Published:Updated:

Lawn Bowls: "தோனி ஆஸ்திரேலியாவுல இந்த கேமைதான் ஆடுவார்!"- இந்திய வீராங்கனை லவ்லி சௌபே

Lawn Bowls team ( SAI )

காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ் (Lawn Bowls) விளையாட்டின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்திய மகளிர் அணி. அதில் இடம்பெற்றிருக்கும் லவ்லி சௌபே தங்கள் அணியுடனான தோனியின் சந்திப்பைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

Lawn Bowls: "தோனி ஆஸ்திரேலியாவுல இந்த கேமைதான் ஆடுவார்!"- இந்திய வீராங்கனை லவ்லி சௌபே

காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ் (Lawn Bowls) விளையாட்டின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்திய மகளிர் அணி. அதில் இடம்பெற்றிருக்கும் லவ்லி சௌபே தங்கள் அணியுடனான தோனியின் சந்திப்பைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

Published:Updated:
Lawn Bowls team ( SAI )

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போதுவரை இந்தியா 9 பதக்கங்களைக் காமன்வெல்த் போட்டிகளில் வென்றுள்ளது. தற்போது அடுத்த பதக்கத்தை லான் பௌல்ஸ் (Lawn Bowls) விளையாட்டில் உறுதி செய்துள்ளது இந்திய மகளிர் அணி. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தற்போது பைனலுக்கு முன்னேறியுள்ளது.

Indian Team
Indian Team
Sony

38 வயதான லவ்லி சௌபே ஜார்க்கண்ட் காவல்துறையில் கான்ஸ்டபிளாக உள்ளார். ராஞ்சியைச் சேர்ந்த ரூபாவும் விளையாட்டுத் துறையில் பணிபுரிகிறார். 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது தற்செயலாக விளையாட்டைத் தேர்ந்தெடுத்த பிங்கி, தற்போது டெல்லியில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அதே சமயம் நயன்மோனி அசாமில் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து மாநிலத்தின் வனத்துறையில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் பைனலுக்கு முன்னேறியது குறித்துப் பேசிய லவ்லி சௌபே, "நான்கு வருடங்களுக்கு முன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்தோம். ஆனால் இம்முறை சரித்திரம் படைத்து அதைச் சரி செய்துள்ளோம். இந்த முயற்சி எங்களுக்கு சில அங்கீகாரங்களைத் தரும் என்று நம்புகிறேன். விளையாட்டிற்கு வயது வரம்பு ஏதும் இல்லை" என்றார் லவ்லி.

"இந்த விளையாட்டுக்கான பந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. அவை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்கான வசதிகள் இங்குத் திறம்பட இல்லை. இதற்குப் பிறகு அந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

தோனி
தோனி

பின் தோனியுடனான சந்திப்பைப் பற்றிப் பேசிய அவர், "ராஞ்சியில் நடக்கும் பயிற்சியின் போது எங்களைப் பார்க்கச் சிலர் வருவார்கள். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் ஒருத்தர். சொந்த ஊர்க்காரர் என்பதால் தோனி சாருக்கு ராஞ்சியில் உள்ள எங்களின் பயிற்சியாளரை நன்றாகவே தெரியும் எப்படியும் வருடத்துக்கு இரண்டு முறை எங்களைப் பார்க்க வருவார். நாங்கள் பயிற்சி செய்யும் இடத்துக்கு அருகில் டெவ்ரி மாதா (Dewri Mata) கோயில் உள்ளது. அவர் அங்குச் செல்லும்போது எல்லாம் எங்களையும் பார்க்க வருவார். நாங்கள் இந்த லான் பவுல்ஸ் விளையாட்டைப் பற்றி நிறையவே பேசுவோம். தோனிக்கு இந்த விளையாட்டு நன்றாகவே தெரியும். 'ஆஸ்திரேலியாவில் இருக்கும்போதெல்லாம் லான் பவுல்ஸ் விளையாடுவேன்' என்று அவர் எங்களிடம் கூறியிருக்கிறார்" என்று தோனியுடனான சந்திப்பைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார் லவ்லி சௌபே.