நடப்பு ஆண்டிற்கான டேவிஸ் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சின் செர்பியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது குரோஷியா.

ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின் முதலிய நாடுகளில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 18 நாடுகள் பங்கேற்றன. இதில் சென்ற ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகள் இவ்வாண்டிற்கு நேரடியாக தகுதிபெற, வைல்ட் கார்டு மூலம் இரண்டு அணிகளும், தகுதிச் சுற்றின் மூலம் 12 அணிகளும் தகுதிபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதல் சுற்றில் ஆறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மூன்று அணிகளும் ரவுண்ட் ராபின் முறையில் மோதின. இதில் புள்ளிகள் அடிப்படையில் 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன. மேலும் ஜெர்மனி, குரோஷியா, ரஷ்யா மற்றும் செர்பிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா குரோஷியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் உலகின் முதன்மை வீரரான ஜோகோவிச் இடம்பெற்றிருந்த போதிலும் செர்பியா அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை.

இந்த ஆட்டத்தின் முதல் ரவுண்டில் செர்பியாவின் தூசன் லஜோவிச்சை 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தனார் குரோஷியாவின் போர்னா கோஜோ. அதை மரின் சிலிச்க்கு எதிரான அடுத்த ரவுண்டில் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி மீண்டும் சமன்செய்தார் ஜோகோவிச்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் இறுதி ரவுண்டான டபுள்ஸ் ஆட்டத்தில் அவரால் செர்பிய அணியை மற்றுமொரு முறை காப்பாற்ற முடியவில்லை. உலகின் முதல் நிலை ஜோடியான நிகோலா மெக்டிக்-மேட் பேவிக் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஃபிலிப் பிராஜினோவிச்சை 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றினர். மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்வீடனை வீழ்த்திய டேனில் மெட்வடேவ் அடங்கிய ரஷ்ய அணியும் பிரிட்டனை வீழ்த்திய ஜெர்மனி அணியின் இன்று இரவு விளையாடவுள்ளன.

இப்போட்டியை வெல்லும் அணி நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் குரோஷியாவோடு மோதும். டென்னிஸின் உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் ?!