Published:Updated:

நரேன் கார்த்திகேயன் - காரோடு பறந்த கோவைத் தமிழன்! | Happy Birthday Narain Karthikeyan

Narain Karthikeyan
News
Narain Karthikeyan

2007-ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற கிமி ராய்கோனனுக்கு அடுத்த 2 ஆண்டுகள் கழித்து ஃபார்முலா 1 களத்தில் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு உலக சாம்பியனுக்கு இந்த நிலைமையெனில், மற்றவர்களின் நிலை? ஆனால், நரேன் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார்!

ஃபார்முலா ஒன் அரங்கில் அவர் என்ன செய்தார், என்ன சாதித்தார் என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன், ஃபார்முலா ஒன் அரங்கைப் பற்றிப் புரிந்துகொள்வது முக்கியம். இது மற்ற ஸ்போர்ட்களைப் போல் இல்லை. திறமை இருந்தால் மட்டும் போதாது. திறமையை நிரூபித்தால் மட்டும் போதாது. அப்போது என்னதான் வேண்டும்? பணமும் வேண்டும். இதில் பங்கேற்றால், ஜெயித்தால் பணம் கிடைக்கும்தான். ஆனால், ஒரு அணியில் வாய்ப்பைப் பெறுவதற்கும் பணம் தேவை. திறமையோடு சேர்ந்து எந்த டிரைவர் பெத்த ஸ்பான்சரையும் கொண்டு வருகிறாரோ அவருக்கே வாய்ப்பு கிடைக்கும். அடுத்த ஆண்டு பெரிய ஸ்பான்சரோடு ஒருவர் வந்தால், அதுவும் மாறிவிடும். அணியின் ஓனர்களின் மகன்கள் ரேஸிங்கில் இருந்தால், அந்த சீட் அவர்களுக்கும் போய்விடும். இந்த nepotism எல்லாம் இங்கும் உண்டு. போதாக்குறைக்கு அணியில் ரிசர்வ் டிரைவர்கள், டெஸ்ட் டிரைவர்கள் என்று பேக் அப் டிரைவர்களும் இருப்பார்கள். அதனால், ஒருசில ரேஸர்கள் தவிர்த்து பெரும்பாலான டிரைவர்களுக்கு புளியைக் கரைப்பது போலத்தான் இருக்கும்.

2007-ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற கிமி ராய்கோனனுக்கு அடுத்த 2 ஆண்டுகள் கழித்து ஃபார்முலா 1 களத்தில் வாய்ப்பே கிடைக்கவில்லை. 2 ஆண்டுகள் அதில் பங்கேற்காமல் இருந்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். ஒரு உலக சாம்பியனுக்கு இந்த நிலைமையெனில், மற்றவர்களின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். ஃபார்முலா 1 - கொஞ்சம்கூட ஈவு இறக்கம் காட்டாத களம். அது நரேனையும் விட்டுவைக்கவில்லை.

அவர் கரியரில் என்ன நடந்தது? மேலே உள்ள வீடியோவில்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz