Published:Updated:

Pro Kabaddi : பவன் இன்னும் வரவில்லை; நம்பிக்கையே இல்லாமல் ஆடித் தோற்கும் தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas ( Pro Kabaddi )

நரேந்தர் கண்டேலா சூப்பர் 10 எடுத்தாலும் அதில் 8 புள்ளிகள் போனஸாக மட்டுமே கிடைத்திருந்தது.

Pro Kabaddi : பவன் இன்னும் வரவில்லை; நம்பிக்கையே இல்லாமல் ஆடித் தோற்கும் தமிழ் தலைவாஸ்!

நரேந்தர் கண்டேலா சூப்பர் 10 எடுத்தாலும் அதில் 8 புள்ளிகள் போனஸாக மட்டுமே கிடைத்திருந்தது.

Published:Updated:
Tamil Thalaivas ( Pro Kabaddi )

புரோ கபடி ஒன்பதாவது சீசனில் தமிழ் தலைவாஸ் தனது ஐந்தாவது போட்டியில் பெங்களூர் புல்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

பாட்னா பைரேட்சுக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பெற்ற நம்பிக்கையோடு பெங்களூர் புல்ஸ்க்கு எதிராக தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. இந்தப் போட்டியில் 45 - 28 என மோசமாக தமிழ் தலைவாஸ் அணி தோற்றிருக்கிறது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தையே தமிழ் தலைவாஸ் வெளிப்படுத்தியது . ரெய்டர்கள் ,டிஃபன்ட்டர்கள் என அணியின் மொத்த வீரர்களுமே நம்பிக்கை இல்லாதது போலவே காட்சியளித்தனர்.
Narendar
Narendar
Pro Kabaddi

காயம் காரணமாக பவன் இந்த ஆட்டத்திலும் களமிறங்கவில்லை. சாகர் தலைமையில் களமிறங்கிய தலைவாஸ், அருமையான கிக் (kick) மூலம் நரேந்தர் கண்டோலா முதல் புள்ளியை பெற்றுக் கொடுத்தார் நரேந்தர் கண்டோலா இந்த போட்டியிலும் சூப்பர் 10 எடுத்திருந்தார். ஆனால், டச் புள்ளிகளை அதிகமாக எடுக்காமல் போனஸ் புள்ளிகளை மட்டுமே அதிகமாகப் பெற்றார். தமிழ் தலைவாஸ் தனது முதல் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹிமானஷு சிங் starting 7-ல் களமிறக்கப் பட்டார் . கடந்த போட்டியில் ரெய்டில் பிடிப்படாமல் சூப்பர் 10 எடுத்த நிலையில், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிக் கொடுக்கவில்லை டிபண்டர்கள் படுமோசமாக ஆடிக்கொண்டிருந்தனர் . அட்வான்ஸ் டேக்கிள்களால் பெங்களூர் புல்ஸ்க்கு புள்ளிகளைக் கொடுத்தனர். முதல் எட்டு நிமிடங்களிலேயே ஆல் ஆட்டை சந்தித்தது தமிழ் தலைவாஸ். பெங்களூரு புல்ஸ் வேகமாக புள்ளிகளை பெற்றுக் கொண்டிருந்தது. முதல் பாதி முடிவில் 18 -12 என பெரிய முன்னிலையில் இருந்தது பெங்களூர் புல்ஸ் . இரண்டாவது பாதியில் பெங்களூர் புல்ஸ் அதிரடி காட்டியது. பெங்களூர் புல்ஸ் ஆணியின் பரத் சூப்பர் 10 எடுக்க விகாஸ் போன்றோர் ரெய்டில் அதிரடி காட்டினார்கள். இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தியது பெங்களூர் புல்ஸ். இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணியால் கொடுக்க முடியவில்லை.

குறிப்பாக ரோகித்துக்கு மாற்று வீரராக களம் இறங்கிய ஆசீஸ் மூலம் சூப்பர் டேக்கில் எடுத்தனர். மற்றபடி தமிழ் தலைவாஸ் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. மீண்டும் ஆட்டத்திற்குள் தமிழ் தலைவாஸ் அணியால் வரவே முடியவில்லை. கடைசி ஐந்து நிமிடங்களில் 34 -25 என வெற்றியை நோக்கி ஆடிக் கொண்டிருந்தது பெங்களூர் புல்ஸ். மீண்டும் ஒரு முறை ஆல் அவுட் ஆனது தமிழ் தலைவாஸ். இறுதியில் 45 -28 என்ற கணக்கில் பெங்களூர் புல்ஸ் தமிழ் தலைவாஸை தோற்கடித்தது.

நரேந்தர் கண்டேலா சூப்பர் 10 எடுத்தாலும் அதில் 8 புள்ளிகள் போனஸாக மட்டுமே வந்திருந்தது. தேவையான நேரங்களில் டச் புள்ளிகள் நிகழ்த்தினால் மட்டுமே ஆட்டத்தின் மொமண்டம்(momentum) கிடைக்கும். இந்த ஆட்டத்தில் அவர் மேல் பிரஷர் அதிகமாகவே காணப்பட்டது
Tamil Thalaiva
Tamil Thalaiva
Pro Kabaddi

அதேபோல கடந்த போட்டியில் சூப்பர் 10 எடுத்து பார்மில் இருந்த ஹிமான்ஷு சிங் பெரிதாக ரெய்டுகள் நிகழ்த்தவில்லை. நரேந்தர் கண்டோலா, ஹிமான்ஷி சிங் ஆகியோர் அதிகமான எம்ட்டி ரெய்டுகள் கொடுத்தனர் . வழக்கம்போல் டிபன்ஸ் படும் மோசமாக இருந்தது . அட்வான்ஸ் டேக்கிள், அனுபவம் இல்லாமல் டேக்கில் நடந்த காட்சிகளை காண முடிந்தது . ஒரு டிபண்டர் கூட சிறப்பாக ஆடவில்லை. அடுத்து ,தோல்விக்கு முக்கிய காரணம் அதிகமான எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் (extra points)கொடுத்தது. லாபி லைன் தொட்டது .செல்ப் ஆவுட் (self out)ஆனது என ஏழு எக்ஸ்ட்ரா புள்ளிகளை கொடுத்தனர். நல்ல பொசிஷனில் இருக்கும் போது டிஃபரண்டர்களின் அட்வான்ஸ் டேக்கிள் மூலம் சொதப்புகிறார்கள். தமிழ் தலைவாஸ் அணியில் ஒரு அனுபவமுள்ள வீரர் அணியை வழி நடத்துவது அவசியம்.

Tamil Thalaivas
Tamil Thalaivas
Pro Kabaddi
பவன் இல்லாதது தமிழ் தலைவாஸ்க்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. தவறுகளைக் களைந்து ஒரு அணியாக அனைத்து வீரர்களும் நம்பிக்கையோடு களமிறங்கினால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகள் பெறலாம்.