Published:Updated:

`விபத்து நடந்தாலும் பாதுகாப்பு!' - கோவை ரேஸில் சீறிப்பாய்ந்த மாணவர்கள் வடிவமைத்த ஃபார்முலா கார்கள்

ஃபார்முலா கார்
ஃபார்முலா கார்

கோவை அருகே பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த ஃபார்முலா ரக கார்கள், கரி மோட்டார் ஸ்பீட்வேயில் சீறிப்பாய்ந்தன.

கோவையை அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் கரி மோட்டார் ஸ்பீட்வே உள்ளது. இங்கு ஃபார்முலா ரேஸ்களுக்குத் தகுதி பெறும் வகையில், கார்களைத் தயார்படுத்தும் ஃபார்முலா பாரத் எனும் மாணவர்களுக்கான போட்டி நடைபெற்றது.

ஃபார்முலா கார்
ஃபார்முலா கார்

இந்தப் போட்டியில், நாடு முழுவதும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து சுமார் 2,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக, மாணவர்கள் 65 குழுக்களாகப் பிரிந்து ஃபார்முலா ரக கார்களை வடிவமைத்தனர்.

Vikatan

எரிவாயுவில் இயங்கும் கார்கள் மட்டுமல்லாமல், மின்சாரத்தில் இயங்கும் கார்களும் உருவாக்கப்பட்டன. முக்கியமாக ஒலி, மாசு அளவு, வேகமாக இயக்கும்போது உடனடியாக காரை நிறுத்தினால் பிரேக் பிடிக்கும் திறன் கொண்ட கார்களை மாணவர்கள் வடிவமைத்திருந்தனர்.

ஃபார்முலா கார்
ஃபார்முலா கார்

மேலும், விபத்து நடந்தால் உடனடியாக காரை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கார்களை மாணவர்கள் தயார் செய்தனர். இதில், மாணவிகள் மட்டும் தனிக்குழுக்களாக இயங்கி கார்களைத் தயார் செய்தது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மொத்தம் இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், கார்களின் சிறப்பம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கிய இந்த கார்களை தடைகளை மோதாமல் லாகவமாக இயக்க, சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஃபார்முலா மாணவர்கள்
ஃபார்முலா மாணவர்கள்

பொறியியல் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதில், சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு