India at CWG, Day 2 - Highlights: தங்கம் வென்றார் மீராபாய் சானு! ஒரே நாளில் இந்தியாவிற்கு பளுதூக்குதுலில் 4 பதக்கங்கள்!

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வருகிறது. இரண்டாவது நாளில் இந்திய வீரர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!
ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள்!
பெண்கள் 55 கிலோ பிரிவு பளுதூக்குதலில் பிந்தியாராணி வெள்ளி பதக்கம் வென்றார்!

Badminton Mixed Team Group Event: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் போட்டியில் வெற்றி. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Swimming 100M Men's Backstroke: இறுதிப்போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ் 7வது இடம் பிடித்தார்!

Men's Boxing Heavyweight: காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் சஞ்ஜீத் குமார் 2:3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி!
Women's Hockey - Group Stage: இந்தியா அணி வெற்றி!
இந்தியா vs வேல்ஸ் - இந்தியா 3-1 என்ற கணக்கில் வேல்சை வீழ்த்தியது.
வந்தனா கட்டாரியா இரண்டு கோல்கள் அடித்து அசத்தல்!

Men's squash (Round of 32) : அபை சிங் காயம் காரணமாக போட்டியின் நடுவில் விலகினார்! இதனால் அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்!
Women's squash: வேல்ஸ் நாட்டை சேர்ந்த எமிலியிடம் அனாஹத் சிங் தோல்வி!


Women's Boxing Middleweight 66-70kg:
லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்!
காலிறுதிக்கான தகுதிச்சுற்று போட்டியில் நியூஸிலாந்தின் ஏரைன் நிக்கல்சனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் லவ்லினா!
Women's Hockey: Group Stage!
இந்தியா vs வேல்ஸ் - பாதி நேரம் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை!
Table Tennis: காலிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி!
🏋️♀️ காமன்வெல்த் வரலாற்றில் இந்திய வென்ற மொத்த பதக்கங்களில் 25 சதவீதம் பளுதூக்கலில் வென்ற பதக்கங்கள்!
தங்கப்பதக்கத்துடன் மீராபாய் சானு!


முதல் சுற்றில் 88 கிலோவும் இரண்டாவது சுற்றில் 113 கிலோவும் பளுதூக்கி மீராபாய் சானு அபாரம்.
மொத்தமாக இரண்டாம் இடம் பிடித்தவரை விட 29 கிலோ அதிகமாக தூக்கியிருந்தார் மீராபாய் சானு.
இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
Weightlifting Women's 49 Kg: தங்கப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு!

88 கிலோ பளுத்தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்தார் மீராபாய் சானு!

மீராபாய் சானு பங்கேற்கும் போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது!
Men's Squash - Singles: இலங்கையை சேர்ந்த ஷமில் வகீலை 11-4, 11-4, 11-6 என்ற கணக்கில் வீழ்த்தினார் சவுரவ் கோஷல்!
Table Tennis: இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் வட அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி!

Women’s singles squash (Round of 32): ஜோஷ்னா சின்னப்பா 11-8, 11-9, 12-10 என்ற கணக்கில் மேகன் பெஸ்ட்டை வீழ்த்தினார்!

Women’s singles squash (Round of 32) : சுனைனா சாரா குருவில்லா மலேசியாவின் ஐஃபா அஸ்மானிடம் தோல்வி!
இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா!

இந்தியாவுக்காக இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தார் குருராஜ் பூஜாரி. பளுதூக்குதல் ஆண்கள் 61 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார்.
Men’s Boxing - 57kg: முஹம்மது ஹுசாமுதின் வெற்றி!
முஹம்மது ஹுசாமுதின் 5-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வீரர் அஸோமேலேவை வீழ்த்தினார்!

Women's 3000m Cycling Pursuit: தகுதிச்சுற்றில் கடைசி இடம் பிடித்தார் மீனாக்ஷி!

Badminton Mixed Team Group Event: இந்தியா 5-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி!
இன்று அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறார்கள்!

Table Tennis: பெண்கள் அணிக்கு மூன்றாவது வெற்றி!
கயானா அணியை 3-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி !

இறுதிப்போட்டியில் கடைசியாக பளுத்தூக்கும் போது காயமடைந்த வெள்ளி வென்ற சங்கேத் சர்கர்!
Men’s marathon final: நிதேந்திர சிங் ராவத் 12வது இடம் பிடித்தார்!

Swimming, Men’s 200m Freestyle: குஷ்கரா ராவத் இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்றில் எட்டாவது இடம் பிடித்தார். இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை!

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கித்தந்த 21 வயதேயான சங்கேத்!

Weightlifting Men's 55KG - சங்கேத் சர்கர் வெள்ளி பதக்கம் வென்றார்!