Published:Updated:

`ரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் போட்டி!' - பல்கேரியாவுக்கு ஐரோப்பிய கால்பந்து சங்கம் தண்டனை

EURO 2020 போட்டியில் பல்கேரிய அணி பங்குபெற முடியாத அளவிற்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எளிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கால்பந்து மைதானம்
கால்பந்து மைதானம்

விளையாட்டுப் போட்டி என்றால் நமக்கு ஞாபகம் வருவது மைதானமும் கரகோஷம் செய்யும் பார்வையாளர்களும்தான். தற்போது, பல்கேரியாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட குழுவிற்கு லாத மைதானத்தில் ஒருமுறை விளையாட வேண்டுமென்று யூஇஎஃப்ஏ (UEFA) என்ற ஐரோப்பிய கால்பந்து சங்கம் தண்டனை வழங்கியுள்ளது.

ரசிகர்கள்
ரசிகர்கள்

பல்கேரியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து 6 -0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தபோது, பல்கேரிய ரசிகர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த கருப்பு நிற போட்டியாளர்களைப் பார்த்து நாஜி சல்யூட் அடித்தும், குரங்கு போல் சத்தம் ஏற்படுத்தியும் ஏளனம் செய்தனர். பல்கேரிய ரசிகர்களின் இந்தச் செயலுக்கு, போட்டியின் இடையே நடுவர் இரண்டு முறை கண்டனம் தெரிவித்தார். இதற்கு முன் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் இதுபோன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா?''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்

ரசிகர்களின் இந்தச் செயலால், தொடரில் இருந்து முழுவதுமாக பல்கேரியா வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்கேரியா அணிக்கு விநோத தண்டனையை ஐரோப்பிய கால்பந்து சங்கம் விதித்திருக்கிறது. அதாவது, பல்கேரியா அணி, தான் விளையாடும் அடுத்த போட்டியை ரசிகர்கள் யாரும் இல்லாத காலியான மைதானத்தில் விளையாட வேண்டும் என்றும், அபராதமாக 85,000 யூரோக்களைச் செலுத்த வேண்டும் என்றும் தண்டனை விதித்துள்ளது. இதில், இரண்டாவது முறையாக இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயல்பட்டதற்காக, பல்கேரிய கால்பந்து அமைப்புக்கு 55,000 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள்
ரசிகர்கள்

EURO 2020 தொடரில் பல்கேரிய அணி பங்குபெற முடியாத அளவுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , எளிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மீண்டும் இவர்கள் இதுபோன்று நடந்துகொண்டால், இரண்டு ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லா மைதானத்தில் விளையாட வேண்டும் என்றும், மேலும் இதுபோல் இழிவான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் UEFA கூறியுள்ளது. நவம்பர் 17-ம் தேதி செக் குடியரசில் நடைபெறும் போட்டியில், ரசிகர்கள் இல்லா மைதானத்தில் பல்கேரியா அணி விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.