Published:Updated:

``எக்யூப்மென்ட்ஸ் கடன் வாங்கி தங்கம் ஜெயிச்சேன்!” - வீல்சேர் வாள் வீச்சில் அசத்தும் தீபிகா

தீபிகாராணி

"அங்க போட்டியில கலந்துக்க வந்திருந்த அண்ணன்கள் சிலர், எனக்கு அவங்களோட எக்ப்யூமென்ட்ஸ் கொடுத்தாங்க. அதை வைச்சு Saber பிரிவில் தங்கம், foil பிரிவில் வெள்ளி ஜெயிச்சேன்."

``எக்யூப்மென்ட்ஸ் கடன் வாங்கி தங்கம் ஜெயிச்சேன்!” - வீல்சேர் வாள் வீச்சில் அசத்தும் தீபிகா

"அங்க போட்டியில கலந்துக்க வந்திருந்த அண்ணன்கள் சிலர், எனக்கு அவங்களோட எக்ப்யூமென்ட்ஸ் கொடுத்தாங்க. அதை வைச்சு Saber பிரிவில் தங்கம், foil பிரிவில் வெள்ளி ஜெயிச்சேன்."

Published:Updated:
தீபிகாராணி

“எம் பேரு தீபிகா ராணி... கோவை உருமாண்டம்பாளையத்தில இருந்து வர்றேன். இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பா, சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் சண்டை போட்டியில் தங்கம், வெள்ளி ஜெயிச்சுருக்கேன். வாள் சண்டைக்குத் தேவையான எக்யூப்மென்ட்ஸ் எதுவுமே சொந்தமா என்கிட்ட இல்ல. கடன் வாங்கித்தான் போட்டியில் கலந்துகிட்டேன். சொந்தமா எக்யூப்மென்ட்ஸ் வாங்குற அளவு வசதியும் இல்லை. அரசாங்கம் உதவி செஞ்சா ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தருவேன்!”

இது, தான் வாங்கிய பதக்கங்களுடன் கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி  தீபிகா ராணி ஊடகங்களிடம் உதிர்த்த வார்த்தைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபிகா ராணியிடம் பேசினோம்.

“எங்க வீட்டில் நான் ஒரே பொண்ணு. அப்பா ஒரு பேக்கரில வேலை பார்க்கிறார். பிறந்து ஆறு மாசத்துலேயே எனக்கு போலியோ அட்டாக் ஆகி, இடுப்புக்குக் கீழே செயலிழந்துருச்சு. என்னால் சுத்தமா நடக்க முடியாது. சின்ன வயசுலேயே வீல் சேர் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல அம்மாதான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்க. வயசு கூடக்கூட என்னை தூக்கறது சிரமமா இருந்துச்சு. 6-வதுக்கு மேல அப்பா வேலைக்குப் போற இடத்துல பெர்மிஷன் சொல்லிட்டு வந்து, என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போவார். 

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கே.ஜி காலேஜ்ல எனக்கு நல்லா சப்போர்ட் பண்ணாங்க. என் ஒருத்திக்காகத் தனியா ரேம்ப் செட் பண்ணிக் கொடுத்தாங்க. ஃபீஸ் கட்டுறது சிரமமா இருந்தது. குமரகுரு காலேஜ்ல கஷ்டப்படுற ஏழை மாணவர்களுக்கு உதவி செய்றதா கேள்விப்பட்டு அங்கே போனேன் அவங்கதான் எனக்கு பீஸ் கட்டினாங்க. அதுமட்டுமில்ல, ஸ்போர்ட்ஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க.

தீபிகாராணி
தீபிகாராணி

மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிக்கெட், வாலிபால் கோச் பண்றதுக்கும், நிறைய சப்போர்ட் பண்ணுவாங்க. அந்த விஷயத்தையெல்லாம் மோகன்குமார் அண்ணா சொல்லி, `நீ ஸ்போர்ட்ஸ்ல  கவனம் செலுத்து’னு சொன்னார். அதன்பிறகுதான், வாள் சண்டை ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். கே.ஜி.காலேஜில படிச்சிக்கிட்டு குமரகுரு காலேஜ்ல வாள் சண்டை கத்துக்கிட்டேன்.

