ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பின் அவர் பங்குபெறும் மற்ற தொடர்களையும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். போட்டியைத் தொலைக்காட்சியில் காண முடியாத சூழலில் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் அவர் குறித்தான செய்திகள் கவனம் பெறுகின்றன. ஒலிம்பிக் பதக்கம் அவர் மட்டுமின்றி தடகளத்தின் மீதான கவனத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.

இந்நிலையில் நாளை உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்குபெறுகின்றனர். மேலும் 18 வது முறை நடக்கும் இந்தத் தொடர் முதல் முறையாக அமெரிக்காவில் நடக்கிறது. இந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தொடரில் இந்தியா சார்பாக பங்கு பெறும் வீரர்கள்:
ஆண்கள் பிரிவு:
Javelin Throw:
நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ்
Shot put:
தஜிந்தர்பால் சிங் தூர்
20 km race walk:
ராகுல் ரோஹிலா, சந்தீப் குமார்
Long jump:
முரளி ஶ்ரீசங்கர், ஜெஸ்வின் அல்ட்ரின்,

Triple Jump:
அப்துல்லா அபுபக்கர், எல்டோஸ் பால்
பிரவீன் சித்ரவேள்
3000m Steeplechase:
அவினாஷ் சாப்லே
400m hurdles:
M P ஜபீர்
Men's 4*400மீ Relay:
நிர்மல் டாம், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ், முகமது அனாஸ் யாஹியா
பெண்கள் பிரிவு:
Discus throw:
கமல் பிரீட் கவுர், சீமா புனியா
20km race walk:
பிரியங்கா கோஸ்வாமி
Javelin throw:
அனுராணி
200m sprint :
S தனலட்சுமி
3000m steeplechase:
பருள் சவுதுரி
இதுவரை பலமுறை நடந்துள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சார்பாக அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே பதக்கம் வென்று உள்ளார். அவர் 2003 இல் பாரிசில் நடந்தத் தொடரில் நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார். அதன் பின் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. நீரஜ் சோப்ரா தலைமையில் செல்லும் இந்திய அணி இந்த முறை அந்த நீண்ட கால காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவர்கள்:
1) நீரஜ் சோப்ரா
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பின் நீரஜ் சோப்ரா சமீபத்தில் தான் மீண்டும் களத்திற்கு வந்தார். பலரின் எதிர்பார்ப்புக்கு இடையே பங்கு பெற்ற நீரஜ் சோப்ரா குறுகிய காலத்தில் இரண்டு முறை அவரது தேசிய சாதனையை அவரே முறியடித்தார். இதனால் இந்த தொடரிலும் அவர் நிச்சயம் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் வெல்ல வாய்ப்புகள் அதிகம்.

2) முரளி ஸ்ரீ சங்கர்
ஏப்ரலில் நடந்த பெடரேசன் கோப்பையில் 8.36 மீ நீளம் தாண்டிய இவரிடமும் பதக்கம் எதிர்பார்க்கலாம். தொடர்ந்து நன்றாக விளையாடி வரும் இவர் கிரீசில் நடந்த ஒரு தொடரில் 8.31 மீ வரை நீளம் தாண்டியுள்ளர். இந்தியாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் 8.23 மீ நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றவர் இவர்.

தமிழகத்திலிருந்து ஜெஸ்வின் அல்ட்ரின், பிரவீன் சித்ரவேல், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ், தனலட்சுமி தொடரில் பங்குபெற உள்ளதாகப் பட்டியல் வெளியானது. ஆனாலும் 2020 ஒலிம்பிக்ஸ் சென்று வந்த தனலட்சுமி விசா பிரச்னை காரணமாக பங்குபெறப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.