Published:Updated:

உலகின் நம்பர் 1 வீராங்கனை இளவேனில்... ஆனால், 2021 ஒலிம்பிக்கிற்குள் நுழைய ஏன் இவ்வளவு தடைகள்?!

Elavenil Valarivan
News
Elavenil Valarivan

உலகின் நம்பர் 1 வீராங்கனை ஒலிம்பிக் செல்வாரா என்பதில் என்ன குழப்பம் இருக்க முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதுதான் இந்தியாவாயிற்றே... இங்கு எதுவும் நடக்கலாம்!

இந்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான இந்திய துப்பாக்கிசுடுதல் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில், தமிழக வீராங்கனை இளவேனில் வாளறிவன் இடம்பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களாக, இளவேனில் ஒலிம்பிக் செல்வாரா என்ற குழப்பம் நிலவிவந்த நிலையில், இப்போது அதற்கு மகிழ்ச்சிகரமான பதில் கிடைத்துள்ளது!

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை இளவேனில் வாளறிவன். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், இவர் அஹமதாபாத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மேற்கொண்டார். ஜூனியர் பிரிவில் தொடர்ந்து அசத்திவந்தவர், 2019-ம் ஆண்டு சீனியர் பிரிவிலும் பட்டையைக் கிளப்பினார். சீனாவின் புதியான், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரங்களில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் அடுத்தடுத்து தங்கம் வென்று அசத்தினார். அதனால், உலகின் நம்பர் 1 அரியாசனத்தில் அமர்ந்தார். உலக துப்பாக்கிசுடுதல் கழகம் இவருக்கு ‘கோல்டன் டார்கெட்’ விருது வழங்கி கெளரவித்தது.

Elavenil Valarivan
Elavenil Valarivan

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகின் நம்பர் 1 வீராங்கனை ஒலிம்பிக் செல்வாரா என்பதில் என்ன குழப்பம் இருக்க முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இதுதான் இந்தியாவாயிற்றே. இங்கே எதுவும் நடக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

துப்பாக்கிசுடுதலைப் பொறுத்தவர், ஒலிம்பிக் தகுதி பெறுவது மற்ற விளையாட்டுகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது. தடகளம் போல் இங்கு வீரர்கள் நேரடியாக தகுதி பெறுவதில்லை. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒருவர் வெற்றி பெறும்போது, அவர் நாடு ஒரு ‘கோட்டா’ பெறும். அதை அவர்கள் வேறொருவருக்குக்கூட கொடுத்துவிடலாம். ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஒரு நாட்டுக்கு அதிகம் 2 கோட்டாக்கள்தான்.

Apurvi Chandela
Apurvi Chandela

இந்தியாவுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கோட்டாக்களை அபூர்வி சாண்டிலா, அஞ்சும் மோட்கில் இருவரும்தான் வென்றிருந்தனர். அதனால், கோட்டாவை வென்ற அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கருதப்பட்டது. இந்நிலையில்தான், உலக அரங்கில் மின்னல் வேகத்தில் தன் கால்தடத்தைப் பதித்தார் இளவேனில். அந்த இருவரை விடவும் ஜூனியர்தான். ஆனால், தன் கன்சிஸ்டன்ஸியால் தொடர்ந்து முத்திரை பதித்தார். இளவேனிலின் எழுச்சி, இந்தியாவில் மும்முனைப் போட்டியாக மாறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2 ஆண்டு ஃபார்மை கணக்கில் கொண்டால், அவர்கள் இருவரும் இளவேனிலுக்கு அருகிலேயே வர முடியாது. அந்த அளவுக்கு சீராக செயல்பட்டு அசத்தியிருக்கிறார் அவர். இந்திய துப்பாக்கிசுடுதல் வீரர்களுக்கே உரிய பிரச்னையான கன்சிஸ்டென்ஸி என்பது இவருக்குப் பிரச்னையாக இருக்கவில்லை. ஒவ்வொரு தொடரிலும் முத்திரை பதித்தார். சொல்லப்போனால், இளவேனில் எந்த சந்தேகமும் இல்லாமல் டோக்கியோ அணியில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால், இந்த இடத்தில்தான் இந்திய தேசிய துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பின் செயல்பாடு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Anjum Moudgil
Anjum Moudgil

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருப்பவர், இந்தியாவின் நம்பர் 1 இல்லை. நம்ப முடிகிறதா?! இந்திய தேசிய துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பின் ரேங்கிங்கில் இளவேனிலுக்கு நம்பர் 1 அந்தஸ்து தரப்படவில்லை. இதனால்தான், அந்த போர்டின் அணுகுமுறை பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. சீனியர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிடுமோ என்றும் தோன்றியது. இவர்கள் நினைத்தால், எப்போதோ அணியை அறிவித்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யாமல் போட்டியாளர்கள் அனைவரையும் குழப்பத்துக்கும் பயத்துக்கும் ஆளாக்கியே வைத்திருந்தார்கள்.

இந்நிலையில், ஒருவழியாக இந்திய துப்பாக்கி சுடுதல் அணி நேற்று அறிவிக்கப்பட, அதில் இரண்டு பிரிவுகளில் இளவேனில் இடம்பெற்றிருக்கிறார். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தனியாகவும், கலப்பு அணி பிரிவில் திவயான் சிங் பன்வார் உடனும் அவர் கலந்துகொள்கிறார். தனிநபர் பிரிவில் இரண்டாவது ஆளாக அபுர்வி சாண்டிலா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அஞ்சும் மோட்கில் வென்ற கோட்டா தான் இளவேனிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Elavenil Valarivan
Elavenil Valarivan

இதுவுமே ஒரு வகையில் தவறான முடிவாகத்தான் பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பிறகு அபுர்வியின் ஃபார்ம் பாதாளம் தொட்டுவிட்டது. தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறார். டெல்லியில் நடந்த உலகக் கோப்பையில் அஞ்சும்தான் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். அந்த உலகக் கோப்பையின் தனிநபர் பிரிவில் தடுமாறியிருந்தாலும் குழுப் பிரிவில் தங்கம் வென்றிருந்தார் இளவேனில். அதனால், இளவேனில், அஞ்சும் இருவரும்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அபுர்விக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, ’50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்’ பிரிவில் அஞ்சும் பங்கேற்பதால், இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கொடுத்திருக்கிறார்களா தெரியவில்லை. எப்படியும் இதுவும் தவறான முடிவே!

இந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் மூலம் இந்தியா குறைந்தது 4-5 மெடல்கள் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மிகச் சிறந்த இளம் படையை கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கியிருக்கிறது இந்தியா. மனு பாகர் (10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், குழு, 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்), சௌரப் சௌத்ரி (10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், குழு), அபிஷேக் வெர்மா (10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், குழு), இளவேனில் ஆகியோர் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.