Published:Updated:

உலக வில்வித்தை போட்டி: ஜோடியாக தங்கம் வென்று அசத்திய அட்டானு தாஸ் - தீபிகா குமாரி தம்பதி!

அட்டானு தாஸ்-தீபிகா குமாரி
News
அட்டானு தாஸ்-தீபிகா குமாரி ( Photo: Twitter/@worldarchery )

நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெப் வான் டென் பெர்க் மற்றும் கேப்ரிலா ஷ்லோஸர் ஜோடியை 5-3 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இச்சாதனையை இவர்கள் இருவரும் நிகழ்த்தியுள்ளனர்.

பொதுவாக மண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தங்கள் காதலால் வாழ்க்கையை ஜெயிப்பது வழக்கம். ஆனால், தங்கள் விளையாட்டுத் திறமையை ஒன்றாகக் காட்டி அதன்மூலம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்றிருக்கின்றனர் ஓர் இளம் தம்பதி.

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டிகள் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. இதில்தான் கலப்பு ரீகர்வ் குழு பிரிவில் (mixed recurve team ) கணவன், மனைவியான அட்டானு தாஸ் - தீபிகா குமாரி ஜோடி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெப் வான் டென் பெர்க் மற்றும் கேப்ரிலா ஷ்லோஸர் ஜோடியை 5-3 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இச்சாதனையை இவர்கள் இருவரும் நிகழ்த்தியுள்ளனர்.

தீபிகா குமாரி
தீபிகா குமாரி
Photo: Twitter/@worldarchery

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு வருடக் காதலுக்குப் பிறகு கடந்த வருடம் அட்டானு தாஸும் தீபிகாவும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர். திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே கணவன், மனைவியாக இணைந்து உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்றிருப்பது இந்திய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

``இந்த வெற்றியின் மூலம் நாங்கள் `Made for each other' என்று தோன்றுகிறது. அதனால்தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தாங்கள் தங்கம் வென்றிருப்பது குறித்து மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் அட்டானு தாஸ் தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, பெண்களுக்கான ரீகர்வ் குழு பிரிவிலும் இந்தியா அசத்தியுள்ளது. தீபிகா குமாரி, அன்கிதா பகத் மற்றும் கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்தியப் பெண்கள் குழு இறுதிப் போட்டியில் மெக்சிகோவைத் தோற்கடித்து தங்கத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

கலப்பு இரட்டையர் மற்றும் குழு வில்வித்தைப் போட்டிகளில் தங்கம் வென்ற தீபிகா குமாரி தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

இப்படி உலக வில்வித்தைப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியதன் மூலம் பெண்களுக்கான உலக வில்வித்தைத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் தீபிகா அடைந்துள்ளார்.