ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் , கடந்த ஜனவரி 17-ம் தேதி மெல்பர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தொடரில் பங்கேற்பதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்தாத ஜோக்கோவிச்சின் விசாவை இருமுறை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு. ஜோகோவிச்சின் விசா ரத்து செய்ததைக் கடந்த ஞாயிற்றுகிழமை ஆஸ்திரேலியா ஃபிடரல் நீதிமன்றம் உறுதி செய்தததையடுத்து தனது 10-வது ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியவில்லை.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஜோகோவிச் தனது நிலைப்பாட்டினை தொடர்ந்தால் மற்ற கிராண்ட்ஸ்லாம் விளையாட மறுக்கப்படுவார் எனத் தெரிகிறது. 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களுக்கு சொந்தக்காரரான அவர் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது குறித்து அமைப்பாளர்கள் உறுதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஜோகோவிச்சின் பல்வேறு ஸ்பான்ஸர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரைபெய்ஸ்ன் வங்கி "எங்களது ஸ்பான்ஸர்ஷிப், ஜோக்கோவிச்சின் தடுப்பூசி சர்ச்சை வருவதற்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டின் உயர்ரக வாட்ச் நிறுவனமான ஹுப்ளட் "நாங்கள் ஜோகோவிச்சின் சொந்த பிரச்னையில் தலையிடமாட்டோம், உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சிற்கு தொடர்ந்து ஸ்பான்ஸர் செய்வோம்" என்று ஆதரவு தெரிவித்துள்ளது.இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்டது.2020 ஆம் ஆண்டு வரை சீகோ வாட்ச் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார் ஜோகோவிச்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரெஞ்சு நாட்டின் ஆடை நிறுவனமான லக்கோஸ்ட் "ஆஸ்திரேலியாவில் அவருக்கு நடந்த நிகழ்வுகளை குறித்து மதிப்பாய்வு செய்வோம் " என்று தெரிவித்துள்ளது. ஜோக்கோவிச், லக்கோஸ்ட் நிறுவனத்துடன் $9 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச்சின் மற்ற ஸ்பான்ஸர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறவில்லை. ஜோக்கோவிச், தனது டென்னிஸ் ராக்கெடிற்கான ஒப்பந்தத்தை ஹெட் நிறுவனத்துடன் $9 மில்லியன் டாலர்களுக்கும், காலனிகளுக்கான ஒப்பந்ததை ஆசிக்ஸ் நிறுவனத்துடன் கையொப்பமிட்டுள்ளார்.
மேலும் ஜேக்கப் கிரீக்கு எனும் வைன் நிறுவனத்துடன் $2 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதவிர யுகேஜி, லெமரோ போன்ற நிறுவனங்களுடனும் அவர் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தன் ஸ்பான்ஸர்களின் மூலம் மட்டும் ஓர் ஆண்டிற்கு $41 மில்லியன் டாலர்களை வரை ஈட்டுகிறார் ஜோகோவிச். ஆனால் இனிவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சின் பங்கேற்பு உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அவரின் சில முக்கிய ஸ்பான்ஸர்கள் அவர்களுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலக நிர்பந்திக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.