Published:Updated:

ஒலிம்பிக்கில் அல்ல... உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் பிரியா மாலிக்!

பிரியா மாலிக்
பிரியா மாலிக் ( MyGovtIndia Twitter handle )

பிரியா மாலிக் ஒலிம்பிக்கில்தான் தங்கம் வென்றார் என நினைத்து பலரும் பயங்கர உற்சாகமாக வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு ட்வீட்டை டெலீட் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவும் ஒருவர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் பரபரவென நடந்து கொண்டிருக்கிறது. மீராபாய் சானுவுக்கு பிறகு இந்தியாவுக்கு வேறு யாராவது பதக்கம் வென்று கொடுப்பார்களா? என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. ஆனால், அது ஒலிம்பிக்கில் அல்ல. ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்! 

ஜூனியர் லெவலுக்கும் முந்தைய லெவலே கேடட் லெவல் என அழைக்கப்படும். இதில், மல்யுத்தத்திற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் 73 கிலோ எடைப்பிரிவில் பிரியா மாலிக் பங்கேற்றிருந்தார்.

பிரியா மாலிக்கிற்கும் பெலாரஸை சேர்ந்த செனியா பேட்டபோவிச்சிற்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 5-0 என செனியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார் பிரியா மாலிக்.

பிரியா மாலிக்
பிரியா மாலிக்
MyGovtIndia Twitter handle

மல்யுத்த பூமியான ஹரியானாவிலிருந்து வந்தவரே பிரியா மாலிக். 2019-ம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா தொடரிலும் தங்கம் வென்றிருந்தார். பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் சிறுசிறு தொடர்களில் சிறப்பாக ஆடிய பிரியா மாலிக்கின் முதல் பெரிய வெற்றி இது.

உலக சாம்பியன்ஷிப்பில் பிரியா மாலிக் தங்கம் வென்றது தெரியாமல், பலரும் அவர் ஒலிம்பிக்கில்தான் தங்கம் வென்றார் என நினைத்து பயங்கர உற்சாகமாக வாழ்த்துக்களை தெர்வித்துவிட்டு ட்வீட்டை டெலிட் செய்து கொண்டிருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மாவும் இதில் ஒருவர். இன்னும் சிலர் அன்ஷு மாலிக்கின் படத்தையும் சோனம் மாலிக்கின் படத்தையும் போட்டு பிரியா மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு