Published:Updated:

ராஸி, லொரென்ஸோ, மார்க்கஸ் வரிசையில்… ஃபேபியோ!

ஃபேபியோ க்வார்ட்டராரோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபேபியோ க்வார்ட்டராரோ

ரேஸ்: மோட்டோ ஜிபி

ராஸி, லொரென்ஸோ, மார்க்கஸ் வரிசையில்… ஃபேபியோ!

ரேஸ்: மோட்டோ ஜிபி

Published:Updated:
ஃபேபியோ க்வார்ட்டராரோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபேபியோ க்வார்ட்டராரோ

- ஃபரித்கான்

ஃபேபியோ க்வார்ட்டராரோ (Fabio Quartararo) - சமீபகாலமாக MOTO GP-ல் தவிர்க்க முடியாத நபராகிவிட்டார். ஒட்டுமொத்த மோட்டோ ஜிபி ரசிகர்களையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். உலக சாம்பியனான மார்க் மார்க்கஸ்-க்கு ட்ராக்கில், புள்ளிகளில் டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறார் என்றால், சாதாரணமா? அது மட்டுமில்லை; மார்க்கஸின் ரெக்கார்டுகளையும் பிரேக் செய்திருக்கிறார் ஃபேபியோ.
ராஸி, லொரென்ஸோ, மார்க்கஸ் வரிசையில்… ஃபேபியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் இந்த ஃபேபியோ?

1999-ல் ஃபிரான்ஸில் பிறந்த இவர், தன்னுடைய நான்கு வயதிலே மோட்டார் சைக்கிள் பயிற்சியைத் தொடங்கினார். பிறகு ஃபேபியோ, தன்னுடைய பைக் ரேசிங் கரியருக்காக ஸ்பெயினுக்குக் குடி பெயர்ந்தார். ஒன்பது வயதில் 50cc சாம்பியன்ஷிப், பத்து வயதில் 70cc மற்றும் 12 வயதில் 80cc சாம்பியன்ஷிப் என்று சாம்பியன்ஷிப் சாதனை அப்போதே ஆரம்பித்துவிட்டது. 14-வது வயதில் Youngest Series Champion என்ற ரெக்கார்டையும் படைத்தார் ஃபேபியோ.

மோட்டோ 3

2014-ம் ஆண்டுதான், ஃபேபியோ மோட்டோ 3-ல் அடியெடுத்து வைத்தார். அந்த வருடம் டெக்ஸாஸில் நடந்த கிராண்ட் ஃபிரிக்ஸ்ல் முதன் முறையாக போடியம் ஏறினார். அப்போது ஒரு விபத்து. தொடர்ந்து பங்கேற்க முடியாவில்லை! ஆனாலும், அந்த ஆண்டின் இறுதியில் 92 புள்ளிகளுடன் மோட்டோ 3 உலக சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் 10-வது இடம் ஃபேபியோவுக்கு.

மோட்டோ 2

2017-ம் ஆண்டு மோட்டோ 2-வில் Pons Racing Team-ல் இடம் பெற்றார். 64 புள்ளிகளுடன் மோட்டோ 2 உலக சாம்பியன்ஷிப்பில் 13-வது இடம். அடுத்த ஆண்டு Speed Up Racing Team-ல் இடம் பெற்றார். அப்பொழுது நடைபெற்ற Catalunya Grand Prix-ல் தன்னுடைய முதல் MOTO 2 வெற்றியைப் பதிவு செய்தார்.

மோட்டோ ஜிபி

2019-ம் ஆண்டு Petronas Yamaha Srt Moto Gp Team-ல் இடம் பெற்றார். அந்த ஆண்டில் Qatar Grand Prix-ல், 5வது இடத்திற்குத் தகுதி பெற்றார். ரேஸின் துவக்கத்தில் பைக்கில் ஏற்பட்ட கோளாறு காரணத்தினால், தன்னுடைய முதல் MOTO GP ரேஸை Pit Lane-ல் இருந்து துவக்க நேர்ந்தது. அந்த ரேஸை 16-வது இடத்தில் முடித்தார்.

அதன் பிறகு ஸ்பெயின் மோட்டோ ஜிபி சுற்றுதான், முதல் திருப்புமுனை. அந்தத் தகுதிச் சுற்றில் ஃபேபியோ, Pole Position- க்குத் தேர்வானார். Pole Position என்பது ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்குவது. சனிக்கிழமை நடக்கும் தகுதிச் சுற்றுதான் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ரேஸில் யார் யார் எந்த Grid Position-ல் இருந்து ரேஸைத் துவக்குவார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. இதுதான் மார்க்கஸின் ரெக்கார்டை பிரேக் செய்த முதல் தருணம்.

