Published:Updated:

பண்ணைவீடு, ஒரே அண்டர்டேக்கர்; மொத்த டீமும் அபேஸ்! - WWE ரெஸல்மேனியாவில் நடந்தது என்ன?

நாம் எதிர்பார்ப்பதைவிட பெரிதாய் செய்து நம்மை ஈர்ப்பது வேறு, நாம் எதிர்பார்க்காததை செய்து ஈர்ப்பது வேறு. இந்த ரெஸல்மேனியா, இரண்டாவது ரகம்! சீக்கிரமே, ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் மேட்ச்களைப் பார்க்க வெறித்தன வெயிட்டிங்..!

உலகமே கொரோனாவுடன் மல்யுத்தம் செய்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ரசிகர்களே இல்லாது நடந்து முடிந்திருக்கிறது WWE-ன் பெரும்விழாவான `ரெஸல்மேனியா'. ஆரம்பத்தில், `ஆளே இல்லாத கடையில, யாருக்குய்யா டீ ஆத்துறீங்க' என நொந்துகொண்ட ரசிகர்கள்கூட, போகப்போக `தம்டீ, கும்டீ, தம்டீ' எனக் குஷியானார்கள். அப்படி என்ன நடந்தது? அடிப்போம் ஒரு ரீவைண்ட்..!

ரெஸல்மேனியா
ரெஸல்மேனியா

ரசிகர்களின் பெரும் ஆராவரத்துக்கு மத்தியில், பிரமாண்ட மேடையில், ஒருநாள் முழுக்க நடந்தேறும் ரெஸல்மேனியா, இம்முறை இரண்டு இரவுகளாக நடத்தப்பட்டது. முதல் நாள் இரவு 8 மேட்ச்கள், இரண்டாவது நாள் இரவு 8 மேட்ச்கள் என மொத்தம் 16 மேட்ச்கள். அதில் முக்கியமான சில மேட்ச்களைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

தி கபூகி வாரியர்ஸ் VS அலெக்ஸா ப்ளிஸ் & நிக்கி கிராஸ் :

தி கபூகி வாரியர்ஸ் VS அலெக்ஸா ப்ளிஸ் & நிக்கி கிராஸ்
தி கபூகி வாரியர்ஸ் VS அலெக்ஸா ப்ளிஸ் & நிக்கி கிராஸ்

அரங்கில் ஆட்களே இல்லை என்பதை மறக்கடித்த அட்டகாச மேட்ச் இது. வீராங்கனைகளைத் தாண்டி கண்கள் வேறெங்கும் செல்லவே இல்லை. ஆட்டத்தில் நால்வரும் காட்டிய உக்கிரமும், இடையிடையே உதிர்த்த கடும் வார்த்தைகளும் தாறுமாறு தக்காளி சோறு ரகம். விறுவிறுப்பாக சென்ற மேட்சில், அலெக்ஸா - நிக்கி இணை சாம்பியன்ஷிப்பை வென்றார்கள். நிக்கி மற்றும் அலெக்ஸா ப்ளிஸ், இந்த எனர்ஜியை விட்றாதீங்க ப்ளீஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்டர்டேக்கர் VS ஏஜே ஸ்டைல்ஸ் :

அண்டர்டேக்கர் VS ஏஜே ஸ்டைல்ஸ்
அண்டர்டேக்கர் VS ஏஜே ஸ்டைல்ஸ்

`போன்யார்ட் மேட்ச்' என்ற பெயரில் ஏதோவொரு பண்ணை வீட்டில் நடந்தது மேட்ச். ஏஜே ஸ்டைல்ஸின், சவப்பெட்டி என்ட்ரியில் ஆரம்பித்த கூத்து, மேட்ச் முடியும்வரை நிற்கவே இல்லை. அண்டர்டேக்கரின் `அமெரிக்கன் பேடாஸ்' கிம்மிக்கும் கூடவே அந்தப் புல்லட்டும் என அண்டர்டேக்கர் ரசிகர்களுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது. பண்ணைவீடு, ஒத்தை ஆளு உங்க மொத்த டீமும் அபேஸ் என போட்டுப்பொளந்து, வெற்றிக்குறி காட்டினார் அண்டர்டேக்கர்.

