Published:Updated:

`31 வருடங்களுக்கு முன்பு நடந்த கொடுமை அது!' - பென் ஸ்டோக்ஸ்க்கு நேர்ந்த சங்கடம்

ben stokes
ben stokes

ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாக 1988-ம் ஆண்டு ஸ்டோக்ஸின் தாய் டெப்புக்கும் அவரின் முதல் கணவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் மீடியம் பௌலர் ஆன பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக மாறி வருகிறார். உலகக் கோப்பைத் தொடர், ஆஷஸ் என இரண்டு தொடர்களிலும் ஜொலித்த ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியை உச்சத்தில் நிற்க வைத்துள்ளார். ஆனால், தற்போது அவருக்கு எதிர்பாராதவிதமான ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது. அதற்குக் காரணம் இங்கிலாந்தின் டெய்லி பத்திரிகையான `சன்' வெளியிட்ட முதல்பக்க கட்டுரைதான்.

ben stokes
ben stokes

இங்கிலாந்து அணிக்காக விளையாடினாலும் ஸ்டோக்ஸின் சொந்த நாடு நியூசிலாந்து. 31 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் ஸ்டோக்ஸின் தாய் சந்தித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு `சன்' நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாக 1988-ம் ஆண்டு ஸ்டோக்ஸின் தாய் டெப்புக்கும் அவரின் முதல் கணவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளை அவரின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

`அசுர’ ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் 5 பெஸ்ட் இன்னிங்ஸ்!

இதன்பிறகுதான் டெப் ஜெரார்ட்டை இரண்டாவது திருமணம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டோக்ஸ் பிறந்துள்ளார். இந்தச் சம்பவத்தை 31 ஆண்டுகள் கழித்து தற்போது சன் கட்டுரையாக வெளியிட, அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஸ்டோக்ஸ்.

``30 வருடங்களுக்கு முன்பு நடந்த என் குடும்பத்தின் தனிப்பட்ட, நாங்கள் மறக்க நினைக்கும் வேதனையான விஷயத்தை இன்று வெளியிட்டுள்ளார்கள். என் குடும்பத்தின் சூழ்நிலைகளை, உணர்வுகளை அவமதிப்பு செய்யும் எதையும் என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ben stokes
ben stokes

இந்தக் கொடுமையான நிகழ்வால் ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என் குடும்பம் உழைத்துள்ளது. தனிப்பட்ட, அதிர்ச்சிகரமான இந்த நிகழ்வை இத்தனை ஆண்டுகளாகத் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தோம். ஆனால், எங்களின் தனிப்பட்ட சோகத்தை, உணர்வை பரபரப்புக்காகத் தங்களின் முதல்பக்க கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள். அதுவும் தனியுரிமையை சிதைக்கும் வகையில் எனது பெயர் மற்றும் என் பெற்றோர்களைத் தொடர்புபடுத்தி இருப்பது அருவருக்கத்தக்க செயல். பிரபலமாக இருப்பதால் எனது சுயவிவரம் பொதுவெளியில் எனக்கு விளைவுகளைத் தருகிறது என்பதை நான் அறிவேன்.

ஆஷஸின் சாம்பலில் இருந்து இங்கிலாந்தை உயிர்ப்பித்த பென் ஸ்டோக்ஸ்! #Ashes

அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். ஆனால், அதுவே என் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என என் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை ஆக்கிரமிக்கும் என்றால் அதைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். தங்களது சொந்த வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. இந்தக் கட்டுரை வாழ்நாள் முழுவதும் குறிப்பாக, என் அம்மாவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நிறைய தவறுகளுடன் தனிப்பட்ட உயிர்களுக்கு ஏற்படும் பேரழிவைப் பொருட்படுத்தாமல் தங்களது விற்பனையைப் பெருக்கிக்கொள்ள எடுக்கும் ஒரு யுக்தியாகவே இப்படியான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள்.

ben stokes
ben stokes

இது முற்றிலும் ஒழுங்கற்றது. எப்படியிருந்தாலும் இந்த விஷயம் இப்போது பகிரங்கமாகிவிட்டது. தயவுசெய்து இனியாவது என் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என வேதனையுடன் கூறும் பென் ஸ்டோக்ஸ், தன் குடும்பத்துக்கு நேர்ந்த இந்தக் கொடுமையான நிகழ்வை இதுவரை எந்தப் பொதுவெளியிலும் பேசியது கிடையாது.

அடுத்த கட்டுரைக்கு