ஆல்பர்ட் பிரேம்குமார் சார் அவரோட எக்யூப்மென்ட்ஸைக் கொடுத்து அடிப்படையான விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். போகப்போக அதில் எனக்கு ஆர்வம் கூடிருச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல நேரங்களில் எனக்கு சொல்லிக்கொடுக்க ஆள் இருக்காது. அப்போ யூ-டியூப் வீடியோக்களைப் பார்த்து கத்துப்பேன். என் ஆர்வத்தைப் பார்த்து, ‘நீ சென்னையில நடக்கிற நேஷனல் ஃபென்சிங் போட்டியில கலந்துக்கோ’னு ஆல்பர்ட் சார் சொன்னார். சும்மா போய் பார்ப்போம்னு அதுல கலந்துகிட்டேன்.

போன மாசம் சென்னை நேரு ஸ்டேடியத்துல டோர்னமென்ட் நடந்துச்சு. 12-க்கும் மேற்பட்ட மாநிலங்கள்ல இருந்து 150-க்கும் மேற்பட்டவங்க கலந்துகிட்டாங்க. அவங்களைப் பார்க்கும்போது எனக்குப் பதற்றமா இருந்துச்சு. காரணம், அவங்க வாள் சண்டைக்கான சாதனங்கள் வெச்சிருந்தாங்க. `நாம என்ன பண்ணப்போறோம்’னு மனசுக்குள்ள ஒரு உதறல்.

தீபிகாராணி
தீபிகாராணி

அங்க போட்டியில கலந்துக்க வந்திருந்த அண்ணன்கள் சிலர், எனக்கு அவங்களோட எக்ப்யூமென்ட்ஸ் கொடுத்தாங்க. அதை வைச்சு Saber பிரிவில் தங்கம், foil பிரிவில் வெள்ளி ஜெயிச்சேன். முதல் முயற்சியிலேயே பதக்கம் ஜெயிச்சதை எல்லோரும் பாராட்டினாங்க.

வாள் சண்டையில் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகணும். ஒலிம்பிக்கில் கலந்துகிட்டு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுக்கனும். இதுதான் என் லட்சியம். ஆனால், அதுக்கு இன்னும் நிறைய ப்ராக்டீஸ் தேவை. சொந்தமா எக்யூப்மெண்ட்ஸ் தேவை. அரசாங்கம் உதவி பண்ணணும்” என்கிறார்.

தீபிகாவின் அப்பா ராமநாதன், "பிறந்த மூணு மாசம் வரைக்கும் குழந்தை நல்லாத்தான் இருந்துச்சு. ஏதோ ஊசி போட்டு 16-வது நாள் மூளைக்காய்ச்சல் வந்து குழந்தையை முடக்கிருச்சு. அப்புறம் முதுகுத் தண்டு பாதிச்சிருச்சு. போலியோ அட்டாக்னு என்னென்னமோ சொன்னாங்க. நானும் யார் யார்கிட்டயோ உதவி வாங்கி ட்ரீட்மென்ட் கொடுத்துப் பார்த்தேன். ஆனா, சரி பண்ண முடியலை.

பிள்ளை எப்படி இருந்தாலும் நல்லபடியா வளர்க்க வேண்டியது பெத்தவங்க கடமைன்னு நம்பிக்கையோடு வளர்க்க ஆரம்பிச்சோம். என்ன பண்ணப்போறோம்னு தெரியாம இருந்த அவளுக்கு ஒரு தெளிவான பாதை கிடைச்சுருக்கு. ஒலிம்பிக்கில் ஜெயிக்கிறதுதான் லட்சியம்னு சொல்றா. அதில் அவளை பயணப்பட வைக்க வேண்டியது எங்க கடமை.

ஆனால், அதுக்கான வசதி இல்லை. கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்தோம். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க தரமான சாதனங்கள் அவசியம். அதுக்கு ரெண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். `அவ்வளவு தொகை கொடுக்க முடியாது. முடிஞ்ச அளவு கொடுக்கிறோம்’னு கலெக்டர் சொல்லியிருக்கிறார்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism