Published:Updated:

ஹாமில்டன் ஹாட்ரிக்... சமநிலைக்கு வந்தது சாம்பியன்ஷிப் ரேஸ்! #SaudiArabianGP

Lewis Hamilton

பிரேசில், கத்தார், சவுதி அரேபியா என தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று அசத்தியிருக்கிறார் ஹாமில்டன். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டாம் இடத்தையே பெறுவதோடு புதிதாக ஏதாவது சர்ச்சையிலும் சிக்குகிறார் வெர்ஸ்ட்டப்பன்.

ஹாமில்டன் ஹாட்ரிக்... சமநிலைக்கு வந்தது சாம்பியன்ஷிப் ரேஸ்! #SaudiArabianGP

பிரேசில், கத்தார், சவுதி அரேபியா என தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று அசத்தியிருக்கிறார் ஹாமில்டன். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டாம் இடத்தையே பெறுவதோடு புதிதாக ஏதாவது சர்ச்சையிலும் சிக்குகிறார் வெர்ஸ்ட்டப்பன்.

Published:Updated:
Lewis Hamilton

சில சிவப்பு கொடிகள், பல சேஃப்டி கார்கள் எனப் பலவித குழப்பங்களுடனும், சர்ச்சைகளுடனும் நடந்து முடிந்திருக்கிறது முதல் சவூதி அரேபியன் கிராண்ட் ப்ரீ. போட்டி தொடங்குவதற்கு முன்பாக டைட்டில் ரேஸில் வெர்ஸ்ட்டப்பனை விட 8 புள்ளிகள் பின்தங்கியிருந்தார் ஹாமில்டன். இப்போது 369.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் இருக்கிறார்கள்.

இந்த பந்தயம் சவுதி அரேபியாவின் ஜெடா ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் நடைபெற்றது. ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பதால் தொடக்க வரிசை என்பது இங்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. மேலும், ஸ்ட்ரீட் சர்க்யூட்களில் விபத்துகள் கொஞ்சம் அதிகமாகவே நிகழும். இந்த முறையும் ரேஸில் பல மோதல்களை நம்மால் பார்க்க முடிந்தது. கிராண்ட் ப்ரீ போட்டி மட்டுமின்றி ஃப்ரீ ப்ராக்டீஸ் மற்றும் தகுதிச்சுற்றிலுமேகூட சில மோதல்கள் அரங்கேறின.

ஹாமில்ட்டன் மற்றும் வெர்ஸ்ட்டப்பன்
ஹாமில்ட்டன் மற்றும் வெர்ஸ்ட்டப்பன்

தகுதிச்சுற்று:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேற்றைய போட்டிக்கு முந்தைய ஃப்ரீ ப்ராக்டீஸ் போட்டிகளில் ஹாமில்ட்டன் மற்றும் வெர்ஸ்ட்டப்பன் இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். முதல் ஃப்ரீ ப்ராக்டீஸில் ஹாமில்ட்டன் வேகத்தைக் காட்ட, மூன்றாவது ஃப்ரீ ப்ராக்டீஸ் போட்டியில் வெர்ஸ்ட்டப்பன் வேகத்தைக் கூட்டினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பு வெர்ஸ்ட்டப்பனிடம் அதிகமாகவே இருந்தது. அதனை தகுதிச்சுற்றுப் போட்டியிலும் பார்க்க முடிந்தது. தகுதிச்சுற்றுப் போட்டியில் ஹாமில்ட்டனைவிட கொஞ்சம் வேகமாகவே இருந்தார் வெர்ஸ்ட்டப்பன். தன்னிடம் போதிய 'க்ரிப்' இல்லாமல் ஹாமில்ட்டன் கொஞ்சம் திணறிக் கொண்டிருக்க, வெர்ஸ்ட்டப்பன் ஒவ்வொரு செக்டாரையும் சிறப்பாக கடந்து பாய்ந்து கொண்டிருந்தார். ஆனால், கடைசி திருப்பத்தில் சுவரில் மோதியதில் வெர்ஸ்ட்டப்பனின் கார்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே சேதமாகியிருந்தது. இதனால், தகுதிச்சுற்றை அத்தோடு முடித்துக் கொண்டார். இந்த இடைவெளியைப் பயன்படுத்திய மெர்சிடீஸ் டிரைவர்கள் முதலிரண்டு இடங்களைத் தன்வசப்படுத்தினர். முதலிடத்தில் ஹாமில்ட்டனும், இரண்டாம் இடத்தில் போட்டாஸும் போட்டி தொடக்க வரிசையில் இருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராண்ட் ப்ரீ:

