Published:Updated:

`யாருக்காகவும் சமரசம் செய்யமாட்டோம்; தண்டனை நிச்சயம்!’- விளக்கமளித்த டி.என்.சி.ஏ

நடைபெற்று முடிந்த இந்த போட்டிகளில் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு இதனை கண்டறிந்துள்ளது.

Chepauk Super Gillies
Chepauk Super Gillies

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) போட்டிகள் ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் போன்ற வீரர்கள் பங்கேற்று ஆடினர். சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நடைபெற்று முடிந்த இந்த போட்டிகளில் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Chepauk Super Gillies
Chepauk Super Gillies

பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு இதனை கண்டறிந்துள்ளது. இதில்,இந்திய வீரரும், ஐ.பி.எல் குழுவைச்சேர்ந்தவரும், ராஞ்சி தொடரின் பயிற்சியாளர்களின் ஒருவருமான முக்கிய நபருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, தமிழ்நாடு பிரீமியர் லீக் சேர்மன் பி.எஸ்.ராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ``2019 டிஎன்பில் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்க தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் விரும்புகிறது. அதன்படி, 2016-ம் ஆண்டு தொடங்கிய டி.என்.பி.எல் அமைப்பு, ஐசிசி மற்றும் பிசிசிஐ வகுத்துள்ள கடுமையான விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. ஊழல்தடுப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் இயங்கிவருகிறது. டி.என்.பி.எல் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குட்பட்டு சூதாட்டம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது குறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் குழு ஒன்று அமைக்கபட்டுள்ளது.

statement
statement

அந்த குழு, குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை சமர்பிக்கும். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக டிஎன்சிஏ சார்பில் அணிகள் தொடர்பாகவும், வீரர்கள் குறித்தும், அதிகாரிகள் குறித்தும் கருத்து தெரிவிக்க முடியாது. மேலும், சட்டத்திட்டங்களுக்கு எதிராக நெறிமுறைகளுக்கு முரணாண வகையில் யார் செயல்பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.