இதைப்போலவே மார்க் மார்க்கஸை வீழ்த்தி, தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்வாரா என அனைவரும் ஆவலு டன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஃபேபியோ முதலிடத்திலிருந்து ரேஸைத் துவக்கினார். ரேஸின் 14-வது லேப்பில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது. Leading Group-ல் இருந்த ஃபேபியோ, சட்டென ரேஸிங் லைனில் இருந்து விலகி, ட்ராக்கின் பக்கவாட்டிற்கு நகர்ந்தார். அனைத்து பைக்குகளும் ஃபேபியோவை முந்திச் சென்றன. ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு நொடிப் பொழுதில் அனைத்தையும் மாற்றியது.

ரேஸின் பாதியிலேயே ஃபேபியோ, Pit Box-க்குத் திரும்பினார். ஃபேபியோவின் முதல் மோட்டோ ஜிபி வெற்றிக் கனவு தகர்ந்தது. மிகுந்த ஏமாற்றம் அடைந்த ஃபேபியோவால் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மீண்டும் ரெடியானார் ஃபேபியோ. 2019 Catalunya Grand Prix-ல் மீண்டும் போல் பொசிஷனுக்குத் தேர்வானார். இந்த ரேஸில் ஃபேபியோ, மார்க் மார்க்கஸ்க்குப் பின்பு 2-வது இடத்தில் நிறைவு செய்தார். மார்க்கஸின் ரெக்கார்டை முறியடித்த அடுத்த தருணம் இது. இளம் வயதில் இந்த வேகம், வேறு யாரும் தொடாதது. இத்தனைக்கும் வலது கையில் அறுவைச் சிகிச்சை வேறு!

அடுத்து, இத்தாலி Misano-வில் நடைபெற்ற ரேஸில் மீண்டும் மார்க்கஸ் உடன் மோதி, 2–ம் இடம். பின்பு தாய்லாந்தில் நடைபெற்ற சுற்றில், கடைசி லேப் வரை போராடி, நூலிழையில் (+0.171) வெற்றியைத் தவறவிட்டார். அதிரடி பெர்ஃபா மென்ஸால் 2019-ம் ஆண்டின் Rookie of the year பட்டம் ஃபேபியோவுக்குக் கிடைத்தது.

ஃபேபியோ க்வார்ட்டராரோ
ஃபேபியோ க்வார்ட்டராரோ

2019-ல் ஆறுமுறை Pole Position, 7 போடியம் என 192 புள்ளிகளுடன் உலக சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடம் இருந்தார் ஃபேபியோ.

கொரோனாவால் 2020 மோட்டோ ஜிபி சற்று தாமாதமாகவே துவங்கியது. எப்பொழுதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் ரேஸ் ட்ராக்கில், இந்த முறை ஒரு ரசிகர்கூட இல்லாமல் சற்று வித்தியாசமாகவே நடைபெற்றது.

முதல் சுற்று Jerez, Spain-ல் நடைபெற்றது. ஃபேபியோ, அந்தப் போட்டியில் தனது முதல் மோட்டோ ஜிபி வெற்றியைப் பதிவு செய்தார். அதே சர்க்யூட்டில் நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும், தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தார். முதல் சுற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக, மார்க் மார்க்கஸால் அதற்கடுத்த சுற்றுகளில் பங்கேற்க முடியவில்லை. அப்புறமென்ன, அதன் பின்பு Catalunya விலும் ஃபேபியோ முதலிடம்தான்.

இப்போது கூகுளில் மோட்டோ ஜிபி சாம்பியன் என்று டைப் செய்தால், ஃபேபியோதான் சிரிக்கிறார். ஆம்! 2020 மோட்டோ ஜிபி-ல் 115 புள்ளிகளுடன் உலக சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் (அக்டோபர் 18-ல் நடந்த Aragon GP வரை) இருப்பது ஃபேபியோதான்.

``மார்க்கஸ் இல்லாததால்தான் ஃபேபியோ புள்ளிகளில் முதலிடத்தில் இருக்கிறாரா?” என்று வழக்கம்போல் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. “அடுத்தடுத்த போட்டிகளில் இதற்கான பதில் தெரியும்” என்று அடக்கமாகக் கூறுகிறார் ஃபேபியோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism