Published:Updated:

“வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்!”

Dinesh Karthik, Dipika Pallikal
பிரீமியம் ஸ்டோரி
Dinesh Karthik, Dipika Pallikal

‘`இந்தியப் பெண்களுக்கு ஃபிட்னஸ் எவ்ளோ முக்கியம்னு நினைக்கிறீங்க?’’

“வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்!”

‘`இந்தியப் பெண்களுக்கு ஃபிட்னஸ் எவ்ளோ முக்கியம்னு நினைக்கிறீங்க?’’

Published:Updated:
Dinesh Karthik, Dipika Pallikal
பிரீமியம் ஸ்டோரி
Dinesh Karthik, Dipika Pallikal

ந்திய ஸ்போர்ட்ஸின் ஹிட்ஹாட் ஜோடி தீபிகா - தினேஷ் கார்த்திக். ஸ்குவாஷ், கிரிக்கெட் என இரண்டிலும் அசத்தும் இந்த இருவரையும் ஒன்றாக இணைத்தது இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஃபிட்னஸ் ட்ரெய்னர் பாசுவின் ப்ரைமல் பேட்டன்ஸ் ஜிம். இந்த ஜிம்மில்தான் தீபிகா - தினேஷின் காதல் மலர்ந்தது. இந்த ஜிம்மின் 10-ம் ஆண்டு விழாவில் இவர்கள் இருவரையும் சந்தித்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`உங்க கரியரும், திருமண வாழ்க்கையும் எப்படிப் போயிட்டிருக்கு?’’

தீபிகா: “ஒரு வருஷமா ஸ்குவாஷ் விளையாடுறதுல இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். என் கரியருடைய அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கான ட்ரெய்னிங்ல முழுசா கவனம் செலுத்திட்டிருக்கேன்.”

 “வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்!”

‘`உங்க ஜெர்ஸி நம்பர் 21, உங்க மனைவி தீபிகாவுடைய பிறந்த தேதியைக் குறிப்பதாகச் சொல்றாங்களே?’’

தினேஷ்: “முதல்ல என்னுடைய ஜெர்ஸி நம்பர் 19. அதை இப்போ உமேஷ் யாதவ் வெச்சிருக்கார். அதனால நான் மாத்த வேண்டியதா இருந்தது. அதனால தீபிகாவுடைய பிறந்த தேதி 21 என்பதையே வெச்சிக்கிட்டேன். வங்கதேசத்துக்கு எதிரா கடைசி பால்ல சிக்ஸர் அடிச்சப்போ 21-ம் நம்பர் ஜெர்ஸிதான் போட்டிருந்தேன்.”

‘`உங்க கரியரின் ஆரம்பத்துலேயே அர்ஜுனா, பத்மஸ்ரீ மாதிரியான உயரிய விருதுகளை வாங்கிட்டீங்க. இப்போ உங்களுடைய இலக்கு என்னவா இருக்கு?’’

தீபிகா: “ஸ்குவாஷ்னு இல்லை, பொதுவா என் வாழ்க்கையிலேயே எனக்கு நிறைய இலக்குகள் இருக்கு. விருதுகள் கிடைச்சுட்டா, நாம சாதிச்சிட்டோம்னு அர்த்தமில்லை. நான் இன்னும் ஸ்குவாஷ் மைதானத்தில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அடுத்தடுத்த வருடங்கள்ல என் கரியர்ல இன்னும் முன்னேறுவேன்னு நம்பிக்கை இருக்கு.”

‘`நீங்க கேப்டனா இருந்து வழிநடத்தின சையது முஷ்டாக் அலி டிராஃபி ஃபைனல்ல தமிழ்நாடு ஒரு ரன் வித்தியாசத்துல தோல்வியடைஞ்சது உங்களை பாதிச்சதா?’’

தினேஷ்: “அந்த சீரிஸ் முழுக்க நாங்க விளையாடிய விதம், எங்களுடைய கன்சிஸ்டன்ஸி எல்லாமே ரொம்ப நல்லாருந்தது. ரொம்ப சந்தோஷமா உற்சாகமா ஃபைனல்ஸ் வந்தோம். ஆனா, ஒரு ரன்ல டிராஃபியைத் தவறவிட்டது ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா, அடுத்து ரஞ்சி இருக்கு. தமிழ்நாட்டு டீமோட இப்போதைய இலக்கு மீண்டும் ரஞ்சியைத் தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக்குறதுதான்.”

‘`இந்தியப் பெண்களுக்கு ஃபிட்னஸ் எவ்ளோ முக்கியம்னு நினைக்கிறீங்க?’’

தீபிகா: “பெண்கள்னு இல்லை, பொதுவாவே எல்லோருக்குமே ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். குறிப்பா, விளையாட்டுத் துறையில் இருக்கிறவங்களுக்கு ஃபிட்னஸ்தான் எல்லாமே. கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி ஃபிட்னஸ் பத்தி அவ்வளவா எந்தப் பெண்களும் பேசலை. ஆனா, இப்போ எல்லோரும் ஃபிட்டா இருக்கணும்னு நினைக்கிறாங்க. வரவேற்கவேண்டிய மாற்றம் இது.”

‘`இந்திய கிரிக்கெட் அணியில் ஃபிட்னஸ் ஃப்ரீக் யார்?’’

தினேஷ்: “டீம்ல எல்லோருமே ஃபிட்னஸ் வெறி பிடிச்சு அலையுறாங்க. இந்த ஃபிட்னஸ் வெறியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோனவர் கேப்டன் விராட் கோலிதான். பும்ராவுக்கு ஆரம்பத்துல பிசிக்கல் ஃபிட்னஸ் எல்லாம் இல்லை. ஆனா, ஒரு இன்ஜுரி ஆன பிறகு, ஃபிட்னஸ் எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டார். வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாட்டு டீமுக்கு வரும்போது 16 வயசு. இப்போ கிரவுண்ட்ல ப்ராக்டீஸ் முடிச்சவுடன், ஜிம், அப்புறம் ஸ்விம்மிங்னு ஃபிட்னஸுக்கு அவ்ளோ நேரம் செலவு பண்றான். விளையாட்டு வீரனுக்கு ஃபிட்னஸ்தான் முக்கியம்.’’

‘`விளையாட்டு வீராங்கனையாக உங்களுக்கு இருக்கிற மென்ட்டல் பிரஷரை எப்படிக் கையாளுறீங்க?’

தீபிகா: “வெற்றி, தோல்வி எல்லாம் தாண்டி நான் என் விளையாட்டை ரொம்ப என்ஜாய் பண்ணி விளையாடுறேன். அதுவே எனக்கு மென்ட்டல் பிரஷர் வராமல் பார்த்துக்கும். விளையாட்டை நேசிக்கிறதுதான் ரொம்பவே முக்கியம்.’’

‘`கிரிக்கெட்டர்ஸ் நிறைய பேர் மனநலப் பிரச்னைகளால் பிரேக் எடுக்குறாங்க. மென்ட்டல் ஃபிட்னஸுக்கு என்ன பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்க?’’

தினேஷ்: “உங்களைச் சுத்தி என்ன மாதிரியான ஆட்கள் இருக்காங்க, அவங்க உங்ககிட்ட என்ன பேசுறாங்கன்னு இது எல்லாம் சேர்ந்துதான் உங்க மனநிலையைத் தீர்மா னிக்கும்.

 “வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்!”
“வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்!”

அதனால எப்பவும் பாசிட்டிவான மக்களுடன் இருப்பது ரொம்பவே அவசியம். இப்போ சோஷியல் மீடியா வளர்ந்துடுச்சு. அதை எவ்ளோ பயன்படுத்தணும், எவ்ளோ தூரம் தள்ளி இருக்கணும்னு புரிஞ்சிக்கணும்.’’

‘`உங்க கரியருக்கு தினேஷ் கார்த்திக் எவ்ளோ உறுதுணையா இருக்கார்?’’

தீபிகா: “நாங்க ரெண்டு பேருமே அவங்கவங்க கரியரை நல்லா ஹேண்டில் பண்றோம். விளையாட்டைப் பொறுத்தவரை அவருக்குத் தனியா டீம் இருக்கு. எனக்குத் தனியா டீம் இருக்கு. அவங்க கூடதான் நாங்க விளையாட்டைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். ஃபேமிலி டைம்ல விளையாட்டைப் பத்திப் பெரிசா பேச மாட்டோம். எங்களுக்கான நேரத்துல ரொம்ப சந்தோஷமா இருப்போம்.”

‘`உங்க மனைவிக்குப் பிடிச்ச விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர்னு சொல்லியிருக்காங்க. உங்களுக்குப் பிடிச்ச விளையாட்டு வீராங்கனை யார்?’’

தினேஷ்: “செரினா வில்லியம்ஸ் ரொம்பப் பிடிக்கும். இப்போ பி.வி.சிந்துவுடைய மேட்ச் எல்லாமே பார்த்துடுவேன். செமையா விளையாடுறாங்க. பெண்கள் கிரிக்கெட் டீம்ல மித்தாலி, ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் இவங்க எல்லோரும் சூப்பரா பர்ஃபாம் பண்றாங்க. பெண்கள் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு வர்றாங்க.”

‘`ஐபிஎல் ஆரம்பிக்கப்போகுது. நீங்க உங்க கணவர் தினேஷுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’’

தீபிகா: “நாங்க ரெண்டு பேருமே கொல்கத்தா டீம்கூட நல்லா செட்டாகிட்டோம். அந்த அணியுடைய கோச், உரிமையாளர், மத்த ப்ளேயர்ஸ்னு எல்லோரும் தினேஷுக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் ஐபிஎல் வரும்போது தினேஷும், அவர் டீமும் இந்த வருஷம் என்ன பண்ணப்போறாங்கன்னு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். கொல்கத்தா அணி இந்த வருஷம் அவங்க பெஸ்ட்டைக் கொடுப்பாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.”