ரியா ரிஃப்ளே VS கார்லெட் ஃப்ளேயர் :

ரியா ரிஃப்ளே VS கார்லெட் ஃப்ளேயர்
ரியா ரிஃப்ளே VS கார்லெட் ஃப்ளேயர்

என்.எக்ஸ்.டி பெண்கள் சாம்பியன்ஷிப்காக நடந்த இப்போட்டியில், சாம்பியன் ரியாவும் கார்லெட்டும் மோதினார்கள். சம வலிமைகொண்ட இந்த வீராங்கனைகளின் மோதல் இரண்டு ஏவுகனைகளின் மோதல் போல பார்வையாளர்களைப் பதறவைத்தது. இருவரும் அடித்துக்கொண்டதைப் பார்க்க, நமக்கு உடம்பு வலிக்காத குறை. ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவர் கை மேலோங்கி, பரபரப்பாக நகர்ந்துகொண்டிருந்த ஆட்டம், கார்லெட்டின் `ஃபிகர் 8 லாக்கோடு முடிவுக்கு வந்தது. கார்லெட் சாம்பியன்ஷிப்பை வென்றாலும், இருவரும் ரெஸ்லிங் விரும்பிகளின் மனதைக் கவர்ந்தார்கள்.

எட்ஜ் VS ரேண்டி ஆர்டன்:

எட்ஜ் VS ரேண்டி ஆர்டன்
எட்ஜ் VS ரேண்டி ஆர்டன்

ஒருகாலத்தில், `Rated RKO' என்ற பெயரில் நகமும் சதையுமாக இருந்தவர்கள், எட்ஜ் மற்றும் ரேண்டி ஆர்டன். நேற்று, நகமும் சதையும் கிழிய சண்டைப் போட்டுக்கொள்வதைப் பார்க்கவே பீதியாக இருந்தது. `லாஸ்ட் மேன் ஸ்டேன்டிங்' ஃபார்மட்டில் நடந்த இந்த மேட்ச், ரிங்கைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சுற்றிச் சுற்றி நடந்தது. கிட்டத்தட்ட, 25 நிமிடங்கள் இந்த மேட்ச் கொஞ்சம் போரடித்தாலும், இறுக்கமான ஒரு உணர்வைக் கொடுத்தது. சண்டையின் வழியே மொத்த, அரங்கத்தையும் அதன் அறைகளையும் சுற்றிக்காட்டியவர்கள், கடைசியில் ஒரு கன்டெயினர் மீது நின்று மேட்சை முடித்தார்கள். வென்றதும் வலியில் கண்ணீர் வடித்த எட்ஜ், ரேன்டி ஆர்டனைத் தழுவி வருந்தியது 90'ஸ் கிட்களின் கண்கள் வியர்க்கவைத்தது.

ஜான் சினா VS தி ஃபியன்ட் :

ஜான் சினா VS தி ஃபியன்ட்
ஜான் சினா VS தி ஃபியன்ட்

இது `ஃபயர்ஃப்ளை ஃபன் ஹவுஸ்' மேட்ச் என்றார்கள். ஆனால், இது மேட்சே அல்ல! எக்கச்சக்க நகைச்சுவையும், நாஸ்டாலஜி உணர்வும், குறும்பும் நிறைந்த குறும்படம். ஜான் சினாவின் மொத்த கரியரையும், ஃபியன்டின் மொத்த கரியரையும் ரீவைண்ட் செய்து, வைத்து செய்திருந்தனர். அதில் இருவரின் நடிப்பும், க்ரியேட்டின் டீமின் உழைப்பும் நாம் நினைத்திடாத ஒன்றை நடத்திமுடித்தது. வழக்கமான ஒரு மேட்சாக இது இல்லை, கடுமையான உழைப்பு என்றில்லை, கச்சிதமான அவுட்புட்டாக இல்லை. ஆனாலும், அதனுள் இருந்த ஒருவித `வியர்ட்னஸ்' அவ்வளவு ரசிக்க வைத்தது. ரெஸல்மேனியாவின் சிறப்பான செக்மன்ட்களில் ஒன்று!

ப்ராக் லெஸ்னர் VS ட்ரூவ் மெக் இன்டையர் :

ப்ராக் லெஸ்னர் VS ட்ரூவ் மெக் இன்டையர்
ப்ராக் லெஸ்னர் VS ட்ரூவ் மெக் இன்டையர்

WWE சாம்பியன்ஷிப்கான மேட்ச். `தி பீஸ்ட்' ப்ராக் லெஸ்னர் மற்றும் `தி நெக்ஸ்ட் பிக் திங்' ட்ரூவ் என இரு முரடர்கள் மோதிக்கொண்ட முரட்டு மேட்ச். மொத்த மேட்சிலும் வீரர்கள் போட்ட மூவ்களின் வகை மூன்றே மூன்றுதான். எஃப் 5, க்ளேமோர் கிக் மற்றும் ஜெர்மன் சூப்லக்ஸ். மாறிமாறி ஃபினிஷர்களை மட்டுமே போட்டுக்கொண்டிருந்த மேட்சில், கடைசியாக தன் கனவை வென்றெடுத்தார் ட்ரூவ் மெக் இன்டையர். இப்போது அவரைவிட, WWE ரசிகர்கள்தான் பெரும் மகிழ்ச்சி அடைந்திருபார்கள். ப்ராக் லெஸ்னரின் பார்ட் டைம் தொல்லை, இனி இல்லை!

