Published:Updated:

Formula E Race: அதிவேக ஃபார்முலா எலெக்ட்ரிக் கார் ரேஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில்!

Formula E Race
News
Formula E Race ( Sam Bloxham )

இதற்கான ரேஸ் ட்ராக்கைச் சத்தமே இல்லாமல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உருவாக்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 11–ம் தேதி என இதற்கான தேதியையும் குறித்து விட்டார்கள்.

Published:Updated:

Formula E Race: அதிவேக ஃபார்முலா எலெக்ட்ரிக் கார் ரேஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில்!

இதற்கான ரேஸ் ட்ராக்கைச் சத்தமே இல்லாமல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உருவாக்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 11–ம் தேதி என இதற்கான தேதியையும் குறித்து விட்டார்கள்.

Formula E Race
News
Formula E Race ( Sam Bloxham )
தெலங்கானா மாநிலம்தான் இந்தியாவில் எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு ரொம்பவும் முன்னுரிமை கொடுக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் டெஸ்லாவைக் கொண்டு வர எலான் மஸ்க்குக்கு சமூகவலைதளங்களில் முதன் முதலில் வலை போட்டது தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான்.

இப்போது உலகின் அதிவேகமான ஃபார்முலா–1 கார் ரேஸ்களுக்கும் அடித்தளம் போட இருக்கிறது தெலங்கானா. அது சரி; எலெக்ட்ரிக்குக்கும் இந்த ஃபார்முலா கார் ரேஸுக்கும் என்ன சம்பந்தம்? ஆம், இந்த ஃபார்முலா கார் ரேஸ், ஒரு சுத்தமான எலெக்ட்ரிக் ரேஸ். மணிக்கு 300 கிமீ வேகத்தில் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என காதைக் கிழிக்கும் சத்தத்துடன் பறக்கும் கார்கள்தான், ஃபார்முலா 1–ன் அழகே! அதே கார்கள், சத்தமே போடாமல், அதே வேகத்துடன், எக்ஸாஸ்ட் புகையே இல்லாமல்… ட்ராக்கில் ஓடினால் எப்படி இருக்கும்! அதுதான் எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸ்.

மிட்ச் ஈவன்ஸ்
மிட்ச் ஈவன்ஸ்

இதைத்தான் ‘ஃபார்முலா–இ’ கார் ரேஸ் என்கிறார்கள். அஃபீஷியலாக இதை `ABB FIA Formula E’ வேர்ல்டு சாம்பியன்ஷிப் ரேஸ் என்று அழைக்கிறார்கள். இப்போது ஃபார்முலா இ ரேஸின் 8–வது சீஸன் மெக்ஸிகோ, சவுதி, கனடா, அமெரிக்கா, தெற்கு கொரியா, இத்தாலி, லண்டன் என்று பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் இந்தோனேஷியாவில் நடந்த 8–வது ரவுண்டில், ஜாகுவார் TCS டீமைச் சேர்ந்த மிட்ச் ஈவன்ஸ் என்பவர், முதலாம் இடம் வந்திருக்கிறார். ஜகார்த்தாவில் நடந்த இந்தப் போட்டியின் 60,000 பார்வையாளர்களில் இந்தோனேஷியப் பிரதமரும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து போட்டியைக் கண்டு ரசித்திருக்கிறார் என்றால், இந்த விளையாட்டின் மகத்துவம் புரியும்.

அப்படிப்பட்ட எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸ், இந்தியாவுக்கு வந்தால் நமக்குப் பெருமைதானே! ஏற்கெனவே, ஃபார்முலா–1 ரேஸ், தலைநகர் டெல்லியில் உள்ள புத் ரேஸ் ட்ராக்கில் நடந்தபோது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மொத்தமும் இந்தியாவுக்குப் படையெடுத்தார்கள். ஃபார்முலா–1 கார் ரேஸ், நம் நாட்டு ஐபிஎல்–க்கு இணையாக, உலகம் முழுதும் பெரிய ரசிகர் பலம் கொண்ட காஸ்ட்லியான ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ்.

ரசிகர்கள் நடுவில் மிட்ச் ஈவன்ஸ்...
ரசிகர்கள் நடுவில் மிட்ச் ஈவன்ஸ்...
Sam Bloxham
இதற்கான ரேஸ் ட்ராக்கைச் சத்தமே இல்லாமல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உருவாக்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 11–ம் தேதி என இதற்கான தேதியையும் குறித்து விட்டார்கள். மஹிந்திரா ரேஸிங் டீமின் CEO, தில்பாக் கில் இதை அறிவித்தும் விட்டார்.

‘‘இந்த ரேஸ் ட்ராக் மிகவும் அருமையாக உள்ளது. இதன் கட்டமைப்பு பிரமாதம். ஒரு வேர்ல்டு க்ளாஸ் ஷோவுக்கு இந்தியா ரெடியாக இருக்கிறது. இது ஃபார்முலா காலண்டரில் அதிவேகமான ட்ராக்காகவும் இருக்கப் போகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தெலங்கானா அரசிடம் நடந்து கொண்டிருக்கிறது!’’ என்கிறார் தில்பாக் கில்.

பொதுவாக, சில கார் ரேஸ்கள் ரேஸ் ட்ராக்கோடு சேர்த்து நகரத்தின் முக்கியத் தெருக்களிலும் பொது மக்களுக்குத் தொந்தரவில்லாமல் நடக்கும். ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘ரஷ்’ போன்ற ஹாலிவுட் படங்களில், தெருக்களில் நடக்கும் இந்த ரேஸ்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல், ஹைதராபாத்தின் ஒரு ஏரியைச் சுற்றி மிகப் பிரம்மாண்டமாக ஒரு ரேஸ் ட்ராக்கை உருவாக்கி வருகிறார்கள். மாலை நேர லைட்டிங் செட்–அப்போடு இதை நடத்தத் திட்டமும் இருக்கிறது. ‘‘நகரத்துக்குள் நடந்தாலும், பொதுமக்களுக்குத் தொந்தரவு இருக்காது!’’ என்கிறார் கில்.

Formula E Race
Formula E Race
இப்போதைக்கு ஃபார்முலா இ ரேஸ்களில் பங்காற்றும் ஒரே ஒரு இந்தியன் ரேஸிங் அணி மஹிந்திரா ரேஸிங் டீம் மட்டும்தான். மஹிந்திரா ரேஸிங் 2014–ல் இருந்து செம சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த மெர்சிடீஸ், போர்ஷே, நிஸான் வரிசையில் இந்தியாவில் மஹிந்திரா ரேஸிங் இருப்பது மிகவும் பெருமை வாய்ந்த விஷயம்.

ரேஸிங் டீம் என்பது இந்தியன் அணியாக இருந்தாலும், இதில் ஒரு சோகமான விஷயம் – நம் இந்திய டிரைவர்கள் யாரும் இல்லை என்பதே! முதல் சீஸனில் கருண் சந்தோக் என்பவருக்குப் பிறகு, இந்திய டிரைவர்களுக்குப் பஞ்சமாக இருக்கிறது.

இப்போதைக்கு தேஹன் தருவாலா, அர்ஜுன் மைனி, அவரது சகோதரர் குஷ் போன்றவர்களை ரேங்க் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், இவர்களால் இந்தியன் டீமுக்கு கப் அடித்துத் தர முடியுமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறது மஹிந்திரா ரேஸிங் டீம்.

இந்தியன் ரேஸர்கள் யாராச்சும் இருக்கீங்களா… ஃபார்முலா இ கார் ரேஸுக்கு!