Published:Updated:

டைம் அவுட்

டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
டைம் அவுட்

டைம் அவுட்

டைம் அவுட்

டைம் அவுட்

Published:Updated:
டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
டைம் அவுட்
டைம் அவுட்

ந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டியின்போது விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் இருந்த இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை பார்ப்பவர் கண்களை உறுத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் எகிறிக் குதித்தது. அந்த முத்திரையைப் பயன்படுத்த ஐ.சி.சி–யிடம் அனுமதி கோரியது பி.சி.சி.ஐ. சர்ச்சை வலுத்தது. `ஒரு புறாவுக்கு அக்கப்போரா’ என்பது போல் `இதென்னடா முத்திரைக்கு வந்த சோதனை’ என சோகம் அடைந்தனர் சிலர். ஐசிசி-யும் நோ சொல்ல, அடுத்தப் போட்டியில், தோனி மீண்டும் எந்த முத்திரையும் இல்லாத கிரிக்கெட் கிளவஸுடனே களமிறங்கினார். #கிளவுஸ் அரசியல்!

டைம் அவுட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபிரெஞ்ச் ஓப்பன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி. தன் முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியை வென்ற இவர், 3 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர். 2014-ம் ஆண்டு டென்னிஸிலிருந்து விலகி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியவர், 2016-ம் ஆண்டுதான் மீண்டும் ராக்கெட்டைக் கையில் எடுத்தார். இப்போது ஒற்றையர் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய சூட்டோடு, பெண்களுக்கான பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக களமிறங்கியிருக்கிறார். #கலக்கல் கண்மணி! 

டைம் அவுட்
டைம் அவுட்

100 மில்லியன் யூரோக்களுக்கு ரியல் மாட்ரிட் அணியால் வாங்கப்பட்டுள்ளார் ஈடன் ஹசார்ட். கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறிய பின் அடிமேல் அடி வாங்கிய ரியல் மாட்ரிட் கிளப்பைக் கரைசேர்க்க, செல்சீ அணியின் இந்த நம்பிக்கை நாயகனை தன் பக்கம் இழுத்துள்ளார் ஜினடென் ஜிடேன். இரண்டு ஆண்டுகளாக இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்த இந்த டிரான்ஸ்ஃபர் ஒரு வழியாக முடிவுக்கு வர, `இதெல்லாம் பத்தாது, எம்பாப்பேவும் வேணும்’ என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் மாட்ரிஸ்டாக்கள். #மாட்ரிட் பரிதாபங்கள்!

டைம் அவுட்

ந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டிக்காக இரு நாட்டு சேனல்களும், மற்றவர்களைக் கலாய்த்து விளம்பரங்கள் வெளியிட்டன. இதில் கடுப்பான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ``எல்லையின் இரண்டுபுறமும் கேவலமாக நடந்துகொண்டிருக்கிறீர்கள். இதுவே போதும்” என்று ட்வீட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். “இந்தப் போட்டிக்குப் போதுமான விளம்பரம் இருக்கிறது. உங்களுடைய குப்பைகளைக் கொட்டி அசிங்கப்படுத்தாதீர்கள்” என்று சானியா பொங்க, பலரும் அதற்கு லைட் பட்டனைத் தட்டியிருக்கிறார்கள்! #தரமான சம்பவம்!

டைம் அவுட்

மெரிக்காவில் நடைபெறும் என்பிஏ கூடைப்பந்துத் தொடரில், 2019 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது கனடாவைச் சேர்ந்த டொரன்டோ ரேப்டர்ஸ். அமெரிக்கா அல்லாத அணி இந்தச் சாம்பியன்ஷிப் வெல்வது இதுவே முதன்முறை. ஓக்லேண்ட்டில் நடந்த இறுதிச் சுற்றில் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் வெல்லும் முனைப்பில் இருந்தது கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ். ஆனால், 114–110 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி சாதித்தது டொரன்டோ ரேப்டர்ஸ். அந்த அணியின் கவய் லியோனர்ட்  இரண்டாவது முறையாக மதிப்பு மிக்க வீரராகத் (Most Valuable Player) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டைம் அவுட்
டைம் அவுட்

பிரான்ஸில் வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது மகளிர் கால்பந்து உலகக் கோப்பை. 24 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், நடப்பு சாம்பியன் அமெரிக்காதான் ஃபேவரிட்ஸ். சம்பளப் பிரச்னை காரணமாக பேலன் டி ஓர் வின்னர் ஆடா ஹெகன்பெர்க் நார்வே அணிக்காக விளையாட மறுத்திருந்த நிலையில், இப்போது போட்டி நடத்தும் ஃபிஃபா மீதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிருபர்களுக்கான வசதிகள் எதுவும் சரியாக இல்லை, தேநீர் கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலையில் இருப்பதாக நிருபர்கள் கண்ணீர் வடித்திருக்கின்றனர். #பணக்கார விளையாட்டுக்கே இந்த நிலையா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism