Published:Updated:

மதுர மக்கள்: "அஜித் சார் நடிகரா இல்லாம, ஷூட்டரா பேசினார்!" துப்பாக்கி சுடுதல் சாம்பியன் சமிக்‌ஷா

மதுர மக்கள்
News
மதுர மக்கள்

"அஜித் சார் என்னோட மெடல்ஸ் எல்லாம் பார்த்துட்டு வாழ்த்துகள் சொன்னார். பெரிய நடிகர்னு எந்தவித இமேஜும் இல்லாம சக விளையாட்டு வீரரா என்கூட பேசிட்டு இருந்தார்."

Published:Updated:

மதுர மக்கள்: "அஜித் சார் நடிகரா இல்லாம, ஷூட்டரா பேசினார்!" துப்பாக்கி சுடுதல் சாம்பியன் சமிக்‌ஷா

"அஜித் சார் என்னோட மெடல்ஸ் எல்லாம் பார்த்துட்டு வாழ்த்துகள் சொன்னார். பெரிய நடிகர்னு எந்தவித இமேஜும் இல்லாம சக விளையாட்டு வீரரா என்கூட பேசிட்டு இருந்தார்."

மதுர மக்கள்
News
மதுர மக்கள்

"அம்மா அவுங்க காலேஜ் நாள்கள்ல கூடைப்பந்தாட்ட வீராங்கனையா இருந்தாங்க. ஆனாலும், தொடர்ச்சியா அவுங்களால அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போக முடியல. அதோட நீட்சியாதான் அம்மா என்னையும் விளையாட்டுத்துறைக்குள்ள சேர்த்துவிட்டாங்கன்னு நினைக்கிறேன். இதை அம்மாவோட கனவு ஆசைன்னு சொல்றத விட அதை எனக்கான வழிகாட்டுதல்னுதான் சொல்லணும்.

முதன் முதல்ல ரைஃபிள் கிளப்ல கொண்டு போயி சேர்த்தது மட்டும்தான் அம்மாவோட வேலையா இருந்திருக்க முடியும். அதுக்குப்பிறகு எனக்கே அதுல இன்னும் ஆசை வர ஆரம்பிச்சது. சுத்தி இருக்கறவங்க துப்பாக்கியில புல்லட் லோடு பண்றது, எந்தத் தொந்தரவும் இல்லாம எல்லா கவனத்தையும் விளையாட்டு மேல செலுத்துறதுன்னு எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு! இதுதான் நான் துப்பாக்கி சுடுதலை இன்னும் அதிகமா நேசிக்க காரணம்" அத்தனை நிதானமாகப் பேசுகிறார் சமிக்‌ஷா.

சமிக்‌ஷா, துப்பாக்கி சுடுதலில் சப் ஜூனியர் ,பெண்கள் பிரிவு, குழு என மூன்று பிரிவுகளில் தங்கமும், ஜூனியர் சீனியர் பிரிவுகளில் வெள்ளியும் வென்றிருக்கும் எட்டாவது படிக்கும் மதுரை மாணவி.

"அம்மாவும் அப்பாவும் இன்ஜினியரா இருக்காங்க. ஆனா, அப்பாவுக்கு டெல்லியில வேலை. அம்மா, இங்க மதுரைல ஸ்போர்ட்ஸ் கடை வச்சிருக்காங்க. எனக்கு ஆறு வயசா இருக்கும்போதே ஸ்போர்ட்ஸ்ல எனக்கான இடத்தை தேர்ந்தெடுக்கணும்னு காத்திருந்திருந்தாங்க. ஆனா, துப்பாக்கி சுடுதல்னா அதுக்கு குறைந்த பட்ச வயது தகுதியே பத்து வயசாகிருக்கணும். முதன் முதலில் என்னைய மதுரை ரைஃபிள் க்ளப்ல போயி சேர்த்தப்போ எனக்கு ரொம்பவே புதுசா இருந்துச்சு. ஆனா, ஆரம்ப நாட்கள்ல துப்பாக்கியைத் தூக்குறதுக்கே சிரமமா இருந்துச்சு. என்னோட உடல் அதோட எடையைத் தூக்க ஒத்துழைக்கல. முதல் ஒரு 15 நாள் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனாலும் எனக்கு அது பிடிச்சிருந்துச்சு. அந்த விருப்பம் குடுத்த உத்வேகத்துலயே ஃபிட்னஸ் மேல ரொம்பவே கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். அது எனக்கு நல்லாவே கை குடுத்துச்சு. அப்புறம் எல்லாமே டப் டப் தான்! கூடவே பயிற்சியாளர் வேல் ஷங்கர் சார் குடுத்த நம்பிக்கையும்தான் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேற உதவுச்சு."

