Published:Updated:

``அர்ஷ்தீப் மீதான விமர்சனங்களை நேர்மறையாகத்தான் எடுத்துக்கொள்கிறோம்"- அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர்

அர்ஷ்தீப் சிங், அவரது பெற்றோர்

அர்ஷ்தீப் சிங் மீதான விமர்சனங்கள் குறித்து அவரின் பெற்றோர் தனியார் செய்தி நிறுவனத்தின் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளனர்.

``அர்ஷ்தீப் மீதான விமர்சனங்களை நேர்மறையாகத்தான் எடுத்துக்கொள்கிறோம்"- அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர்

அர்ஷ்தீப் சிங் மீதான விமர்சனங்கள் குறித்து அவரின் பெற்றோர் தனியார் செய்தி நிறுவனத்தின் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளனர்.

Published:Updated:
அர்ஷ்தீப் சிங், அவரது பெற்றோர்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தன் கைக்கு வந்த கேட்ச்சைத் தவறவிட்டதுதான் காரணம் என சிலர் அவருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் சிலர், அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி என்று கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இதுமட்டுமில்லாமல் விக்கிப்பீடியாவில் அர்ஷ்தீப் சிங்கின் நாடு இந்தியா என்பதை அகற்றி காலிஸ்தான் எனக் குறிப்பிடபட்டிருந்தது பெரும் சர்ச்சயைக் கிளப்பியது. இதனைத்தொடர்ந்து இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் விக்கிப்பீடியா நிறுவன அதிகாரிகளை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பிருந்தது. இர்பான் பதான், முகமது ஷமி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் கிரிகெட் வீரர்கள் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளனர். அதில் அர்ஷ்தீப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங் கூறுகையில், "நாங்கள் போட்டியைப் பார்க்கச் சென்றோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். அனைவருமே தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அது நடக்காதபோது ரசிகர்கள் தங்கள் வார்த்தைகள் மூலம் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் கோபத்தை நாங்கள் நேர்மறையாகதான் எடுத்துக்கொள்கிறோம் என்றார். இதனைத்தொடர்ந்து அர்ஷ்தீப் சிங்கின் அம்மா பேசுகையில், "பேசுவதுதான் மக்களின் வேலை. அவர்கள் ஒரு வீரரை விமர்சித்தால் அவர்களை நேசிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அர்ஷ்தீப்பிற்கு எதிராக வரும் கருத்துகளை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அர்ஷ்தீப்புடன் தாங்கள் பேசியதாகவும் தற்போது இணையத்தில் வரும் கருத்துக்களால் அவர் பாதிக்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக இலங்கைக்கு எதிரான அடுத்தப் போட்டிக்கு அர்ஷ்தீப் சிங் தயாராகி வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.