Published:Updated:

தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர்: கோவில்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தொடக்கம்!

Junior Hockey Nationals
News
Junior Hockey Nationals

தமிழக அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்றிருக்கிறாள். தங்கள் ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழக அணிக்காகப் பங்கேற்பதால், பொதுமக்களிடையே இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நேற்று தொடங்கின. இத்தொடரை ஹாக்கி இந்தியா அமைப்பு நடத்துகிறது. வரும் 25-ந்தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 30 மாநிலங்களைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன.

இந்தத் தொடருக்கான தமிழக அணி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 20 நாள்களாக பயிற்சி முகாம் சென்னை எழும்பூர் சர்வதேச ஹாக்கி விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றனர். இந்த அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்றிருக்கிறாள். தங்கள் ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழக அணிக்காகப் பங்கேற்பதால், பொதுமக்களிடையே இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நேற்று நடந்த தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கனிமொழி தலைமை வகித்தார். ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்ற வீரரையும் அவர் குடும்பத்தாரையும் கனிமொழி எம்.பி கௌரவித்தார்.

Hockey in Kovilpatti
Hockey in Kovilpatti

பங்கேற்றிருக்கும் அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு குரூப்பிலும் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தகுதிபெறும்.