நடிகர் அஜித்குமாரோடு நடந்த சந்திப்பில் என்ன நடந்தது?

அஜித்துடன் சமிக்‌ஷா
அஜித்துடன் சமிக்‌ஷா

"மாநில அளவிலான போட்டிக்காக சென்னை போயிருந்தப்போதான் அஜித் சாரை பார்த்தேன். அதுக்கு முன்னாடி கோயம்புத்தூல நடந்தப்போ கூட அவரைத் தூரத்துல இருந்து பார்த்துருக்கேன். ஆனா, பேச முடியல. சென்னையில போட்டிகள் இருந்தப்போ அஜித் சாரோட மேட்ச் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் என்னோட மேட்ச் இருந்துச்சு. அவுங்க மேட்ச் முடிஞ்சு ரெஸ்ட்ல இருந்தப்போ என்னோட மேட்ச்சும் முடிஞ்சதனால சந்திக்க சரியா இருந்துச்சு. அப்போ நடந்த டோர்னமென்ட்ல நான்தான் ரொம்ப குட்டிப்பொண்ணு. அப்புறம் என்னோட மெடல்ஸ் எல்லாம் பார்த்துட்டு வாழ்த்துகள் சொன்னார். பெரிய நடிகர்னு எந்தவித இமேஜும் இல்லாம சக விளையாட்டு வீரரா, ஒரு ஷூட்டரா என்கூட பேசிட்டு இருந்தார்."

இது மற்ற விளையாட்டுகள் போல இல்லைதானே?

சமிக்‌ஷா
சமிக்‌ஷா

"ஆமா, ரொம்பவே காஸ்ட்லியான விளையாட்டும் கூட! இப்போ என்னோட வயசுக்கு ஓபன்சைட் துப்பாக்கில ஸ்டேட் லெவல்வரை மட்டும்தான் போக முடியும். ஸ்டேட் லெவல்ல ஜெயிச்சாச்சு. அடுத்து நேஷனல் போகணும் அப்படின்னா துப்பாக்கியோட ரேஞ்சும் மாத்தியாகணும். ஓபன் சைட்ல இருந்து அடுத்த துப்பாக்கிக்கு மாறிட்டேன். ஓபன் சைட்டுக்குத் துப்பாக்கி மட்டுமே 15,000 ரூபாய் ஆகும். அதுபோக ஒரு புல்லட் பாக்சுக்கு 500 ரூபாய் வரை செலவு பண்ணனும். மூணு நாளுக்கு ஒரு புல்லட் பாக்ஸ் மாத்தணும். இப்போ துப்பாக்கி லெவல் மாத்திட்டதால கிளப்ல இருக்க துப்பாக்கியைப் பயன்படுத்திட்டு இருக்கேன். பயிற்சிக்கு சொந்தமாக வாங்கணும்னா மூணு லட்ச ரூபாய் வரை தேவைப்படும். பொருளாதார ரீதியா இப்படின்னா, இது ஒரு மனநிலை சார்ந்த விளையாட்டுன்னும் சொல்லுவாங்க. விளையாடுறதுக்கு முன்ன யோகா, ஃபிட்னஸ்னு என்னை தயார்படுத்திட்டு இருக்கேன். அதுபோக என்னோட படிப்பையும் தொந்தரவு பண்ணிடக்கூடாதுன்னு கவனமா இருக்கேன். சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் நேரா பிராக்டீஸ் ரெண்டு மணி நேரம். முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து படிப்பு. இப்படித்தான் ரெண்டையும் பேலன்ஸ் பண்றேன். இந்த சவால் ரொம்ப பிடிச்சுருக்கு!"

அடுத்து என்ன இலக்கு?

சமிக்‌ஷா
சமிக்‌ஷா

"அடுத்த இலக்கு இப்போதைக்கு நேஷனல் லெவல் ஜெயிக்கணும். ஒலிம்பிக்ல இந்தியா சார்பாக விளையாடணுங்கிறது வாழ்நாள் கனா!"

கனவு ஜெயிக்க வாழ்த்துகள் சமிக்‌ஷா!