் 2-6 என கைநழுவியது. கையில் இருந்த இரண்டாவது செட்டையும் டை பிரேக்கரில் சென்று கோட்டை விட்டார். மூன்றாவது செட்டிலும், மெத்வதேவ் முன்னிலை பெறும் நிலைக்குச் சென்றுவிட்டார். போட்டியே முடிவை நோக்கிச் சென்றது. ஆனால், இந்தச் சூழ்நிலைகளில் எப்போது நடால் விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்தச் சூழ்நிலைகள்தானே அவரை உருவாக்கியது. இத்தனை காலம் செய்ததை மீண்டும் செய்தார். ஒரு மகத்தான கம்பேக்கை மெல்போர்னில் அரங்கேற்றி, வரலாறு படைத்துவிட்டார்.

அந்த இறுதிப் போட்டியில், நடால் செய்தது அசாத்தியமெனில், அதற்கு முன்பு நிகழ்ந்தவையும் அசாத்தியங்களே! இரண்டு மாதங்கள் முன்பு வரை நடால் இத்தொடரில் பங்கேற்பாரா என்று யாருக்கும் தெரியாது. ஆறு மாதம் முன்பு நடால் தொடர்ந்து விளையாடுவாரா என்றே யாருக்கும் தெரியாது. ஏன், அவருக்குமேகூடத் தெரியாது. அந்த உடலில் ஏற்பட்ட நூற்றுச் சொச்ச காயங்கள் போலத்தான் இதுவும். ஆனால், உடல் முன்பு போல் இல்லையே. வயது 35 ஆகிவிட்டது. இதற்கு மேல் அதைப் போட்டு வாட்ட முடியாது. அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ஓப்பன் அவருக்கு ராசியும் இல்லை. அதை அவர் வென்று 13 ஆண்டுகள் ஆகியிருந்தன. அப்படியிருக்கையில் நடால் மெல்போர்னில் தரையிறங்க மாட்டார் என்றே கருதப்பட்டது.

இந்த 19 ஆண்டுகளில் நடால் நிகழ்த்தியது இதுதான். எப்போதெல்லாம் காயத்தால் அவதிப்பட்டாரோ, எப்போதெல்லாம் திரும்ப வரமாட்டார் என்று பேசப்பட்டாரோ, எப்போதெல்லாம் ஃபேவரிட் இல்லை என்று எழுதப்பட்டாரோ, அப்போதெல்லாம் கம்பேக் கொடுத்திருக்கிறார். மிக மோசமான காயங்களால், கடுமையாக பாதிக்கப்பட்டாலும் மீண்டும் எழுந்து வந்திருக்கிறார்.

நடால் என்னும் அசாத்திய மனிதர்!
நடால் என்னும் அசாத்திய மனிதர்!

என்னதான் காயம், வயது, கம்பேக் என்று நாம் பேசினாலும், தான் கொடுக்கும் உழைப்பில் நடால் வித்தியாசம் காட்டியதேயில்லை. 19 வயதில் பிரெஞ்சு ஓப்பனில் எப்படி விளையாடினாரோ, அதுபோலத்தான் இப்போதும் ஆடுகிறார். அதே அளவுக்கான உழைப்பைத்தான் இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

காலிறுதிப் போட்டியின்போது மிகப்பெரிய முன்னிலையில் இருப்பார் நடால். முதல் செட்டை வென்று, இரண்டாவது செட்டில் இரண்டு முறை பிரேக் செய்திருப்பார். எல்லைக் கோட்டைத் தாண்டிக்கொண்டிருந்த பந்தை அடிக்கப் பாய்வார். அப்போது வர்ணனையாளர், “இப்படியொரு முன்னிலையில் இருக்கும்போது எந்த வீரரும் ஒவ்வொரு புள்ளிக்காகவும் இப்படி உழைக்கமாட்டார்கள். நடால் மட்டுமே அதைச் செய்வார்” என்றார். தன் ரசிகர்களுக்கு நடால் கொடுக்கும் பெருமிதம் அதுதான்.

நடால் என்னும் அசாத்திய மனிதர்!

21 பட்டங்கள், 22 பட்டங்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. 34, 35 என்ற வயதின் எண்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் உயிரைக் கொடுத்து ஓடவேண்டும். ஒவ்வொரு புள்ளிக்காகவும் உழைக்கவேண்டும். தான் என்றும் ஓய்வதில்லை என்பதை நிறுவிக்கொண்டே இருக்கவேண்டும். ஆஸ்திரேலியாவில் அதைச் செய்திருக்கிறார். அடுத்து, தன் கோட்டையான பிரெஞ்சு மண்ணிலும் அதைச் செய்வார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism