Published:Updated:

`நீங்கள்தான் அவனது ஹீரோ!' - ரசிகர்கள் கூட்டத்தில் அழுத சிறுவனைத் தேற்றிய ரஃபேல் நடால் #ViralVideo

இதைக்கண்ட ரஃபேல் நாடால், அந்தச் சிறுவனுக்கு அருகில் சென்று, சிறுவனைக் கையால் தூக்கி தனக்கு அருகில் நிறுத்திக்கொண்டார்.

Rafael Nadal
Rafael Nadal

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியைக் கடந்து விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 2 நாள்களுக்கு முன்பு நடந்த போட்டியில் தோல்வியைத்தழுவிய 21 வயதான ஜப்பானின் நவோமி ஒசாகா மைதானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

Vikatan
Naomi Osaka
Naomi Osaka

அப்போது, பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்த சிறுமி ஒருவர், ஒசாகாவின் தோல்வியால் அழத்தொடங்கினார். அப்போது அதைப்பார்த்த ஒசாகா ஒருநிமிடம் அந்தச் சிறுமிக்கு அருகில் சென்று கட்டியணைத்தார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில், `இதயங்களை வென்றுவிட்டார் நவோமி’ என்றெல்லாம் அவருக்கு பாராட்டுமழைகள் குவிந்தன. இது தொடர்பாக வீடியோவும் வைரலானது. அதேபோல மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.

3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடால் குறித்து ட்விட்டரில் அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். கொரியாவின் ஹையோன் சுங் உடன் ஆடிக்கொண்டிருந்தார் நாடால். மூன்றாவது சுற்றின்போது, திரண்டியிருந்த பார்வையாளர்கள் பகுதியில் கூட்டத்தின் நடுவே சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். இதைக்கண்ட ரஃபேல் நடால், அந்தச் சிறுவனுக்கு அருகில் சென்று, சிறுவனைக் கையால் தூக்கி தனக்கு அருகில் நிறுத்திக்கொண்டார்.

Vikatan
Rafael Nadal with child
Rafael Nadal with child

உடனே சுற்றியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்யத்தொடங்கியது. பிறகு அவரது கண்களைத்துடைத்து ஆறுதல் சொல்லியபடியே, சிறுவனைத் தேற்றினார். மைதானத்திலிருந்த மொத்தக் கூட்டமும், நடாலின் பக்கம் திரும்பியது. பிறகு சிறுவன் வைத்திருந்த தொப்பியில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில், `செம’ வைரலாகி வருகிறது.