Published:Updated:

தோனியைக் கலாய்த்த KKR, வெகுண்டெழுந்த தோனி ரசிகர்கள்! விளையாட்டு Weekly!

KKR fielding to Dhoni

"சிவனேனு கிடந்தவனை சீண்டிவிட்டாய்" என்று அகில உலக சூப்பர் ஸ்டார் படத்தில் வருவதுபோல், சும்மா இருந்த தோனி ரசிகர்களை உசுப்பேற்றியது KKR போட்ட அந்த போஸ்ட்!

தோனியைக் கலாய்த்த KKR, வெகுண்டெழுந்த தோனி ரசிகர்கள்! விளையாட்டு Weekly!

"சிவனேனு கிடந்தவனை சீண்டிவிட்டாய்" என்று அகில உலக சூப்பர் ஸ்டார் படத்தில் வருவதுபோல், சும்மா இருந்த தோனி ரசிகர்களை உசுப்பேற்றியது KKR போட்ட அந்த போஸ்ட்!

Published:Updated:
KKR fielding to Dhoni

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி செஷனில், ஆஸ்திரேலியாவுக்கு 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. போட்டியை டிரா செய்ய இங்கிலாந்து போராடிக்கொண்டிருந்தது. விக்கெட் எடுக்கவேண்டும் என்பதற்காக அனைத்து ஃபீல்டர்களையும் பேட்ஸ்மேன்களுக்கு அருகிலேயே நிறுத்தியது ஆஸ்திரேலியா. ஒரு புகைப்பட ஃபிரேமில் இரண்டு அணிகளின் 13 வீரர்களுமே இருக்கும் அளவுக்கு ஃபீல்டிங் இருந்தது. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

KKR
KKR

உடனே, கொல்கத்தா நைட் ரைடஸ் அணியின் சோஷியல் மீடியா குழு, ஒரு மீம் தயாரித்துப் பதிவிட்டது. ஒரு ஐ.பி.எல் போட்டியில் தோனிக்கு கொல்கத்தா கேப்டன் கம்பீர், இதேபோல் ஃபீல்டிங் செட் செய்திருந்த புகைப்படத்தையும் அதையும் ஒப்பிட்டு அவர்கள் பதிவிட, அதுவும் வைரல் ஆனது. ஆனால், தோனியைக் கலாய்ப்பது போலிருந்ததால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டது. உடனே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைக் கலாய்க்கும் விதத்திலும், தோனியைப் பாராட்டும் விதத்திலும் பதிவுகள் தொடர், தோனி என்ற வார்த்தை நேற்று சில நிமிடங்களிலேயே டிரெண்டிங் ஆனது.

இதேபோல், நோவக் ஜோகோவிச்சின் விசா விஷயமும் பெரிய பஞ்சாயத்தாகி, நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதைப் பற்றியும், ப்ரோ கபடியில் அசத்தும் தமிழ் தலைவாஸ், ஐ.எஸ்.எல் தொடரில் தடுமாறும் சென்னையின் எஃப்.சி அணிகளின் இந்த வார அப்டேட் பற்றியும் தெரிந்துகொள்ள, மேலே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்!