மெர்சிடீஸ் டிரைவர்களே முன்னின்று போட்டியைத் தொடங்கினர். அவர்களைத் தொடர்ந்து வெர்ஸ்ட்டப்பன், லெக்லெர்க், பெரஸ், கேஸ்லி, நாரிஸ், சுனோடா, ஓகான் மற்றும் ஜியோவனாஸி என்ற வரிசையில் போட்டி தொடங்கியது. மீடியம் டயர்களில் போட்டியைத் தொடங்கி ஹார்ட் டயருக்கு மாறுவது தான் அனைத்து போட்டியாளர்களின் ப்ளானாகவும் இருந்திருக்கும். ஆனால், போட்டி தொடங்கி 10-வது லேப்பிலேயே சேஃப்டி கார் வெளியே வந்துவிட்டது. மிக் ஷூமேக்கருக்கு ஏற்பட்ட விபத்தால் சேஃப்டி கார் வெளியேறியது. சேஃப்டி கார் இருக்கும்போதே ஹாமில்ட்டன், போட்டாஸ், பெரஸ் மற்றும நாரிஸ் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பிட் எடுத்து புதிய டயர்களுக்கு மாறினார்கள. ஆனால், வெர்ஸ்ட்டப்பன் மட்டும் சேஃபடி காரின் போது பிட் எடுக்கவில்லை. இதனால், முதல் இடத்துக்கு ப்ரமோட் ஆனார் வெர்ஸ்ட்டப்பன்.


13-வது லேப்பில் சிவப்புக் கொடி காட்டப்பட போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சிவப்புக் கொடி காட்டப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டால், அந்த நேரத்தில் போட்டியாளர்கள் புதிய டயரை மாற்றிக்கொள்ளலாம். இதனால் பிட் எடுக்காத வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஓகானுக்கு ஒரு ஃப்ரீ பிட் ஸ்டாப் கிடைத்தது. போட்டி தொடங்கி 15-வது லேப்பில் பெரஸ், ரஸல் மற்றும் மேஸபின் ஆகியோர் மோதிக்கொள்ள மீண்டும் சிவப்புக் கொடி காட்டப்பட்ட போட்டி நிறுத்தப்பட்டது. இந்த மோதலுக்கிடையில் போட்டி தொடங்கியவுடன் வெர்ஸ்ட்டப்பனைக் கடந்து ஹாமில்ட்டன் முன்னேறிச் செல்ல முதல் திருப்பத்தில் ஹாமில்ட்டனை முந்தும் நோக்கத்தில் வெர்ஸ்ட்டப்பன் ட்ராக்கை விட்டு வெளியேறி ஹாமில்ட்டனை முந்த அது ஹாமில்ட்டனுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்ததோடு, ஓகானும் ஹாமில்ட்டனை முந்தி இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். இதனால் வெர்ஸ்ட்டப்பனை ஹாமில்ட்டனுக்குப் பின்னால் P3-க்கு (ஓகான் P2-வுக்கு முன்னேறியதால்) பின்தங்கச் சொல்லி அறிவுறுத்தியது ஹாமில்ட்டன் நிர்வாகம். ரெட்புல் டீமும் எந்த வாக்குவாதமும் இன்றி P3 பொசிஷனை ஏற்றுக் கொண்டது.

சேஃப்டி கார்
சேஃப்டி கார்

போட்டி மீண்டும் தொடங்கியவுடன் 17-வது லேப்பில் மீண்டும் ஓகான் மற்றும் ஹாமில்ட்டன் இருவரையும் முந்தி முதலிடத்தைப் பிடித்தார் வெர்ஸ்ட்டப்பன். வெர்ஸ்ட்டப்பன், ஹாமில்ட்டன், ஓகான் இந்த வரிசையிலேயே சென்று கொண்டிருந்தது போட்டி. 37-வது லேப்பில் ஹாமில்ட்டன் வெர்ஸ்ட்டப்பனை முந்த முயன்று கொண்டிருக்க மீண்டும் 15-வது லேப்பைப் போலவே ஹாமில்ட்டனுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஹாமில்ட்டனைக் கட் செய்து முன்னேறினார் வெர்ஸ்ட்டப்பன். இதனால், வெர்ஸ்ட்டப்பனை 1 இடம் பின்தங்கச் சொல்லி ரெட்புல் நிர்வாகமே அறிவுறுத்தியது. இதனால் 38-வது லேப்பில் வெர்ஸ்ட்டப்பன் வேகத்தைக் குறைக்க, பின்னால் வேகமாக வந்த ஹாமில்ட்டன் வெர்ஸ்ட்டப்பன் கார் மீது மோத, மீண்டு குழப்பம். வெர்ஸ்ட்டப்பன் பின்தங்குவதை ஹாமில்ட்டனுக்குத் தெரிவிக்காததால் தான் இந்தக் குழப்பம் எனக் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹாமில்ட்டனைக் கட் செய்து முன்னேறியதற்காக 5 நொடிகள் பெனால்டியும், ஹாமில்ட்டன் பின்னால் வரும் போது சரியான திட்டமிடல் இல்லாமல் வேகத்தைக் குறைத்து மோதல் ஏற்படுவதற்கு வழிவகுத்ததற்காக 10 நொடிகள் பெனால்டியும் என மொத்தம் 10 நொடிகள் வெர்ஸ்ட்டப்பனுக்கு டைம் பெனால்டி கொடுத்தது F1 நிர்வாகம். வெர்ஸ்ட்டப்பனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹாமில்ட்டனின் காரில் சேதம் ஏற்பட்டிருந்தது. இதனால் முன்பிருந்த வேகத்துடன் ஹாமில்ட்டன் காரால் முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்து முதல் இடத்தில் போட்டியை முடித்தார் ஹாமில்ட்டன். டைம் பெனால்டியையும் கடந்து வெர்ஸ்ட்டப்பனுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

இந்தப் போட்டியில் ஓகானின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தது. இரண்டாவது முறை சிவப்புக் கொடி காட்டப்பட்டதில் இருந்த மூன்றாம் இடத்தில் போட்டியின்றி முன்னேறிக் கொண்டிருந்தார் ஓகான். ஆனால், கடைசி சில லேப்புகள் மூன்றாம் இடத்துக்காக போட்டாஸூடன் ஓகான் போட்டியிட வேண்டியிருந்தது. எனினும் போட்டாஸை டிஃபன்ட் செய்து சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஓகான். ஆனால், கடைசி லேப்பின் கடைசி நிமிடத்தில் வெறும் 0.102 நொடிகள் வித்தியாசத்தில் போட்டாஸிடம் போடியம் பொசிஷனை இழந்தார் ஓகான்.

போடியம்: ஹாமில்ட்டன் மற்றும் வெர்ஸ்ட்டப்பன்
போடியம்: ஹாமில்ட்டன் மற்றும் வெர்ஸ்ட்டப்பன்

வெர்ஸ்ட்டப்பன் மீது F1 ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். "உங்களிடம் இருந்து இப்படி ஒரு ரேஸை எதிர்பார்க்கவில்லை" என்பதே ரசிகர்களின் குரலாக இருக்கிறது. முதல் சாம்பியன்ஷிப் கைநழுவிப் போகின்றதே என்கிற பதற்றமா, இல்லை வேறு ஏதாவது பிரச்சினைகளா எனத் தெரியவில்லை. ஆனால், முதல் சாம்பியன்ஷிப் கோப்பையை வெர்ஸ்ட்டப்பன் பெறும் பட்சத்தில் அதனை எந்தவித சர்ச்சைகளும் இல்லாமல் முறையாகப் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

பிரேசில், கத்தார், சவுதி அரேபியா என தொடர்ந்து மூன்று வெற்றிகளுடன் பலமான இடத்தில் இருக்கிறார் ஹாமில்ட்டன். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டாம் இடத்தையே பெறுவதோடு புதிதாக ஏதாவது சர்ச்சையிலும் சிக்குகிறார் வெர்ஸ்ட்டப்பன். கடைசிப் போட்டியில் தன்னுடைய முதல் கோப்பையை வெல்வதற்காக மீண்டு வருவாரா வெர்ஸ்ட்டப்பன் அல்லது தனது எட்டாது கோப்பை வெல்வாரா ஹாமில்ட்டன். எது நடந்தாலும் அது வரலாறுதான்!.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism