Published:Updated:

ஃபிஷ்ஷர் செஸ்... மகுடம் சூடுவாரா மேக்னஸ் கார்ல்ஸன்?!

2018 செஸ் சாம்பியன்ஷிப்பின் 12-வது போட்டியின் முடிவில், கருவாணாவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், கார்ல்ஸன் போட்டியை டிரா செய்தார். கடைசி நொடி வரை கிடைக்கும் சிறிய வாய்ப்புகளையும், யுக்தியுடன் பயன்படுத்தி போட்டியில் வெற்றி பெறும் கார்ல்ஸன் ஏன் அப்படிச் செய்தார்?

கார்ல்ஸன்
கார்ல்ஸன்

தனது மகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லைப் பதிக்கக் காத்திருக்கிறார் நடப்பு செஸ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன். சதுரங்கத்தின் புதிய பரிணாமமான ஃபிஷ்ஷர் செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோவுடன் மோதிக்கொண்டிருக்கிறார் கார்ல்ஸன்.

Magnus Carlsen
Magnus Carlsen

ஃபிஷ்ஷர் செஸ்... முதல் தரவரிசையில் உள்ள செஸ் காயின்களை ரேண்டம் ஆர்டரில் கலைத்து வித்தியாசமான ஓப்பனிங் முறையில் ஆடுவது. கிளாசிக் செஸ் போட்டிகளைப்போல் முதல்தரவரிசை காயின்கள் இல்லாமல் இருப்பது ஒன்றே இதில் வேறுபடும். மற்றபடி விதிமுறைகள் அனைத்தும் ஃபிஷ்ஷர் செஸ்ஸிலும் ஒன்றுதான். இந்த வித்தியாசமான ஆட்டத்தை கிராண்ட் மாஸ்டர் பாபி ஃபிஷ்ஷர் கண்டுபிடித்தார்.

அமெரிக்கவைச் சேர்ந்த இவர், 1972 முதல் 1975 வரை உலக சாம்பியனாக இருந்தவர். எவர் ஒருவர் அதிக நேரம் செலவழித்து கிளாசிக் செஸ் பேட்டன்களை (pattern) தெரிந்துகொள்கிறாரோ, மனப்பாடம் செய்கிறாரோ அவரால் எளிதில் வெல்லும்படியாக இருந்தது, கிளாசிக் செஸ். இதை மாற்ற நினைத்த ஃபிஷ்ஷர் அறிமுகப்படுத்தியதுதான் பிற்காலத்தில் ஃபிஷ்ஷர் ரேண்டம் செஸ் என்றானது.

Bobby Fischer
Bobby Fischer

1996-ல் ஃபிஷ்ஷர் ரேண்டம் செஸ் அதிகாரபூர்வமாக அர்ஜென்டினாவில் அறிவிக்கப்பட்டது. இதை செஸ் 960 என்றும் அழைப்பர். 960 வித்தியாசமான ஓப்பனிங் பொசிஷன்கள் இதற்கு உண்டு என்பதால் அப்படி அழைத்தார்கள். ஃபிஷ்ஷரின் ஆசை‌, மனப்பாடம் செய்வதைவிட திறமைக்கும், புதியதாக வேரியேஷன் கண்டறிபவர்களுக்குமான விளையாட்டாக செஸ் இருக்க வேண்டும் என்பதுதான்.

2019-ம் ஆண்டுக்கான நான்-டைட்டில், ஓப்பன் டைட்டில், நாக் அவுட் தகுதிச் சுற்றுகள் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் ஆன்லைனில் நடைபெறும். அரையிறுதி, இறுதிச்சுற்று நார்வேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஃபேபியா கருவாணா, மேக்னஸ் கார்ல்ஸன் இடையேயான அரையிறுதி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது.

Fabiano Caruana - Magnus Carlsen
Fabiano Caruana - Magnus Carlsen

2018 செஸ் சாம்பியன்ஷிப்பின் 12-வது போட்டியின் முடிவில், கருவாணாவைப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், கார்ல்ஸன் போட்டியை டிரா செய்தார். கடைசி நொடி வரை கிடைக்கும் சிறிய வாய்ப்புகளையும், யுக்தியுடன் பயன்படுத்தி போட்டியில் வெற்றிபெறும் கார்ல்ஸனுக்கு, டிரா செய்ய அறவே பிடிக்காது. ஆனால், சாம்பியன்ஷிப்பின் முக்கியப் போட்டியில் கார்ல்ஸன் டிரா செய்ததை செஸ் நிபுணர்கள் விமர்சனம் செய்தனர். ``வெற்றி பெற வேண்டிய போட்டியை கார்ல்ஸன் டிரா செய்தது அதிர்ச்சியளிக்கிறது” என்று செஸ் ஜாம்பவான் கேரி கேஸ்பரோவ் வருத்தம் தெரிவித்தார்.

