Published:Updated:

`உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு' - சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த நீரஜ்!

Neeraj Chopra ( SAI / G Rajaraman )

முதல்கட்ட சொதப்பல்களுக்குப் பிறகு நீரஜ் மெதுமெதுவாக முன்னேற தொடங்கினார். மூன்றாவது வாய்ப்பில் 86.37 மீ க்கு ஈட்டியை வீசினார். இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியே வந்தது.

`உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு' - சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த நீரஜ்!

முதல்கட்ட சொதப்பல்களுக்குப் பிறகு நீரஜ் மெதுமெதுவாக முன்னேற தொடங்கினார். மூன்றாவது வாய்ப்பில் 86.37 மீ க்கு ஈட்டியை வீசினார். இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியே வந்தது.

Published:Updated:
Neeraj Chopra ( SAI / G Rajaraman )
இந்திய தேசத்திற்கு மீண்டுமொரு மிகப்பெரிய பெருமிதத்தை தேடித்தந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 88.13 மீட்டருக்கு ஈட்டியை வீசி வெள்ளி வென்றிருக்கிறார். அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் ஒருவர் மீண்டும் பதக்கம் வென்றிருக்கிறார். நீரஜ் எப்படி இதை சாதித்தார்?
Neeraj Chopra
Neeraj Chopra
IIS

ஆண்டர்சன் பீட்டர்ஸ், வால்டேச், வீபர் என கடுமையாக போட்டியளிக்கக்கூடிய வீரர்களுடன் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் ரோஹித் யாதவும் இந்த இறுதிப்போட்டியில் பங்கேறிருந்தனர். நீரஜ் சோப்ரா மீதுதான் அதிக நம்பிக்கை இருந்தது. ஒலிம்பிக்ஸை போன்றே இங்கேயும் ஒரு தங்கத்தை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நீரஜூமே அந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சமீபமாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்த இறுதிப்போட்டிக்கு முன்பான தகுதிச்சுற்றில் கூட முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டருக்கு ஈட்டியை வீசி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தார்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் நீரஜ் சோப்ரா ஈட்டியை கையிலேந்தினார். எதிர்பார்ப்புகள் கொடுத்த அழுத்தமோ என்னவோ நீரஜ் சோப்ராவுக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Neeraj Chopra
Neeraj Chopra
Sony
முதல் வாய்ப்பிலேயே Foul ஆனார். இரண்டாவது வாய்ப்பில் 82.37 மீட்டருக்கு மட்டுமே வீசினார். இதுவே பேரதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில், மற்ற வீரர்களை விட நீரஜ் தான் வீசும் முதல் இரண்டு வீச்சுகளில் ரொம்பவே கவனமாக இருப்பார். ஒலிம்பிஸிலிருந்து சமீபத்தில் முடிந்த தொடர்கள் வரைக்குமே நீரஜின் சிறந்த செயல்பாடுகளெல்லாம் முதல் இரண்டு வீச்சுகளுக்குள்ளேயே வந்திருக்கிறது. இங்கே முதல் வாய்ப்பிலேயே Foul எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. இந்த போட்டிக்கு முன்பு வரை இந்த சீசனில் நீரஜின் குறைந்தபட்ச செயல்பாடே 84.37 மீட்டர்தான். இங்கே இரண்டாவது வாய்ப்பில் 83 மீ க்கும் கீழே போனார். இவையெல்லாம் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. முதல் 3 வாய்ப்புகளுக்குள் டாப் 8 இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே அடுத்த 3 வாய்ப்புகளை பெற முடியும். இல்லையேல் முதல் 3 வாய்ப்புகளோடு வெளியேற வேண்டியதுதான். இதுவேறு டென்ஷனை கூட்டியது. போட்டியை இன்னும் பரபரப்பாக்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Neeraj
Neeraj
SAI

ஆனால், அந்த முதல்கட்ட சொதப்பல்களுக்குப் பிறகு நீரஜ் மெதுமெதுவாக முன்னேற தொடங்கினார். மூன்றாவது வாய்ப்பில் 86.37 மீ க்கு ஈட்டியை வீசினார். இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியே வந்தது. அவரது சீரான இயல்பான 86 மீட்டரை தொட்டதன் மூலம் நேராக நான்காவது இடத்துக்கும் முன்னேறினார்.

நான்காவது வாய்ப்பில் வழக்கமான Beast mode க்கு நீரஜ் திரும்பினார். ஒரு மாபெரும் வீச்சை சாத்தியப்படுத்தினார். ஈட்டி 88.13 மீட்டரை எட்டியது. மிகச்சிறப்பான வீச்சு. வால்டேச், ஜூலியான் வீபர் ஆகியோரெல்லாம் தாண்டி இரண்டாவது இடத்திற்கு நீரஜ் முன்னேறினார்.

முதலிடத்தில் நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் இருந்தார். முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே 90 மீ க்கு மேலே வீசி ஆச்சர்யப்படுத்தினார். இந்த சீசனில் இதற்கு முன்பு மொத்தம் 3 முறை பீட்டர்ஸ் 90 மீ க்கு மேல் வீசியிருந்தார். ஆனால், மொத்தமுள்ள 6 வாய்ப்புகளிலேயே மூன்று முறை 90 மீ க்கு மேல் வீசி யாரும் எட்டமுடியாத இடத்தில் அமர்ந்தார். நீரஜின் கரியர் பெஸ்ட்டே 89.94 மீட்டர்தான். ஆயினும், கடைசி இரண்டு வாய்ப்புகளில் கூடுதலாக முயன்று 90 மீட்டரை தாண்டி தங்கம் அடித்துவிடுவாரா எனும் ஆவலும் உதித்தது. ஆனால், அது சாத்தியப்படவில்லை. கடைசி இரண்டு வாய்ப்புகளிலும் நீரஜ் மீண்டும் மீண்டும் Foul ஆனார்.

ஆயினும், அந்த 88.13 மீ வீச்சு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்து கொடுத்தது.
Neeraj Chopra
Neeraj Chopra
AP

2003 இல் பாரீஸில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றிருந்தார். அதன்பிறகு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்தியர் ஒருவர் இந்தத் தொடரில் மீண்டும் பதக்கம் வெல்கிறார். ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்று சாம்பியன்ஷிப்பிலும் பதக்கம் வெல்லும் முதல் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவே. வாழ்த்துகள் நீரஜ்!

உன்னைப் பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு!