Published:Updated:

மணிகா பத்ரா அளித்த சூதாட்ட புகார்; மொத்த இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பும் சஸ்பெண்ட்!

மனிகா பத்ரா

தான் தேர்வு செய்யப்படாததற்குக் காரணம், நிகழ்ச்சிக்கு முன் நடந்த தேசிய முகாமில் தான் கலந்து கொள்ளாததுதான் என டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு கூறியதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

மணிகா பத்ரா அளித்த சூதாட்ட புகார்; மொத்த இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பும் சஸ்பெண்ட்!

தான் தேர்வு செய்யப்படாததற்குக் காரணம், நிகழ்ச்சிக்கு முன் நடந்த தேசிய முகாமில் தான் கலந்து கொள்ளாததுதான் என டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு கூறியதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

Published:Updated:
மனிகா பத்ரா

காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்காக விளையாடி பதக்கம் வென்றவர் மணிகா பத்ரா. இவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பை மொத்தமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

மனிகா பத்ரா
மனிகா பத்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தோகா ஒலிம்பிக் தகுதிச் சுற்றின்போது, தேசிய பயிற்சியாளர் சௌம்யதீப் ராய், அவரிடம் பயிற்சிபெற்ற மற்றொரு வீராங்கனையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக மணிகாவை விட்டுக்கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இந்த Match fixing தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மணிகா பத்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பாளி, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் நிர்வாக கமிட்டியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதுடன், புதிய நிர்வாகிகளை நியமிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், `இந்திய டேபிள் டென்னிஸ் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்தைவிட தங்கள் முன்னேற்றத்துக்குத்தான் பணிசெய்கிறார்கள்" எனவும் விமர்சித்திருக்கிறார்.

மனிகா பத்ரா
மனிகா பத்ரா

இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள மணிகா பத்ரா, ``வேறு வழியில்லாமல் நான் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் தேவையற்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டேன். இது என்னை பெரும் மன வேதனைக்கு ஆளாக்கியது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பு நான் மிகவும் கடினமான சூழ்நிலையைத் தாங்க வேண்டியிருந்தது. இது ஒலிம்பிக்கில் எனது ஆட்டத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கும், இந்தியாவுக்காக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் பாதுகாப்பைப் பெறுவதே எனது ஒரே நோக்கம்'' என்று கூறியுள்ளார்.

மேலும், ``இந்திய நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக எனது வாழ்க்கையை விளையாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். இந்திய அரசுக்கும், என்னுடன் நின்ற அனைவருக்கும், மற்றும் எனது நாட்டு மக்களுக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்'' என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism