Published:Updated:

Lewis Hamilton - காரில் பறக்கும் சாம்பியன்; சமுதாயத்துக்குக் குரல் கொடுக்கும் ரேஸிங் கடவுள்!

Lewis Hamilton ( AP )

முகமது அலியை அவர் குத்துச்சண்டைக்காக மட்டும் எல்லோரும் விரும்புவதில்லை. மனிதர்களுக்காக, மனிதர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். அவரைப் போலத்தான் லூயிஸும். கார்பரேட்களின் அரசியல் வேறு லெவலில் இருக்கும் ஃபார்முலா ஒன்னில் இவரைப் போல் யாரும் ஓப்பனாக பேசியிருக்கமாட்டார்கள்!

Lewis Hamilton - காரில் பறக்கும் சாம்பியன்; சமுதாயத்துக்குக் குரல் கொடுக்கும் ரேஸிங் கடவுள்!

முகமது அலியை அவர் குத்துச்சண்டைக்காக மட்டும் எல்லோரும் விரும்புவதில்லை. மனிதர்களுக்காக, மனிதர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். அவரைப் போலத்தான் லூயிஸும். கார்பரேட்களின் அரசியல் வேறு லெவலில் இருக்கும் ஃபார்முலா ஒன்னில் இவரைப் போல் யாரும் ஓப்பனாக பேசியிருக்கமாட்டார்கள்!

Published:Updated:
Lewis Hamilton ( AP )

லூயிஸ் ஹாமில்டன் - ஃபார்முலா ஒன் டிராக்கின் இன்றைய கடவுள். கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் மகத்தான சாம்பியன். யாராலும் தொட முடியாது என்று கருதப்பட்ட ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்து ஏழு முறை உலக சாம்பியன் ஆனவர். ஷூமேக்கரால் செய்ய முடியாத சாதனைகள் பலவற்றையும் கூடச் செய்தவர். F1 அரங்கில் Greatest of All Time யார் என்ற வாக்கெடுப்பு நடத்தினால், ஷுமேக்கரை முந்தினாலும் முந்தி விடுவார். ஆனால், அதனால் மட்டும் இவர் ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. டிராக்கில் இவர் கார் மட்டும் ஓட்டியதில்லை. சமூகத்துக்குத் தேவையான போது தன் குரலையும் உயர்த்திய உண்மையான சாம்பியன் இவர்!

ரேஸ் டிரைவர் என்பதற்கும் அப்பால் ஹாமில்டனை ஏன் உலகம் கொண்டாடுகிறது? இதோ இந்த வீடியோவில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் முறையாக ஃபார்முலா 1 அரங்குக்குள் அறிமுகம் ஆகும் வீரர்களை ரூக்கி என்பார்கள். அவர்கள் மீது எக்கச்சக்க அழுத்தம் இருக்கும். நிரூபித்தால் மட்டுமே அடுத்த ஆண்டு தொடர முடியும். ஏன், அந்த ஆண்டே கூட அவர் வெளியேற்றப்படலாம். அதுவும் மெக்லரன் போன்ற ஒரு மிகப்பெரிய அணிக்கு அறிமுகமாகிறார் லூயிஸ். கொஞ்ச நஞ்ச நெருக்கடி அல்ல. சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. புள்ளிகள் பெறவேண்டும். முதல் சீசனிலேயே போடியம் ஏறவேண்டும். இல்லையேல் அவ்வளவுதான். விமர்சனங்கள் துளைத்து எடுத்துவிடும். கரியரே கேள்விக்குறியாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேல் ஹாமில்டன் ஒரு black driver. ஃபார்முலா அரங்கின் முதல் black driver. விமர்சனங்கள் பற்றி சொல்லவேண்டுமா என்ன? அவர் தோல்வி, அவருடையதாக மட்டும் பார்க்கப்படாது. இத்தனை நெருக்கடிக்கு மத்தியில் அவரோடு களத்தில் இருந்தவர்களைப் பார்த்தால் இன்னும் தலை சுற்றும். கிமி ராய்கோனன, ஃபெர்னாண்டோ அலோன்சோ, ஃபிளிப் மாஸா என சாம்பியன்களாக நிறைந்திருந்தனர். ஆனால், இவை எதுவுமே ஹாமில்டனை பாதிக்கவில்லை.

Lewis Hamilton
Lewis Hamilton
AP

தன் முதல் ரேஸிலேயே போடியம் ஏறி அனைவரையும் பிரமிக்கவைத்தார். தன் ஆறாவது ரேஸிலேயே வெற்றி. ஏழாவது ரேஸிலும் வெற்றி. தன் முதல் 9 ஃபார்முலா ஒன் ரேஸ்களிலும் போடியம் ஏறி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப்பார்க்கவைத்தார் இந்த ரூக்கி. 15 ரேஸ்கள் முடிந்தபோது சாம்பியன்ஷிப் டேபிளில் இவர்தான் நம்பர் 1. இன்னும் இருந்தது இரண்டே ரேஸ்கள். ஆனால், கடைசி இரண்டு ரேஸ்களும் அவருக்கு சாதகமாக அமையவில்லை. ஒரேயொரு புள்ளியில் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பறிகொடுத்தார். அன்றே உலகம் முடிவு செய்துவிட்டது, ஃபார்முலா 1 அரங்கின் அடுத்த அரசன் வந்துவிட்டான் என்று. இன்றுவரை அப்படியொரு ரூக்கி சீசனை இந்த உலகம் கண்டதில்லை. இன்றுவரை இப்படியொரு டிரைவரையும் இந்த உலகம் பார்க்கவில்லை.

ரேஸ் டிரைவர் என்பதற்கும் அப்பால் ஹாமில்டனை ஏன் உலகம் கொண்டாடுகிறது? மேலே இருக்கும் வீடியோவில்...