Published:Updated:

`42 கி.மீ.; இரண்டு மணிக்கும் குறைவான நேரம்’ - மாரத்தானில் உலக சாதனையை நிகழ்த்திய கென்ய வீரர்!

34 வயதான கிப்கோஜ் கடந்த 7 மாதங்கள் இந்த போட்டிக்காக தன்னை தயார்படுத்தியுள்ளார்.

எலியட் கிப்கோஜ்
எலியட் கிப்கோஜ்

கென்ய வீரர் எலியட் கிப்கோஜ் முழுநேர மாரத்தான் போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முழு நேர மாரத்தான் தொலைவை 2மணி நேரத்துக்குள் கடந்த உலகின் முதல்வீரர் என்கிற சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்தின் ரசாயன நிறுவனமான ஐஎன்இஓஎஸ் இந்த மாரத்தானை நடத்தியது. முழு மாரத்தான் ஓட்டத்தின் தொலைவு 42.2 கி.மீ ஆகும்.

எலியட் கிப்கோஜ்
எலியட் கிப்கோஜ்

இந்தத் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலியட் கிப்கோஜ் கடந்து வியக்க வைத்துள்ளார். இது அதிகவேக மாரத்தான் சாதனை என்ற போதிலும், இது உலக சாதனையில் எடுத்துக்கொள்ளப்படாது. காரணம், இது அதிகாரப்பூர்வமானதல்ல என்பதால் இதனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. கென்ய வீரர் கிப்சோகேவுக்குத் துணையாக 42 வீரர்கள் உடன் காரிலும், பைக்கிலும் வந்தார்கள். இதில் 1500 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியன் மாத்யூ சென்ட்ரோவிட்ஸ், ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மீட்டரில் வெள்ளி வென்றவரான பால் செலிமோ உள்ளிட்ட பலர் துணையாகச் சென்றனர்.

34வயதான கிப்கோஜ் கடந்த 7மாதங்கள் இந்த போட்டிக்காக தன்னை தயார்படுத்தியுள்ளார். அவர் செல்லும் வழிகளில், சோர்வடையும் நேரத்தில், தண்ணீர் குளுக்கோஸ் உள்ளிட்ட பானங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. இது அவர் சோர்வடைவதிலிருந்து அவரை மீட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ மாராத்தான் போட்டிகளில் சாலைகளிலிருக்கும் குடிநீர் மற்றும் உற்சாக பானங்களை வீரர்களே எடுத்துக்குடிக்க வேண்டும் என்பது தான் விதிமுறை.

எலியட் கிப்கோஜ்
எலியட் கிப்கோஜ்
எலியட் கிப்கோஜ்
எலியட் கிப்கோஜ்

வழியெங்கிலும் கிப்சோகேவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். இது அவரது ஓட்டத்தின் வேகத்தை கூட்டியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க கிப்சோகே சராசரியாக 2.50 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 21 கிலோமீட்டர் தொலைவை 59.35 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முழு மாரத்தான் தொலைவை 2 மணிநேரத்துக்குள் முடிக்க கப்சோகே முயன்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.