Published:Updated:

`229 பந்துகளில் 124 டாட் பால்கள்...!’ - பெளலர்கள் அசத்திய டி20 #TNPL

கார்த்திகா ராஜேந்திரன்

நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது

Madurai Panthers
Madurai Panthers ( TNPL )

திருநெல்வேலி ஐ.சி.எல் சங்கர் நகர் மைதானத்தில் நடந்த போட்டியில் காரைக்குடி காளை - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் ஐந்து ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த காரைக்குடி காளை அணி, 6-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. செல்வ குமரன் பந்துவீச்சில் கேப்டன் அனிருதா வெளியேற, அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.

Karaikudi Kaalai
Karaikudi Kaalai
TNPL

மதுரை பாந்தர்ஸ் பெளலர்கள் செல்வ குமரன், ரஹில் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த காரைக்குடி காளை 93 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய மதுரை பாந்தர்ஸுக்கு காரைக்குடி பெளலர்கள் செக் வைத்தனர். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் அருண் கார்த்திக் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

அதே ஓவரில், ஒன் டவுன் களமிறங்கிய நிலேஷ் சுப்ரமணியனும் டக் அவுட்டாக 2/0 என மதுரை தடுமாறத் தொடங்கியது. கேப்டன் ஶ்ரீஜித் சந்திரன் (25), செல்வ குமரன் (21) ரன் சேர்த்து காப்பாற்ற, 18.1 ஓவர் முடிவில் இலக்கை எட்டியது மதுரை பாந்தர்ஸ்.

காரைக்குடி காளை vs மதுரை பாந்தர்ஸ்

மொத்த டாட் பால்கள் - 124. முதல் இன்னிங்ஸ் - 65, இரண்டாவது இன்னிங்ஸ் - 59, இரண்டு இன்னிங்ஸிலும் ரன் எடுக்கவிடாமல் பெளலர்கள் அசத்தினர். இந்தப் போட்டியில் வீசப்பட்ட 229 பந்துகளில் 124 பந்துகளில் ரன் ஏதும் எடுக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். ரன்களைக் கட்டுப்படுத்திய பெளலர்களுக்கு விக்கெட் வேட்டையும் சிக்கியது. முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளும் சரிந்தன. காரைக்குடி அணியின் மோகன் பிரசாத், சுனில் சாம், மான் பஃனா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். நடப்புச் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில், லீக் சுற்றில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற காரைக்குடி காளை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.