Published:Updated:

விளையாட்டு களத்திலேயே போருக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்ய வீரர்; நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரஷ்ய வீரர்

போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்க அங்கு ' Z ' பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து ரஷ்யாவின் குலியாக் வந்துள்ளார்

விளையாட்டு களத்திலேயே போருக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்ய வீரர்; நடவடிக்கை எடுக்கப்படுமா?

போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்க அங்கு ' Z ' பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து ரஷ்யாவின் குலியாக் வந்துள்ளார்

Published:Updated:
ரஷ்ய வீரர்

உலகமே ரஷ்யா- உக்ரைன் போரை தான் உற்றுநோக்கி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலகநாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க சர்வதேச விளையாட்டு அரங்கிலும் இது குறித்தான நடவடிக்கைகள் பலவும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போருக்கு ஆதரவாக விளையாட்டு வீரர் ஒருவர் களத்திலேயே ஆதரவு தெரிவித்துள்ளது உலக அளவில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய வீரர்
ரஷ்ய வீரர்

கத்தார் நாட்டின் தோகாவில் உலக கோப்பை நடைபெற்று நடைபெற்றன. இதில் உக்ரைன் நாட்டை சேர்ந்த இலியா கோவ்டுன் தங்கமும் கசாகஸ்தான் நாட்டை சேர்ந்த மிலாட் கரிமி வெள்ளியையும் வென்றார். மூன்றாம் இடம்பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றவர் ரஷ்யாவை சேர்ந்த குலியாக். போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்க அங்கு ' Z ' பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து ரஷ்யாவின் குலியாக் வந்துள்ளார். ரஷ்யா -உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் பெளாரஸ் நாடுகளின் தேசிய கீதம், கொடிக்கு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு ஏற்கெனவே தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் 20 வயதே நிரம்பிய குலியாக் கசாகஸ்தான் வீரர் மிலாட் கரிமியுடன் கைகுலுக்கி உக்ரைன் வீரரான இலியா கோவ்டுனை கண்டுகொள்ளாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் அந்த ‘ Z ' குறியீடானது ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினின் ஆதரவாளர்களைக் குறிக்கும் என்றும் அது ரஷ்யாவின் பீரங்கிகளில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒன்று எனவும் கூறப்படுகிறது. இச்செயலால் குலியாக் தன் வெண்கல பதக்கத்தை இழந்து சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவார் என தெரிகிறது.

இவரைப் போலவே மற்றும் சில வீரர்களுக்கு போருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். “இது ரஷ்யர்களாக இருக்க வெட்கப்படாதவர்களுக்கான பிரசாரம்" என்று பதிவிட்டுள்ளார் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரரான கோர்கினா. இவர் 1996 முதல் 2004 வரை ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர். இதேபோல ரஷ்யாவின் செயலுக்கு ஆதரவு தெரிவித்த செஸ் வீரர் செர்கே கர்ஜகினுக்கு கிராண்ட் செஸ் டூர் உட்பட பல போட்டிகளில் பங்கேற்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism