Published:Updated:
India at CWG - Day 11 Highlights: 61 பதக்கங்களுடன் காமன்வெலத்தை நிறைவு செய்தது இந்தியா!

பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகள் இன்று நிறைவடைகிறது. இந்த இறுதி நாளில் இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!
61 பதக்கங்களுடன் காமன்வெலத் போட்டிகளை நிறைவு செய்தது இந்தியா!
22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடம் பிடித்தது இந்தியா!
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது!
Men's hockey: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 0-7 என்ற கோல் கணக்கில் இந்தியா படுதோல்வி!

ஷரத் கமல் காமன்வெல்த் வரலாற்றில் வெல்லும் 13வது பதக்கம் இது. மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2006க்கு பின் வெல்லும் தங்கப்பதக்கம்!
தங்கம் வென்றார் தமிழக வீரர் ஷரத் கமல்!
Table tennis: Men's singles: இங்கிலாந்து வீரர் பிட்ச்ஃபோர்ட்க்கு எதிரான இறுதிப்போட்டியில் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்!

பேட்மின்டனில் மூன்றாவது தங்கம்!
Badminton - Men's doubles: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி 21-15, 21-13 என்ற நேர் செட்களில் இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது!

வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்!
Table tennis - Men's singles: விறுவிறுப்பாக சென்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்தின் பால் ட்ரின்க் ஹாலை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார் சத்யன்!

தங்கப்பதக்கம் வென்றார் லக்ஷ்யா சென்!
Badminton - Men's singles: Lakshya Sen vs Tze Yong NG (Gold medal match)
19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜீ யாங்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்!

கடைசி 3 காமன்வெல்த் போட்டிகளில் பி.வி.சிந்து!
2014 - வெண்கலம் 🥉
2018 - வெள்ளி 🥈
2022 - தங்கம் 🥇
பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்!
Badminton - Women's singles: P.V. Sindhu vs Michelle LI (Gold medal match)
21-15, 21-13 என்ற நேர் செட்களில் கனடாவின் மிச்செல் லீயை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்!

Badminton - Women's singles: P.V. Sindhu vs Michelle LI (Gold medal match)
முதல் செட்டை பி.வி.சிந்து 21-15 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்!

கனடாவை சேர்ந்த மிச்செல் லீக்கு எதிராக பி.வி. சிந்து விளையாடும் இறுதிப்போட்டி தொடங்கியது!
பதக்கபட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்குமா இந்தியா?!

இன்று ஐந்து தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகளில் களம் காண்கிறது இந்தியா.
பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு - பி.வி.சிந்து
பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு - லக்ஷயா சென்
பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு - ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி
டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு - சரத் கமல்
ஆடவர் ஹாக்கி