Published:Updated:

``தோனியின் இடத்தை நிரப்புவது முடியாத காரியம்!” - ஸ்டீபன் ப்ளெமிங்

``தோனியின் இடத்தை நிரப்புவது முடியாத காரியம்!” - ஸ்டீபன் ப்ளெமிங்

``தோனியின் இடத்தை நிரப்புவது முடியாத காரியம்!” - ஸ்டீபன் ப்ளெமிங்

``தோனியின் இடத்தை நிரப்புவது முடியாத காரியம்!” - ஸ்டீபன் ப்ளெமிங்

``தோனியின் இடத்தை நிரப்புவது முடியாத காரியம்!” - ஸ்டீபன் ப்ளெமிங்

Published:Updated:
``தோனியின் இடத்தை நிரப்புவது முடியாத காரியம்!” - ஸ்டீபன் ப்ளெமிங்

சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. இங்கு நடைபெறும் போட்டிகளில் பெரும்பாலும் எதிரணி தோல்வியையே பரிசாக அளித்துள்ளது சி.எஸ்.கே. ஆனால், சேப்பாக்கத்தில் சி.எஸ்.கேவுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது மும்பை அணி.  2011-ம் ஆண்டு சென்னை அணியை சேப்பாக்கத்தில் மும்பை வீழ்த்தியது அதன்பின்னர் சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ராஜ்ஜியமே தொடர்கிறது.

இதற்கிடையில் தான் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சோக வரலாற்றுக்கு முடிவு கிடைக்குமா எனச் சென்னை ரசிகர்கள் ஏங்கினர். தோனி இந்தப்போட்டியில் ஆடவில்லை என்ற தகவல் அவர்களுக்கு இடியாய் விழுந்தது. ரெய்னா நேற்று தலைமை தாங்கினார். முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 17.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 109 ரன்களில் சுருண்டது. ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் தனது கொடியை பறக்கவிட்டுச் சென்றது மும்பை.

தோல்விக்குப் பின்னர் பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங், ``போட்டியின் முடிவும் அதற்கான விடையும் கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். தோனி சிறந்த தலைவர் மற்றும் சிறப்பான வீரரும்கூட. தோனி இல்லாமல் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளோம். அந்தப் போட்டிகளில் எங்கள் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. தலைவர் இல்லை என்றால் ஒரு வெற்றிடம் அங்கு இருக்கும். வேறொருவரைக் கொண்டு அதை நிரப்ப வேண்டும். தோனி இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம். அதை நிரப்புவது என்பது முடியாத காரியம். நாங்கள் அதில் ஈடுபடவும் இல்லை. அணியைத் தாங்கி நிற்கும் சிறந்த வீரர்.  எங்கள் வீரர்கள் திரும்பத் திரும்ப ஒரே தவறுகளை செய்துவருகின்றனர். தோனி, ஜடேஜாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர்கள் இருவரும் குணமடையவில்லை.  கடந்த 15 நாள்களில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளோம்.  தற்போது நான்கு நாள்களுக்குப் பிறகு டெல்லி அணியுடன் விளையாடவுள்ளோம். நான்கு நாள்கள் ஓய்வு வீரர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். 5 நாள்கள் ஓய்வுதான் மும்பை அணிக்குச் சாதமாக இருந்தது” என்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் மே 1-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism