Published:Updated:

ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா ஹாக்கி அணி; இந்தியா நான்காவது இடம்!

Argentina Junior Hockey Team
News
Argentina Junior Hockey Team

12 வது ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில், ஜெர்மனி அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா.

ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில், நவம்பர் 24 முதல் டிசம்பர் 5 வரை 2021 ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. ஜனவரி 1, 2000 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். உலகக் கோப்பையை நடத்திய இந்தியா தானாகவே தகுதி பெற்றது. மீதமுள்ள 15 அணிகளும் 5 தனித்தனி கண்டங்களில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளிலிருந்து தகுதி பெற்றன.

இந்த 16 அணிகளும் குரூப்பிற்கு 4 அணிகள் வீதம் 4 குழுக்களாக போட்டியிட்டன. குரூப் 1-ல் பெல்ஜியம் மற்றும் மலேசியா, குரூப் 2-ல் இந்தியா & பிரான்ஸ், குரூப் 3-ல் நெதர்லாந்து & ஸ்பெயின், குரூப் 4-ல் ஜெர்மனி & அர்ஜென்டினா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த எட்டு அணிகளில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் நடந்த அரையிறுதி சுற்றில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியும், பிரான்சுக்கும் அர்ஜென்டினாக்கும் நடந்த போட்டியில் பெனால்டியில் அர்ஜென்டினாவும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

Argentina Junior Hockey Team
Argentina Junior Hockey Team

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவும் ஜெர்மனியும் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினா ஜெர்மனியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியாவும் பிரான்ஸும் மோதின. இப்போட்டியில் இந்தியா பிரான்ஸ் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த வீரருக்கான விருதை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிமோதி கிளமெண்ட் பெற்றார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மைல்ஸ் பக்கன் 18 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை பெற்றார். சிறந்த கோல்கீப்பராக ஜெர்மனியின் ஆண்டன் பிரிக்மேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபேர் ப்ளே விருதை சிலி அணி கைப்பற்றியது.