கார்ல்ஸன் காலம் முடிவுக்கு வந்தது என்று எல்லோரும் நினைக்கையில், டை பிரேக்கரில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார் கார்ல்ஸன். இம்முறை அதே கருவாணாதான். ஆனால், ஃபிஷ்ஷர் ரேண்டம் செஸ். அறிமுகப்படுத்திய ஃபிஷ்ஷர் அமெரிக்கர். கருவாணா அமெரிக்கர். இந்த சாம்பியன்ஷிப்பை கருவாணா வென்றால், அமெரிக்காவின் புகழை அந்நாட்டு ஊடகங்கள் எழுதியிருக்கும். ஆனால், கார்ல்ஸன் சாதாரணமானவர் அல்ல. `மொசார்ட் ஆஃப் செஸ்'. தன்னம்பிக்கைக்கு உதாரணம் என்றே அவரைச் சொல்லலாம்.

Magnus Carlsen
Magnus Carlsen

``கடந்த ஆண்டு உங்களின் ஃபேவரைட் செஸ் ப்ளேயர் யார்?'' என்ற கேள்விக்கு யோசிக்காமல் கார்ல்ஸன் இப்படிச் சொன்னார். ``நான்தான். ஆனால், மூன்று நான்கு ஆண்டுக்கு முன்‌ இருந்த கார்ல்ஸன்தான் என் ஃபேவரைட்'' என்றார். இப்படி இருக்கையில் அரையிறுதியில் டை - பிரேக்கருக்கேச் செல்லாமல் 12.5 - 7.5 என கருவாணாவை வீழ்த்தினார் கார்ல்ஸன். முதல் ஸ்லோ ரேபிட் ஆட்டத்தில் கருவாணா வெற்றி பெற அடுத்த இரண்டு ஆட்டங்களில் கார்ல்ஸன் வெற்றி பெற்றார். நான்காவது ஸ்லோ ரேபிட் டிராவில் முடிந்தது.

``கருவாணா தோற்றாலும் நான் இருக்கிறேன், நானும் அமெரிக்காதான்'' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற வெஸ்லி ஸோ. இயன் நோபோமியான்சியை 13-5 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வென்றார் அவர். இன்று கார்ல்ஸன் - ஸோ சாம்பியன்ஷிப்புக்காக மோதுகின்றனர். கருவாணா-இயன் மூன்றாம் இடத்துக்கு மோதுகின்றனர்

Wesley So
Wesley So

கேம் டைம் கன்ட்ரோல்:

முதல் நாள் இரண்டு ஸ்லோ ரேபிட், 45 நிமிடங்கள் (முதல் 40 நகர்விற்கு) + 15 நிமிடங்கள் (40 நகர்விற்குப் பிறகு).
முதல் நாள் இரண்டு ஸ்லோ ரேபிட், 45 நிமிடங்கள் (முதல் 40 நகர்விற்கு) + 15 நிமிடங்கள் (40 நகர்விற்குப் பிறகு).
மூன்றாவது நாள் நான்கு ஃபாரஸ்ட் ரேபிட் (15 நிமிடங்கள்+2 செகண்டு இன்க்ரிமென்ட்), நான்கு பிலிட்ஸ் (3 நிமிடங்கள்+ 2 செகண்டு இன்க்ரிமென்ட்)

இறுதியாக டிரா ஆனால் டை பிரேக்கர். ஆர்மகேடன் (5/4- வெள்ளை /கறுப்பு) கறுப்பு காயின்கள் உடையவர்கள் டிரா‌ செய்தால் போதும். ஆனால், வெள்ளை காயின்கள் உடையவர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் கறுப்பு காயின் உடையவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.முதல் பரிசு $ 125000, இரண்டாம் பரிசு $ 75000, மூன்றாவது பரிசு $ 5000, நான்காம் பரிசு $ 4000

Vikatan
ஸ்லோ ரேபிட் கேம்- 3 புள்ளிகள் (டிரா என்றால் 1.5 புள்ளிகள்)
ஃபாஸ்ட் ரேபிட் கேம்-2 புள்ளிகள்
பிலிட்ஸ் கேம் -1 புள்ளி
முதல் பரிசு $ 125000, இரண்டாம் பரிசு $ 75000, மூன்றாவது பரிசு $ 5000, நான்காம் பரிசு $ 4000

மகுடம் சூடுவாரா கார்ல்ஸன்!