ட்ரிபிள் த்ரெட் லேடர் மேட்ச் :

ட்ரிபிள் த்ரெட் லேடர் மேட்ச்
ட்ரிபிள் த்ரெட் லேடர் மேட்ச்

ஜான் மாரிஸன் (சாம்பியன்), கோஃபி கிங்ஸ்டன் மற்றும் ஜிம்மி உஸோ மூவரும் `டேக் டீம் சாம்பியன்ஷிப்'காக மோதிக்கொண்டார்கள். மாரிஸனின் டீம் மேட்டான மிஸ், குவாரன்டைனில் இருப்பதால் டீமுக்கு ஒருவராக சண்டையிட்டார்கள். சாதாரண மேட்சகளிலேயே மூவரின் கால்களும் தரையில் இருக்காது, அப்படியிருக்க லேடர் மேட்ச் என்றால் சொல்லவா வேண்டும். மேட்ச் என்ற பெயரில் குட்டி சர்கஸே நடத்திக்காட்டி, சர்பரைஸான க்ளைமாக்ஸோடு மேட்சை முடித்தார் ஜான் மாரிஸன்.

பெக்கி லின்ச் VS ஷாய்னா பாஸ்லர் :

பெக்கி லின்ச் VS ஷாய்னா பாஸ்லர்
பெக்கி லின்ச் VS ஷாய்னா பாஸ்லர்

`தி மேன்' பெக்கியும் (சாம்பியன் ) ஷாய்னாவும் வேற லெவல் மேட்ச் ஒன்றை அரங்கேற்றி, ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார்கள். அவர்களின் நீண்டகால பகையின் அடுத்தகட்ட நகர்வு இந்த மேட்ச். ரா விமன் சாம்பியன்ஷிப்காக நடந்த இப்போட்டியில் பெக்கியே ஜெயித்தாலும், இந்த பகைமையை சம்மர் ஸ்லாம் வரையிலும் நீட்டி, மக்கள் முன்னணியில் ஒரு முடிவு கட்டலாம். செமத்தியாக இருக்கும்!

இதுதவிர, மிகவும் எதிர்பார்க்கபட்ட கோல்டுபெர்க் மற்றும் ப்ரான் ஸ்ட்ரோமேன் மேட்சோ எரிச்சலைக் கிளப்பியது. ப்ரானிடம் சாம்பியன்ஷிப் கைமாறியது மகிழ்ச்சி என்றாலும், மேட்சை இன்னும் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கலாமோ எனத் தோன்றியது. செத் ராலின்ஸ் வெர்சஸ் கெவின் ஓவன்ஸ் மேட்ச், குறையொன்றுமின்றி, பரபரப்பாகவே நடந்துமுடிந்தது. சமி ஸாய்ன் வெர்சஸ் டேனியல் ப்ரயன் மேட்சும் அப்படியே! கெவின் ஓவன்ஸும், சமியின் வெற்றிக்கனியை ரசித்தார்கள்.

பண்ணைவீடு, ஒரே அண்டர்டேக்கர்; மொத்த டீமும் அபேஸ்! - WWE ரெஸல்மேனியாவில் நடந்தது என்ன?

ஓடிஸ் வெர்சஸ் டால்ஃப் ஸிக்லர், பாபி லாஸ்லே வெர்சஸ் அலைஸ்டர் ப்ளாக், ஸ்ட்ரீட் ப்ராஃபிட்ஸ் வெர்சஸ் ஏஞ்சல் கர்ஸா & ஆஸ்டின் தியரி, எல்யாஸ் வெர்சஸ் கிங் கார்பின் என மற்ற மேட்ச்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. மொத்தத்தில், நாம் எதிர்பார்ப்பதைவிட பெரிதாய் செய்து நம்மை ஈர்ப்பது வேறு, நாம் எதிர்பார்க்காததை செய்து ஈர்ப்பது வேறு. இந்த ரெஸல்மேனியா, இரண்டாவது ரகம்! சீக்கிரமே, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மேட்ச்களைப் பார்க்க வெறித்தன வெயிட்டிங்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு