Published:Updated:

சீன அரசியல் பிரமுகர் மீது பாலியல் புகார் தெரிவித்த டென்னிஸ் வீராங்கனையைக் காணவில்லை! #PengShuai

Peng Shuai

"ஒரு பாறையில் மோதும் முட்டையைப்போல், நெருப்பின்மீது பாயப்போகும் அந்துப்பூச்சியைப்போல், இது என்னையே அழிக்கக்கூடும் என்று தெரிந்தாலும், நான் உண்மையைச் சொல்வேன்" என்று தைரியமாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் பங் ஷூவே!

சீன அரசியல் பிரமுகர் மீது பாலியல் புகார் தெரிவித்த டென்னிஸ் வீராங்கனையைக் காணவில்லை! #PengShuai

"ஒரு பாறையில் மோதும் முட்டையைப்போல், நெருப்பின்மீது பாயப்போகும் அந்துப்பூச்சியைப்போல், இது என்னையே அழிக்கக்கூடும் என்று தெரிந்தாலும், நான் உண்மையைச் சொல்வேன்" என்று தைரியமாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் பங் ஷூவே!

Published:Updated:
Peng Shuai

சீனாவின் முக்கிய அரசியல் பிரமுகர்மீது பாலியல் புகார் தெரிவித்த டென்னிஸ் வீராங்கனை பங் ஷூவே காணவில்லை என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை பற்றி பொதுவெளியில் சொன்ன பிறகு அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது பற்றி யாருக்கும் தெரியாததால், அவர் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீனாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பங் ஷூவே. 35 வயதான இவர், இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர். இரண்டு இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும் வென்றிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த கத்தார் ஓப்பனோடு புரொஃபஷனல் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு சீன சமூக வலைதளமான வெய்போவில் சுமார் 1500 வார்த்தைகளில் ஒரு பதிவிட்டிருந்தார் ஷுவே. அதில், சீனாவின் முன்னாள் vice premier ஜென் ஜெயலாய் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறியிருந்தார்.

Peng Shuai's deleted post
Peng Shuai's deleted post

அந்தப் பதிவில் தன்னை ஜெயலாய் எப்படியெல்லாம் துன்புறுத்தினார் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார் ஷூவே. "நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனா என்பதை அடிக்கடி நானே கேட்டுக்கொள்கிறேன். நடந்துகொண்டிருக்கும் சவம் போல் உணர்கிறேன்" தன் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவில், 2013 முதல் 2018 வரை சீனியர் vice premier என்ற உயரிய பதவியை வகித்தவர். சீன அதிபருக்கு அடுத்த பதவி, premier என்பது. நம்மூரில் உள்துறை அமைச்சர் போல். vice premier பொறுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்கூட பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுள் முதன்மையானவராக இருந்தவர் ஜென் ஜெயலாய். இப்போது அவருக்கு வயது 75.

Zhang Gaoli
Zhang Gaoli

ஒரு அரசியல் பிரமுகர்மீது... அதுவும் சீனாவில் ஒரு பெரிய வகித்தவர் மீது குற்றம் சுமத்துவது எப்படியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஷூவே அறிந்திருக்கிறார். அதனால், "ஒரு பாறையில் மோதும் முட்டையைப் போல், நெருப்பின் மீது பாயப்போகும் அந்துப்பூச்சியைப்போல், இது என்னையே அழிக்கக்கூடும் என்று தெரிந்தாலும், நான் உண்மையைச் சொல்வேன்" என்று தைரியமாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிவிட்டர் போன்ற வலைதளமான வெய்போவிலிருந்து அடுத்த 20 நிமிடங்களிலேயே அந்தப் பதிவு அகற்றப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டதால், அது மேலும் அதிகம் பகிரப்பட்டது. சீனாவில் சமூக வலைதளங்களை அரசு சென்ஸார்ஷிப் செய்வதால், பங் ஷூவேவின் பெயர், டென்னிஸ் என்ற வார்த்தைகள்கூட இன்டர்நெட்டில் முடக்கம் செய்யப்பட்டன.

Peng Shuai
Peng Shuai

ஒரு சீன அரசியல் பிரமுகர்மீது இப்படியொரு குற்றச்சாட்டு எழுவது அங்கு சாதாரணமாக நிகழும் விஷயம் இல்லை. இரும்புக்கரம் கொண்ட அரசு அதற்குத் துளியும் இடம் கொடுப்பதில்லை. ஷூவே ஒரு பிரபல டென்னிஸ் வீராங்கனை என்பதால் இந்த விஷயம் உலக மீடியாவின் கண்களில் பட்டுவிட்டது. ஆனால், இப்போது ஷூவேவே யார் கண்களிலும் படாமல் இருக்கிறார்.

ஷூவே தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்குப் பிறகு இதுவரை யாராலும் அவரைப் பார்க்கவோ, தொடர்புகொள்ளவோ முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் ஷூவேவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதை பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார் உலக பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (WTA) தலைவர் ஸ்டீவ் சைமன்.

"text, ட்வீட், வாய்ஸ் என தொடர்புகொள்ள எத்தனையோ முறைகள் இருக்கின்றன. வீ-சேட், வாட்ஸ்அப் கால் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும், எதன் மூலம் பங் ஷூவேவைத் தொடர்புகொள்ள முடியவில்லை" என்று அவர் கூறினார்.

அவர் அப்படிக் கூறிய நிலையில், ஷூவேவிடமிருந்து சைமனுக்கு ஒரு இ-மெயில் வந்திருக்கிறது. அதில், "WTA இணையதளத்தில் சொல்லப்பட்ட செய்திகள் என்னிடம் உறுதிபடுத்தப்படாமல் வெளியிடப்பட்டிருக்கின்றன. நானொன்றும் காணாமல் போகவில்லை. என் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இதற்குமேல் என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வெளியிடுவதானால் முதலில் என்னிடம் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த மின்னஞ்சலே அவர் அனுப்பியதாக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார் சைமன். "இந்த இ-மெயில் ஷூவே அனுப்பியது என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று கூறியிருக்கும் அவர், "ஒரு மிகப்பெரிய சீன அரசியல்வாதி கொடுத்த பாலியல் துன்புறுத்தலை இந்த உலகத்துக்குத் தெரியப்படுத்தி தன் தைரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷூவே. அவர் பாதுகப்பாக இருக்கிறார் என்பதை நாம் உறுதிபடுத்தவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 2022-ல் சீனாவில் நடத்தவிருக்கும் 10 தொடர்களையும் ரத்து செய்துவிடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

ஷூவேவின் பிரச்னை குறித்து பல விளையாட்டு நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். செரீனா வில்லியம்ஸ், நயோமி ஒசாகா போன்ற டென்னிஸ் வீரர்கள் மட்டுமல்லாது, பார்சிலோனா கால்பந்து வீரர் ஜெரார்ட் பீக்கே போன்றவர்களும் ஷூவேவின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியிருக்கின்றனர். Where is Peng Sheuai இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism